Pages

Wednesday, 25 July 2012

கடைசி ஆதாம் ஏவாள் - சிந்திக்க வைக்கும் கதை

கடைசி ஆதாம் ஏவாள் - 
சிந்திக்க வைக்கும் கதை  

மனிதனின் இப்போது இருக்கும் குணத்தை யோசிக்க வைக்கும் உணர்ச்சி பூர்வமான கற்பனை கதை.


உலகத்தின் மத்தியில் ..
மனிதனின் அதிகபட்ச அழிவு சக்தி ஆயுதத்தை கொண்டு ஒருவருக்கொருவர் பலப்பரிட்சை செய்து கொண்டிருந்தனர்.மனித உயிர்களை துட்ச்மாக எண்ணி , தன பணம் மற்றும் ஆயுத பலத்தை நிரூபிக்க சுயநலத்தின் உச்சத்தில் , மானுட  தர்மங்களையும் மீறி அந்த போரில்  மனிதர்களை பல விதங்களில் பழி வாங்கிக் கொண்டிருந்தது.

உலக நாடுகளின் கவனம் முழுவது அந்த போரின் முடிவை நோக்கி எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

டி.வி , ரேடியோ , கம்பியூட்டர், மொபைல் போன்ற அனைத்து சாதனங் ளிலும் போரின் கோரத்தை நேரடியாக மற்றும் செய்தி மூலமாக பரபரப்பாக ஒலி, ஒளி வழியாக பரப்பி கொண்டிருந்தது.
அதை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களின் நெஞ்சம் படபடத்துக்கொண்டிருந்தது. வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது.

போர் நடக்கும் நாடுகளை நோக்கி  உலகத்தின் பல நாடுகளிருந்து பல மொழிகளில் மொபைல் மற்றும் தொலைபேசி மூலம் கதறிக்கொண்டிருந்த்து.   அதுவும் சில நேரம் தான் நீடித்தது. அதன் பிறகு அனைத்து வழிகள் துண்டிக்கப்பட்டது.
" மகனே!  சீக்கிரம்  வீட்டுக்கு திரும்பி ????   "  பாதியிலே பேச்சு தடைபட்டது. அதற்கு காரணம் அநேகமாக அந்த இடங்கள் தவிடு பொடியாகி சுடுகாடாக மாறிக்கொண்டிருந்தது.

இந்த மாதிரி மனத்தை உலுக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்க, மற்ற அனைவரும் அதை மட்டும் நுண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்க ....

யாரும் கணிக்கமுடியாத விதமாக சற்றும் எதிர் பாரதவிதமாக ஒரே    நேரத்தில் நாலாப்பக்கத்தில் இயற்கை தனது அசுரபலத்தை நிரூபிக்க ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு விதத்தில் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.

கிழக்குதிசை முழுவதும் என்றுமே இல்லாத பல இடத்தில் நீரூற்று போல எரிமலைகள் கக்கி அனைத்தையும் எதை பற்றியும் கவலை கொள்ளாது நாசம் செய்து கொண்டிருந்தது.மேற்கு திசையில் பல மீட்டர் உயர அலைகள் தொடர்ச்சியாக தாக்கி எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாய் காட்சியளிக்கத் தொடங்கியது.வடக்கு திசையோ பனி உருகி ஓடுவதும் , சூறாவளி மீதி இடத்திலும் தனது அழிவு வேலையை சரியாக அனைவரையும் ஒருவர் விடாது துவசம் செய்ய ஆரம்பித்தது.
விடுபட்ட தெற்கு திசையில் புயலும், சுனாமி தாக்கமும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு பல இடங்களில் அதன் அகோர பசியினை மக்களை விழுங்கி சரிசெய்து கொண்டிருந்தது.
கிட்டத்தட்ட பூமீயின் எல்லாப் பகுதியிலும் அழிவுக்கான  அடையாளம் தென்படத் தொடங்கியது.

தொலைகாட்சி பெட்டியில் 'முக்கிய செய்திகள்' பதிலாக 'அவசர செய்திகள்' மற்றும் 'எச்சரிக்கை செய்திகள் ' என்று ஓடிக்கொண்டிருந்தது.


"நாட்டு  மக்களே ! உலகத்தின் எல்லா மூலை முடுக்குகள் உட்பட எல்லா பகுதியிலும் அழிவு, அழிவு என்ற செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது. உங்களை நீங்களே காப்பாற்றி ?????????  "  அரை குறை பேச்சுடன் 'டொப் ' என்ற சப்தத்துடன் அதன் ஆயுசும் முடிந்தது . அதாவது அந்த பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள், பணக்கர்ரர்கள் , ஏழைகள் போன்ற வித்தியாசம் பாராது எல்லா ஜீவ ராசிகளும் பூமிக்குள் புதைந்து போனது.

மொபைலில் ...


"அப்பா ! நாங்க இங்கே  நல்லா  இருக்கிறோம் .அங்கே நீ எப்ப  ...????????" சுனாமி அலையில் குரலையும் அடித்துச்சென்றது.

கம்பியூட்டரில் ...


"நல்லவேளை இங்கே  ஒன்னும் நடக்கலே ! நல்லா.... ??????/"வார்த்தைகள் முழுமையாய் பரிமாறுமுன்னே அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியது.

ரேடியோவில் ...


"பூமியில் பல பகுதிகள் இயற்கை செய்து கொண்டிருக்கும் அழிவோடு , அணு ஆயுத போரும் நடை பெற்று வருவதால் நீங்கள் ...?????"  சுழன்று வீசிய சூறாவளி ரேடியோ நிலையத்தோடு அங்கு இருந்தவைகளைல்லாம் அடித்துச் சென்றது. 

மத்தியப்பகுதியில் ..


அணு ஆயுதக்கதிர்கள் மக்களையும், தண்ணீரிலுள்ள அனைத்து ஜீவன்களையும் உயிரோடு சமாதி கட்டும் வேளை துரிதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.


எல்லாமே இயற்கை நேரம் பார்த்து திட்டமிட்டபடி நடைபெற்றது போல இருந்த்தது. எங்கு பார்த்தாலும் பிணக்குவியல்கள், அழிந்த கட்டிடங்கள் , அனாதையாய் கிடக்கும் செல்வங்கள், யாரும் சீண்டாத , ஆட்களே இல்லாத பெரிய சின்ன கடைகள் , பொறுக்க ஆளில்லாத இறைந்த்து கிடக்கும் தங்கம், வைரம், பணப்பெட்டிகள் என்று உலகத்தில் இதுவரை காணாத ஐஷ்வர்யங்கள் ஒன்றாக பார்க்க முடிந்தது. இது நாள் வரை ஒளிந்து கிடந்தது, பொக்கிஷமாக காக்கப்பட்டது இன்று  'அம்போ' என்று அனாதையாய் கேட்பாரற்று கிடந்தது. ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 800 கோடி மக்களையும் இல்லாமல் செய்து தனது வெற்றியை மெல்லிய கற்று மூலம் பறைசாற்றி கொள்ள ஆரம்பித்தது. மருந்துக்கும் கூட ஒரு ஜீவனாவது பிழைத்திருக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.


"பூமியாவது ! அழிவ்தாவது ! வேறு வேலை  இருந்தால் பாருங்கள் " என்பதை ஆணித்தரமாய் இருந்தவர்கள் மண்ணோடு மண்ணை புதைந்து விட்டனர். இதுநாள் வரை பிரபஞ்சத்தின் அதிசய படைப்பு பூமியைக இருந்தது. அநத  பூமியின் அதிய  படைப்புக்கு ஒரு திருஷ்டி பரிகாரமாய் எல்லாம் நடந்து முடித்து.


