Pages

Tuesday, 1 June 2021

அறிமுக தத்துவவியல் - 1. தத்துவவியலும் அறிவியலும் - V. R. கணேஷ் சந்தர் மற்றும் K.K. கங்காதரன்

 

அறிமுக தத்துவவியல்

V. R. கணேஷ் சந்தர் மற்றும் K.K. கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

 1. தத்துவவியலும் அறிவியலும்

     நடப்பு யுகம் கேள்வி கேட்பதும் (critical) ஒருமை ஆள்பாங்கு உடையதும் (Individualistic) ஆகும். 'ஏன்?' இது சொல்லப்படுகிறதென்றால், வாசகர்கள்  இக்கட்டுரைகளில் கூறப்பட்டுவைகளை புரிந்துகொள்ளுதல் (understanding), ஏற்றுக்கொள்ளுதல் (accepting) ஆகியனவற்றை தங்களளவு அறிவெல்லையில் வைத்து முடிவுக்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். ஒன்றைப் புரிந்து கொண்டால்தான் அதனை ஏற்பதா இல்லை ஏற்க முடியாதா என சொல்ல முடியும். எனவே, புரிந்துகொள்ளுதலே முதல் செயல். ஏற்பது (அல்லது ஏற்காதது) இரண்டாவது செயல். ஏற்றால், சுய கற்பிதமாக்கம் (self-conceptualisation) நடக்கிறது. இதனை கீழ்கண்ட ஒரு ஓட்ட வளையச் சித்திரமாகக் (cyclic flow diagram) படம் 1 ல் காணலாம்.


     இதுவே அறிவியல் கண்ணோட்டத்தில்.... படம் 2ல் கீழ்கண்டவாறு பார்க்கப்படுகிறது...


     இங்கு முக்கியமான இன்னொன்றையும் கவனிக்கவேண்டும். நடத்தை என்பது செயலா? செயலின்மையா? என்றால் கீழ்கண்ட ஓட்டவளையச் சித்திரத்தில் படம் 3ல் விளக்கம் காண்க.    இதனைத்தான் பகவத் கீதை 4.18 ல், செயலில் செயலின்மையும், செயலின்மையில் செயலும் காண்பவன் 'யோகி' எனக் கூறப்பட்டுள்ளது.

    தத்துவத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பு நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்றுவருவதைக் காண்கிறோம். இயற்பியலாளர்கள் தத்துவவாதிகளாவதும் (ஐசக் நியூட்டன்), தத்துவவியல் அறிஞர்கள் இயற்பியல் வினோதங்களை (கபிலர், ஒளவையார்) உற்று நோக்குவதும், எதிர்பார்ப்பதும் பரவலாகி வருகிறது.

எடுத்துக்காட்டாக... 

  இயற்பியலில் கூறப்படும் “தீர்மானகரமின்மை” (Principle of indeterminacy) க் கோட்பாட்டினை விளக்க (அதாவது, ஒரு இருப்புக்குத் தோன்றுமூலம் காணப்படாவியலாது என்பது) தத்துவவியலின் துணை தேவைப்படுவதையும், தத்துவவியலில் கூறப்படுவதான இச்சா சுதந்திரம் – freedom of will – என்பதனை இயற்பியல் வழியில் ஆராயவும் துறை சார்ந்தோர் கொள்ளும் ஆர்வம் கருதத்தக்கது.

  இதனால் தத்துவவியல் என்பது ஒரேயடியாக கருத்து சார்ந்ததாய் இருப்பதும், அறிவியலின் ஜடம் சார்ந்த அடாவடித்தனமும் முடிவுக்கு வருவதான நம்பிக்கை ஏற்படுகிறது. இவ்வகையில் இன்னொரு விஷயமும் கருதற்குரியது. படைப்புப் பரிணாமக் கோட்பாட்டில் உயிரினமும் உடலும் தோன்றினமை கூறப்படுவதும், அதோடு ஒழுக்க நெறிகளும் தோன்றியிருக்கக் கூடிய வாய்ப்பும் மறுப்பின்றி பரவலாக ஏற்கப்பட்டு வருகின்றன.

  தத்துவவியலின் நோக்கமானது, ஏதேனும் ஒரு தத்துவக் கோட்பாட்டுக் கருத்து வளையத்தை (Philosophical System) விசாரிக்கும் திருப்தியைத் தருவதல்ல. ஆனால் திசை சார்ந்த சிந்தனைத் தூண்டலைlf தருவதாகும் (directed inquiry).

இக்கட்டுரைத் தொடரின் தன்மைகளாகக் கீழ்கண்டவைகளைக் கூறலாம்.

