Pages

Monday, 14 June 2021

அறிமுக தத்துவவியல் - 5. வெளி - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

 

அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

5. வெளி

 

வெளிகள் ஐந்து.

இருப்பு வெளி. எண்ண வெளி. கணித வெளி. கால வெளி. வாழ்வெளி என வெளிகள் ஐந்து. இனி ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக சிறிது ஆராய்வோம். இங்கு ஒரு மேல்போக்கு விவரங்களே தரப்படுகின்றன. விருப்பம் உள்ளோர் அதற்கான இணையதளத்தில் தேடலாம்.

இருப்பு வெளி  -- பேரண்டம், அண்டம், அண்டவெளி, பிரபஞ்சம், பெருவெளி  எனும் இவ்வார்த்தைகளால் குறிக்கப்படும் ஆகாயம் என்பது நட்சத்திரங்கள், கிரகங்கள், விண்பொருட்கள் ஆகினயனவற்றை உள்ளடக்கிய வெட்டவெளி ஆகும். அதனை அடையாளப்படுத்த எதுவுமே இல்லை. அதற்கு ஒரு ஆரம்ப நுனி, முடிவு நுனி, நடு, ஒரம், மேலே, கீழே என்பதெல்லாம் குறிக்க முடியாது. வெளிக்கு எல்லை உண்டா என இன்று வரை தெரியாது. அதனை ஒரு அடைபட்ட இடம் எனக் கொண்டால் அதன் விட்டம் 6000 மில்லியன் ஒளி ஆண்டுகள் என ஒரு தோராயக் கணக்கு உண்டு.

சூரியக் குடும்பம் – நாம் வாழும் பூமியை ஒரு கிரகமாகக் கொண்டு நம் சூரியக் குடும்பம், வட்டத் தட்டு வடிவமுடைய ‘கேலக்ஸி’ எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் ‘பால்வெளி’ எனும் அதன் சுற்று வளையத்தில் உள்ளது. கேலக்ஸியை ஒரு நகரமாகக் கொண்டால் சூரியக் குடும்பம் ஒரு சிறு புறநகர். இந்தப் பால் வீதி தட்டின் மிக அதிக விட்டம் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள். மிகச்சிறிய விட்டம் 20000 ஒளி ஆண்டுகள். நம் சூரிய மண்டலம் வேகா எனும் நட்சத்திரத்தை நோக்கி நகர்கிறது. வினாடிக்கு 20 மைல் வேகத்தில் பூமி சுற்றுதளத்தில் நகர்கிறது. 

நம் சூரியக் குடும்பத்தின் அளவு என்ன தெரியுமா? சூரியனிடமிருந்து ஒரு ராக்கேட் நிமிடத்திற்கு 2 மேல் வேகத்தில் அனுப்பினால், கடைசி கிரகமான “பிளேட்டோ” வை அடைய 3450 ஆண்டுகள் ஆகலாம் என ஒரு கணக்கு.

எல்லா நடச்த்திரங்களும் நகர்கின்றன. ஆனால் தூரத்தில் இருந்து பார்ப்பதால் நகராதவை போலத் தோற்றமளிக்கின்றன. பால் வீதியும் வினாடிக்கு 200 மைல் வேகத்தில் நகர்வதாக ஒரு கணக்கு.

Tidel Theory யின்படி, சூரியனுக்குப் பக்கத்தில் வந்த இன்னோரு நடசத்திரத்த்தால், அந்த நட்சத்திரத்தில் ஒரு பேரலை எழுந்து சிதறிய ஒளிப்பந்துகளால் கிரகங்கள் தோன்றியிருக்கலாம் என ஒரு கருத்து. பூமி தோன்றி 5000 மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன.

கணித வெளி – புள்ளி, கோடு, கோளம், வட்டம், சதுரம் முக்கோணம் என கணிதம் காட்டும் பல வெளிகள் உள்ளன. இடவெளியிலும் கணித வெளியிலும் நீளம், அகலம், உயரம் என முப்பரிமாணம் உண்டு. நான்காவதாக ஒரு பரிணாமத்தைச் சொல்லலாமென்றால் அது கால வெளி.

கால வெளி – இடவெளியில் நகராத வானமும் நகருவதான நட்சத்திரங்களும், கிரகங்களும், விண்வெளிப் பொருட்களும் உள்ளன. வானத்தின் இடத்தை இங்குப் பட்டியலிடப்ப்ட பொருட்கள் அடைக்கின்றன. எனவே வானம் பொருளால் அடைபடுவதாக இருக்கிறது. ஆனால் எதனாலும் அடை படாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால்  பெறப்படுகிறது. கால வெளியில் காலமே நகருவதாக உள்ளது. நகராத காலத்தை மனிதனால் கருதமுடியவில்லை. ஆனால், காலத்தை அறியாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால் பெறப்படுகிறது. கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என மூன்று காலத்தை அடையாளம் காணலாம். ஆனால் காலம் நகருவதால் ஒரு காலத்தில் வருங்காலம் என இருந்ததுதான் நிகழ்காலமாகி கடந்தகாலமாகிறது.

எண்ண வெளி – மிருகங்களில் இயங்குவது எண்ணவெளிதானா என இன்னும் தெரியவில்லை.  மனித மனத்தில் எண்ணங்களால் அடைபடக் கூடிய ஒரு வெளிதான் எண்ண வெளி.

வாழ்வெளி – மிருகங்களுக்கு வாழ்வு உண்டு. வாழ்வெளி இல்லை. மனிதன் தனக்கென ஒரு வாழ்வெளி கொண்டுள்ளான். எண்ணவெளியின் துணையுடன்தான் வாழ்வெளி நிலவுகிறது. மனிதன் தன் வாழ்நாளில் கீழ்கண்ட ஒரு நேரத்தில் ஒரு துணைவெளியில் இருக்க முடியும்.

வீடுவெளி – வேலைவெளி – தன் இருப்பு நிலை பறைசாற்றும் வெளி

வீடுவெளி

வேலைவெளி –

தன் இருப்பு நிலை பறைசாற்றும் வெளி

தூக்கம், முழிப்பு

பல் துலக்குதல். மலஜலம் கழித்தல், குளித்தல், அலங்காரம், பூஜை உணவு

வருமான ஈடுபாடுகள் அனைத்தும்

கோவில், புத்தகக் கடை, நூலகம், TV, சினிமா, ப்த்திரிகை வாசித்தல், அரட்டை, நிகழ்ச்சிகளுக்குச் செல்லுதல்,

 

இம்மூன்றும் அதனதன் வடிவக் கட்டகம் (Design) உடையவை. மனிதன் வடிவக் கட்டகத்திற்கு அடிமை. அவனுடைய சுகநாட்டம் அவனை அவ்வாறு ஆக்குகிறது. மனிதனை உயர்மனிதனாக்க இந்த வடிவக் கட்டக ருசியை அவன் விட வேண்டும். அதாவது அவன் இருக்கும் இம்மூன்று வெளிகளுடன் நான்காவது வெளியை அவன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அந்த நான்காவது வெளி முற்றிலும் வடிவக் கட்டகம் இல்லாதிருக்கப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வீடுவெளி – வேலைவெளி – வடிவக் கட்டகமற்ற வெளி - தன் இருப்பு நிலை பறைசாற்றும் வெளி.

 

வடிவக் கட்டகமற்ற வெளி

வீடு என்றால் தன் அந்தஸ்த்தை விட கூடிய அல்லது குறைந்தவர்களுடன் பழகுதல்,

தொழில் என்றால் தன் துறை சாராத ஒன்றில் இருப்பவர்களுடன் பழகுதல்

தன் இருப்புநிலை பறைசாற்றும் வெளி என்றால், தான் அறியாத ஒன்றில் உள்ளோருடன் பழகுதல்

----இவைகளெல்லாம் ஆன்மீகத்தின் அடித்தளம்.. எனென்றால் ஆன்மீகம் வடிவக் கட்டகமற்றது.

 தத்துவம் என்பது கேள்வியால் கட்டப்பட்டது என முன்பு பார்த்தோம். இங்கு ஒரு கேள்வி நமக்கு எழவேண்டும். அதாவது --- “ஏன் மனிதனை உயர்மனிதனாக்க வேண்டும்?” அல்லது யாராவது ஆக்காவிட்டாலும் ---- “அவனே என் அவனை உயர்மனிதமாக்கிக் கொள்ளவேண்டும்?” 

இதற்கு விடை – மனிதனுக்கு அவனுடைய வாழ்போக்கில் உயிர் தொடர்ச்சி எனும் பிரச்னை உள்ளது. தன் உள் விஷயங்களில் அவன் மாற்றங்களை அனுமதித்துக்கொண்டே தன் சுற்றுச் சூழலுடன் மாறுவதையும் அதாவது சூழலுடன் தகவமைவதையும் உறுதி செய்தால்தான் அவனுடைய உயிர்தொடர்ச்சி நிச்சயமாகிறது. முதல் மாற்றத்தை “தன் புத்துரு” – self renewal -- என்றும் இரண்டாவது மாற்றத்தை “தன் சூழ்செதுக்கம்” _self adaptation -- என்றும் பெயரிடலாம் போலத் தோன்றுகிறது.

தத்துவத்தில் ஒரு முக்கியான விதி என்னவென்றால். எந்த ஒரு கருத்துக்கும்  அதன் நிறைவாக்கிக் கருத்து (complementary concept)  இருக்க வேண்டும் என்பதே. மேலே “கால வெளி”  பத்தியில் நீங்கள் இதனைக் கவனித்திருக்கலாம்.

அதிலிருந்து கீழ்கண்ட வரிகளை மீண்டும் தருகிறேன்.

இடம் எதனாலும் அடை படாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால்  பெறப்படுகிறது. கால வெளியில் காலமே நகருவதாக உள்ளது. நகராத காலத்தை மனிதனால் கருதமுடியவில்லை. ஆனால்,, காலத்தை அறியாத ஒரு பரவஸ்து இருக்க வேண்டும் என இதனால் பெறப்படுகிறது

இவ்வரிகளில் “பெறப்படுகிறது” எனும் வார்த்தை இவ்விதியை அடியொற்றியே தரப்பட்டது. அதன்படி, உயிர் தொடர்ச்சி என்பதன் நிறைவாக்கிக் கருத்து  “உயிர் உயர்வு” தான்.

உயிர்த் தொடர்ச்சியின் பாகங்களாக வாழ்வில் பல ஏற்ற இறக்கங்கள் வருகின்றன. இந்த ஏற்ற இறக்கங்களால்தான் உயிர்த்தொடர்ச்சி சாத்தியமாகிறது. இதை எதைப் போன்றதென்றால், உடலுக்கு அத 98.4 டிகிரி வெப்பநிலை பராமரிப்பதுதான் முக்கியமாகையில் அதற்காக நோய், வலி, காயம் என காட்டி ஆளை வேலை வாங்கும். வாழ்வில் வரும் புகழ், அவமானம், வறுமை, செழிப்பு, லாபம், நஷ்டம் யாவும் உயிர்த் தொடர்ச்சிக்காகவே. இதில் மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்னவென்றால், இவ்வித ஏற்ற இறக்க நிலைகளில் எதுவானாலும் அந்நிலை அவ்வுயிரின் ”உயிர் உயர்வு” க்குத் தடையல்ல. உயர் உயர்வுக்கான மறுப்பாகவும் இவைகளைக் கொள்ளத் தேவையில்லை. எனவே, உயிர் உயர்வு ஒன்றே மனிதனை அவனுடைய நிலையால் களங்கப்படுத்தாத அம்சம்.

தத்துவத்தின் உறுதியான செய்தியும் இதுவே.


தொடரும் 


No comments:

Post a Comment