இத்தனை  நடந்த பின்னரும் அந்த அசுர அழிவையும் தாண்டி ஏதோ ஒரு மூலையில் முக்கல் முனகல் சத்தம் ... ஐ.... யோ ... அப் ...பா ...  என்று. உடல் சோர்வில் , பசியில் வரும் சப்தம். சற்று நெருங்கி பார்த்த போது அ ...வன் ... ஒரு இளைஞன். உயிர் இருந்தது. அழிவின் சத்தி  தவறுதலாக ஒரு ஜீவனை விட்டுவிட்டது போலும். சற்றே எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.தட்டுத் தடுமாறி அங்கும் இங்கும் பார்த்தவன் காய் கனி களை பார்த்தவுடன் ஓடினான் அதனை நோக்கி. ஒரு வழியாக பசியாறிய பின்னர் தான் இருக்கும் நிலைமையினை யோசிக்க ஆரம்பித்தான். அவனை சுற்றி ஆள் அரவமில்லை. பயம் தொற்றியது. மற்றவர்கள் எங்கே? நடந்தான் ... நடந்தான். யாருமில்லை ? " நான் மட்டுமா.. , உயிருடன் ..  !  இந்த உலகில் .. ! விடை தேடி அலைந்தான். தினமும் ...  உண்பது .. உறங்குவது .. அலைவது ... 
நாட்கள் பல கழிந்தது. போக போக நம்பிக்கை இழந்தான். ஆனாலும் ஒரு மூலையில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் இருந்தான். அவன் பயணம் தொடர்ந்தது.


வீண் போகவில்லை. அவன் எண்ணம்.


ஒரு நாள் தூரத்தில் அ .. தோ ...  ஒ ... ரு ... உருவம் அசைவது தெரிந்தது. அவன் மனதில் நம்பிக்கை பிரகாசமானது. நெருங்கினான் ..  உருவம் சற்று தெளிவாக தெரிந்தது. அந்த உருவமோ இவனை கவனித்ததாக தெரியவில்லை. நீளமான தலை முடி, நளினமான நடை, தளர்ந்த உடல் ! அதனை நோக்கி ஓடினான். அன்னநடை நடந்த உருவம் திடீரென்று கீழே சரிந்தது. சற்று அதிர்ச்சி அடைந்தவன் சுதாரித்து ஓடினான். மிகவும் கிட்டவே நெருங்கி விட்டான். ஒரு நிமிடம் உத்து பார்த்தவன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். அ ... து .....  அவள் தான்..... ஒரு பெண் .... இவளும் என்னைப் போலவே தப்பித்தவளா ? 


ஒரு வேளை இவளும் என்னைப் போல யாராவது இருப்பார்களா ? என்று தேடி அலைந்து, கடைசியில் யாரும் இல்லாததால் , உயிரோடு இருந்து பிரையோஜனம் இல்லை என எண்ணி ... தன உயிரை .... ஒ ..... அப்படி இருக்கவே கூடாது..  


அவன் பதறினான்.. 'எப்படியும் காப்பாற்றியே தீர வேண்டும்' என்று துடித்தான். அவனுக்கு உதவிடும் ஜீவன் இவள் தான் என்று உறுதியோடு இருந்தான். அவளை எந்த நிலையிலும் இழந்து விடக்கூடாது என்று அவனுக்குத்தெரிந்த மருத்துவத்தை தொடங்கினான். அவளின் நாடி தடிப்பு பார்க்க எண்ணினான். அப்போது இவனின் நாடி துடிப்பு அதிக வேகத்தில் தடித்தது... ஒருவழியாக நாடி துடிப்பு இருப்பதை உறுதி செய்த பிறகு தான் இவனின் நாடி சீரானது. அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாரானான்.


உதடு வறண்டிருந்தது. உடல் சுண்டியிருன்தது. இரண்டும் தண்ணீர் தாகம் , பசி என ஊகித்தவாறு இரண்டையும் கொண்டு வந்தான். முகத்தில் தண்ணீர் தெளித்தான். உடல் அசைந்தது. வாயில் தண்ணீர் ஊற்றினான். முதலில் வெளியே கொட்டிய தண்ணீரை சிறிது சிறிதாக விழுங்கினாள். அப்போது தான் அவனுக்கு உயிரே வந்தது. கூடவே யார் இவள் ? எங்கிருந்து வந்திருப்பாள் ? போன்ற கேள்விகளை அவனே கேட்டுக்கொண்டான். 