  1. இருப்புண்மையைக் கருதுவது (realistic)
  2. பன்முகத்தன்மை உடையது (Pluralistic)
  3. இறைமையை நம்புவது (Theistic)
  4. ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்துவது (idealistic)
  5. நம்பிக்கை மனோபாவமுடையது (Optimistic)

   இருப்புண்மையைக் கருதுவது என்றால் காட்சியுண்மையை (reality) கணக்கிலெடுத்து, தோற்றக் கற்பனையைத் (appearance) தள்ளுவதெனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அப்படியிருக்கத் தேவையில்லை.

 தத்துவக்கோட்பாட்டு வளையங்களிடையே (philosophical systems) உள்ள ஒற்றுமையைத்தான் நாம் காணவேண்டும். இடமளிக்கும் சிந்தனை (persistent thinking) உள்ளவர்களும் சந்தேகவாதம் (cynical scepticism) கை கொள்ளாதவர்களும் வேற்றுமையிடையே ஒற்றுமையைத்தான் காண்பார்கள்.

  இடமளிக்கும் சிந்தனை (persistent thinking) என்றால், தன் சிந்தனைக் கூட்டங்களுக்கிடையே தானே மேற்கொள்ளக் கூடியதான (அது தன்னால் வந்ததோ அல்லது பிறரால் ஏற்பட்டதோ) புதுச் சிந்தனைக்கு இடம் விட்டுவைத்தல் ஆகும். வள்ளலார் “பசித்திரு” எனும்போது உடலளவு மட்டுமல்ல, மனதளவிலும் மூளையை சிந்தனையால் இட்டு நிரப்பி அடைக்காமல், 'புதுச் சிந்தனைக்கு இடங்கொடு' எனும் அர்த்தத்தில் சொல்லிருப்பாரோ?

   தத்துவவியலில் பல தத்துவக்கோட்பாட்டு வளையங்கள் (philosophical systems) உள்ளன. பழங்கால மற்றும் நவீன தத்துவங்களின் விமர்சகர்கள் அவைகளை தங்களின் விவாதப் பொருளாக ருசி காண்பதும் மையக் கருத்தாக விரும்பி ஏற்பதும் காண்கிறோம். அறிவியலில் உள்ளது போலவே, தத்துவவியலிலும் இப்போது கருத்துரு ஒன்றிப்பு (conceptual merger or convergence) நடைபெற்ற வண்ணம் உள்ளது. உதாரணம் சொல்தென்றால், பகுத்தறிவு வாதமும் அனுபவவாதமும் ((rationalism and empiricism) இயற்பியலில் (அறிவியலில்) ஜீன் பற்றிய ஆராய்ச்சியில் ஒன்றுபடவேண்டியுள்ளது. இயந்திரகதிவாதமும் உயிர்வாதமும் படைப்பு பரிணாமத்தில் ஒன்றுபடுகின்றன. கருத்துவாதமும் இயல்புவாதமும், -- ஒரு காலத்தில் இவையிரண்டும் பரம எதிரிகளாக இருந்திருந்தாலும்---, இப்போது அந்தத் தீவிரத்தனம் குறைந்து வருவதைக காண்கிறோம்.

  பிரபஞ்ச ஒழுங்குக்குப் பின்னே ஒரு ஆன்மீகச் சத்தியநெறி உள்ளதென கருத்துவாதமும் idealism, பிரபஞ்ச ஒழுங்கின் அறிவியல் உண்மை தெரிய வர வர இயல்புவாதம் naturalism சரியெனத் தோன்றுவதும் மேற்போக்குக்கு எதிரெதிர் எனக் கொண்டாலும். எதிர்காலத்தில் ஏன் ஆன்மீகச் சத்திய நெறி கண்டுபடிக்கப்பட்டு இந்தப் பிரச்னையைத் தீர்க்கக் கூடாது? வாய்ப்பு இருக்காதா?

  எல்லாமே மூலத்திலிருந்து தோன்றியதாகத்தான் கொள்ளவேண்டுமா? ஒரு மூலத்திலிருந்து தோன்றிய மூலகங்கள் தங்களிடையே கலந்து எத்தனேயோ தோற்றுவித்திருக்கலாமே?

    ஜடம்தான் வாழ்வாக, மனமாக, சமூகமாக, கலை,  அறிவியல், தொழில் நுட்பமாக மாறியிருக்கிறது. ஏனென்றால் இவ்வரிசையில் முன் சொல்லப்பட்டுள்ள எது ஒன்றும் தனக்குத் தேவைப்பட்டே தனக்கடுத்ததை ஜனித்திருக்கிறது. இவ்வாறு பிரபஞ்ச ஒழுங்கைத் தீர்மானகரமாகக் காப்பாற்றுகிறது.

 தொடரும் ..

1 comment: