Pages

Sunday, 27 June 2021

அறிமுக தத்துவவியல் - 6. உயிர் - V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

அறிமுக தத்துவவியல்

V.R.கணேஷ் சந்தர் மற்றும் K.K.கங்காதரன்

தொடக்கம் 30.5.2021

6. உயிர்

அறிவெல்லைக்கு எட்டும் பருப்பொருள் (Matter) மற்றும் சக்தி (Energy) என்பன தவிர இவைகளை இருப்பதாக அறியும் உயிர் உண்டு எனவும் இதனாலேயே பெறப்படுகிறது. பருப்பொருள் மற்றும் சக்தியிடமிருந்து உயிர் வந்ததா அல்லது உயிரிலிருந்து உயிர் வந்ததா? உயிரிலிருந்துதான் உயிர் வந்தது என்பதை ஒரு பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. ஒரு டெஸ்ட் டியூபில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அது காற்றுபுகா விதம் அடைத்து வைத்தால் உயிர் அசைவு அங்கு இல்லை. ஆனால், அந்த டெஸ்ட் டியூபில் காற்று வழி விட்டால் உயிர் அசைவு சில நாட்களில் தென்படுகிறது.

பூமியில் முதல் உயிரின் தோற்றம் பற்றி மூன்று கோட்பாடுகள் உள்ளன.

1.   வேற்றுக் கிரகங்களிலிருந்து ஆகாய வழியாக பூமிக்கு வந்திருக்கலாம்.

2.   இறைவஸ்துவின் படைப்புக் காரியத்தால் முதல் உயிர் தோன்றியிருக்கலாம்.

3.   ஜடத்தின் பரிணாம  மாற்றத்தால் முதல் உயிர் தோன்றியிருக்கலாம்.

முதல் கோட்பாடு பூமியில் முதல் உயிர் தோன்றிய விதம் கூறுகிறதேயன்றி வேற்றுக் கிரகித்தலாவது அது எப்படித் தோன்றியது எனக் கூறவில்லை.

இரண்டாவது கோட்பாட்டினை அறிவியலாளர்கள் ஏற்கவில்லை. அறிவியல் என்பது இரண்டு அடுத்த அடுத்த கருத்துக்கிளிடையே சங்கிலித் தொடர்பு ஏற்படுத்துவதை நிரூபண சாத்தியத்தில் மட்டுமே எற்கும். ஒரு கருத்து நிரூமணமானால் மட்டுமே உண்மை எனக் கொண்டால், அதே கருத்தின் நீரூபணமாகாத பகுதி உண்மை அல்ல என பெறப்படுகிறதல்லவா? ஒரு கருத்து புலனாகு பகுதி மட்டும்தான் கொண்டிருக்குமென நிரூபிக்க அறிவியலில் இடமில்லை. கருத்தின் புலனாகாத நிரூபிக்கப் படாத பகுதியின் கதி என்ன என்பதற்கு அறியிவிலில் பதிலில்லை.

‘எல்லாம் செய்யப்படுமுன் ஒன்றும் செய்யப்பட்டதாகாது’

எனும் ஸ்ரீஅரவிந்தரின் போதனையின் படி, கடைசிவரை செய்துவிடவேண்டும். ஆன வரை செய்யப்பட்டதில் மனிதனுக்கு ஒரு வாழ்வு காட்டும் அறிவியல் அடிக்கடி விமர்சனத்துக்குள்ளாவதில் வியப்பில்லை அல்லவா?

மேற்சொன்ன மூன்று கோட்பாடகளில் இரண்டாவதுதான் இதுவரை உடன்படுதரத்தில் உள்ளது. படைப்புப் பரிணாமத்தில் (Creative Evolution) உயிர் உருவாவது ஒரு கிரமவரிசைத் திட்டம்  (Designated Process) எனக் கொள்வது ஏற்புடையது.

இயந்திரகதிவாதம் (Mechanism), உயிர்வாதம் (Vitalism), இயல்புவாதம் (Naturalism), பொருள்முதல்வாதம் (Materialism) ஆகியன இவைகளை விவாதிக்கும் பல வாதங்கள்.

உயிரின் மூன்று தன்மைகளாவன் –

1.   உயிர் என்பது உறவாட்ட ஜோடனையில் (relational fix) உள்ள பகுதிகளால் ஆனது.