சற்று கண்களை திறந்து பார்த்தாள். மகிழ்ச்சியில் கண்கள் விரிந்தன. உடம்பு சுறுசுறுப்பானது. சற்று எழுந்து உட்கார்ந்தாள். ஆனால் பேசுவதற்கு தெம்பு இல்லாமல் மௌனமாக இருந்தாள்.  கட்டாயம் அப்போது அவள் எண்ணத்திலும் அழிவுநேர கூச்சல்கள், அலறல்கள், கோரக்காட்சிகள் ஒரு முறை வந்துபோயிருக்கும்.


மீண்டும் அமைதி காத்தாள். எவன் எண்ணமே அவளுக்கும் இருந்த்தது.


அன்பு காட்ட , ஆதரவு காட்ட , உதவி செய்திட ஒரு உயிராவது இருக்கின்றதே என்று இருவரும் சந்தோஷம் அடைந்தனர். அவனின் எல்லா உதவிகளையும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். மீண்டும் மௌனம். இவனுக்காக அவள். அவளுக்காக இவள் என்கிற சூழ்நிலை அங்கு நிலவியது. 


பகல் இரவுகள் பல கடந்தன. மெல்ல மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் தொடர்ந்தாள். 
"எனக்கு தெரிந்தவரை நாம் இருவரும் தான் உலகில் இருக்கிறோமா? 
"எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது  " என்றான்.
"இனி நாடு என்பது ஏதுமில்லை, எந்த உலகமே நமது தானே " என்றாள் .
இந்த பேச்சு நீண்டது. சட்டென்று 
"அப்படியானால் நாம் தான் மற்றொரு ஆதாம் ஏவாள்  அப்படித்தானே " என்றாள்.
"அ ....... ஆமாம் " இருவரும் மகிழ்ந்தனர்.


மீண்டும் ஒரு புது உலகம் படைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தன. இனி அவர்களின் பெயர் நிலைத்து நிற்கும். இனி நாம் தான் புதிய பூமியை படைக்கும் தாய், தந்தை. நினைக்க நினைக்க அவர்களுக்கு பெருமையாய் இருந்தது.    


"உலகத்தை படைக்கும் பெரிய பொறுப்பு , நம் பரம்பரையினர் உலகத்தை ஆள்வார்கள்." அவனின் பேச்சு மகிழ்ச்சியை மௌனமாக்கியது.
"நாம் ஆதாம் ஏவாள் தாம். ஆனால் ஒரு உலகம் வாழ்ந்து அழிவை பார்த்தவர்கள். எதனால் அழிந்தது. பொறாமை, போட்டி,கோபம், தீய எண்ணங்கள், பேராசைஎன்பது நம் இருவருக்கும் நன்றாய் தெரியும்." வாதங்கள் நிகழ்ந்தன.


"உனக்கு புதிய உலகம் படைக்க இஷ்டம் தானே ?" கேள்வியை எழுப்பினான்.
மௌனம் .... யோசனை ... மீண்டும் மௌனம் ,, யோசனை...


"எனக்கு இஷ்டமில்லை " என்ற ஒரு கொண்டாய் தூக்கி போட்டாள்.


அவனின் மகிழ்ச்சியான எண்ணத்தில் இடி விழுந்தது. அவனின் கற்பனை உலகம் அழிந்தது போல் அழிந்தது.


"ஏன்?.. ஏன் ?     எந்த மனமாற்றம். " கோள்விகளை அடுக்கினான்.
"ஆம். ஆசையோடு நாம் சந்ததியினரை படைப்போம். முதலில் பாசமாகத்தான் இருப்பார்கள்.பிறகு பாசம் மோசம் செய்யும். ஏமாற்றும். பெண்களையும் கஷ்டப்படுத்தும். மனிதர்கள்  பெருக பெருக ஒருவருக்கொருவர் போட்டி, பொறமையோடு சண்டையிட்டு கடைசியில் ஒருநாள் அதுவும் சீக்கிரமே அழிந்து போகும். அந்த காட்சிகள் என் கண்ணுகுத் தெரிகிறது. இப்போதுள்ள ஒரு உலகம் பல நாடுகளாய்  மாறி அவர்களுக்குள் நான் தான் பெரியவன், நான் தான் பெரியவன் என்று மாறும். அந்த அழிவுக்கு நாமே காரணமாக இருக்க வேண்டுமா?  "  


நிதானமாய் யோசித்தார்கள். முடிவில்..


"நீ சொல்வது சரிதான். இன்றைய  நமது சுகம், மகிழ்ச்சி நாளை மலரும் நாட்களிலும் நிலைத்து நிற்குமா என்பது சந்தேகமே. ஒருவருக்கொருவர் பாசமாக உதவியாக நடந்து கொள்வார்கள் என்பது நிச்சயமில்லை. நமது ஜீன்களிலிருந்து வரும் மனிதன் சூப்பர் பவர் மனிதன்னகவே இருப்பான். அவனின் எண்ணங்கள் ஆரம்பத்திலுருந்தே போட்டி பொறாமை இருக்கும். " படபட வென்று கொட்டினாள் .


இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.


"சரி. நாம் இந்த உலகுக்கு கடைசி ஆதாம் ஏவாளாக இருப்போம். நம் ஜீன்களில் கலந்திருக்கும் தந்திரம் மற்றும் ஏமாற்றும் குணம் கொண்ட மனிதன் உருவாக வேண்டாம் அதனால் .... ? " சற்று நிறுத்தினாள் ..
"அதனால் ?"
"அதோ தெரியும் அந்த உயரமான மலை உச்சியிலிருந்து குதித்து நம்மை அழித்துக்கொள்வோம். ஏனென்றால் ஒருவேளை நாம் உணர்ச்சி வேகத்தில் நமது சிந்தனை மாறி ஒரு ஜீவன் உதித்துவிட்டால் நாம் கட்டாயம் புதிய உலகத்தை படைக்க வேண்டியிருக்கும். அந்த உணர்ஹ்ச்சி எழுமுன் நாம் மலையிலிருந்து குதிப்போம். நாம் இறந்தாலும் பல கோடி ஆண்டுகள் மீண்டும் உயிரியல் பரிணாமம் நிச்சயம் நடக்கும். அப்போதாவது போட்டி, பொறாமை, தீய எண்ணங்கள் இல்லாத நல்ல எண்ணம் கொண்ட என்றும் நன்மை செய்யும்  மனிதன் உருவாகுவான். அனைத்து ஜீவராசிகளையும், சாதி, மத பேதமில்லாமல் சரி சமமாக புது உலகம் படைத்து நன்றாய் காப்பான். எல்லோருக்கும் எப்போதும் நிரந்தர நிம்மதி, மகிழ்ச்சி, அமைதி கிடைக்கும்.அடுத்து உருவாகும் உலகம் சொர்கபூமியாக இருக்கும் " உணர்ச்சியோடு பேசி கொட்டி தீர்க்க மலை உச்சியும் வந்தது.


தங்களுடைய முடிவில் மாற்றமில்லாமல் புரட்சி படைக்க தயாராயினர்.


இருவரும் கீழே பார்த்தார்கள். தலை சுற்றுவதிருந்து தாங்கள் எவ்வளவு உயரத்தில் இருக்கின்றனர் என்று தெரிந்தது.
  
" இருவரும் கண்களை நன்றாக மூடிக்கொள்வோம் .. ஒன்று .. இரண்டு.. மூன்று  என்று எண்ணி முடிக்கும் போது  சேர்ந்தே குதிப்போம் " 


மௌனம்  தொடந்தது.


இருவரும் தயாரானார்கள். கண்களை மூடிக்கொண்டனர்.


ஒன்று...


இரன்டு ...


மூன்று  ...... 
*********************************************************************************
                    


          


      இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..