  1. தூண்டுதலுக்குப் பதில் தரக்கூடியது. (Respsonsive to stimuli)
  2. சுய நிலைப்பு உடையது (self-perpeuative)

சுய நிலைப்பு என்பதின் விரிவாகச் சமீபத்திய ஆராய்ச்சியில், ஆட்டோ பொய்யஸிஸ் –- autopoiesis –எனும் கருத்தின்படி, உயிர்

  1. தன் புத்துரு – self renewal
  2. தன் சூழ்தகவாக்கம் – (Self adaptation)

எனும் இரண்டு உத்திகளால் தன்னை தொடர்இருப்பில் வைத்துக்கொள்ளும். இவைகளைப் பற்றி சென்ற அத்தியாயத்திலும் சற்று பார்த்தோம். இவைகளை உயிர் எனும் கருத்தில் அடக்கலாம் என்றால் மனிதன் என வரும்போது உயிர்-மனம் எனும் கூட்டுக் கருத்தில் காண வேண்டியுள்ளது.

முதல் கருத்தின்படி, தன் உள்விஷயங்களில் தன்னை செப்பனிட்டுக்கொள்ளதலும், இரண்டாவது கருத்தின்படி தன் சூழலுடன் தன்னைச் செப்பனிட்டுக் கொள்ளுதலும் ஆகும்.

ஆட்டோ பொய்யஸிஸில் அடுத்த துணைக் கருத்து என்னவென்றால், ஓர் உயிர் தன் உள்விஷயங்களில் அடர்த்தியாக இருந்து வெளிவட்டாரச் சூழலிலிருந்து கொஞ்சமே எடுத்துக் கொள்ளும். அல்லது, தன் உள்விஷயங்களில் லேசாக இருந்து வெளிவட்டாரச் சூழலிலிருந்து அதிகம் எடுத்துக் கொள்ளும்.

இனி, ஆட்டோ பொய்யஸிஸ் எனும் கருத்து மூன்று அடுக்குகளில் நாம் அறியலாம்.

தனி உயிர்

ஆட்டோ பொய்யஸிஸ்

சமூக வாழ்க்கை

ஆட்டோ பொய்யஸிஸ்

தத்துவவியல்

ஆட்டோ பொய்யஸிஸ்

தன் புத்துரு

தன் சூழ் தகவாக்கம்

தன்னளவு திறமையேற்றம்

சூழலுடன் கைகோர்த்து வளர்தல் 

 

(பேருந்து ஓட்டுனர் சாலையைப் பிடித்து பேருத்து ஓட்ட ஸ்டீயரிங்கை சுழற்றுவது போது மனிதன்  மனதை செப்பனிடுதல்)

ஒருவனின் எண்ணத்திட்டுக்கள் thought mass -- தன் புத்துரு ஆகுதல்

எண்ணத்திட்டுக்கள் சூழலாலும்

பிறராலும் மாறுதல் அடைதல்,

 

தன் எண்ணத்திட்டுக்கள்

பிறரின் சூழலை மற்றும் எண்ணத்திட்டுக்களை மாற்றுதல்

 

அறிவியலாளரைப் போல கிடைத்த உண்மைகளை சங்கமித்து ஆனமட்டும் ஒரு திரட்சி வாழ்க்கையை (workable life)  சமுதாயத்திற்குக் காட்டுவதில் தத்துவவாதி திருப்தி அடைவதில்லை. அவனுடைய கேள்வியெல்லாம், உயிர் மற்றும் மனம் என்பவைகளின் தோன்று மூலம் என்ன? தோன்று காரணம் என்ன? அவைகள் ஏதோ ஒரு எளியதின் உருப்பெருக்கமா? அல்லது தங்களளவு ஒரு புதுச் சிருஷ்டியா என்பவைதான்.

இந்தியத் தத்துவங்களில் நியாய தத்துவம் புகழ்பெற்றது. அதில்

·          சத்காரியவாதம் (மூலத்தில் உள்ளதே வெளித்தோன்றும்). உதாரணத்திற்கு, தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை.

·          அசத்காரியவாதம் எனும் இரண்டு வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.(மூலத்தில் இல்லாததும் வெளித்தோன்றும்). உதாரணத்திற்கு, ஆக்ஸிஜனிலும் ஹைட்ரஜனிலும் இல்லாத குணங்கள் நீரூக்கு வருவது போல. நீளத்திலும் அகலத்திலும் இல்லாத பரப்பு குணம்,  அவைகளைப் பெருக்குவதால் வருகிறது.

ஜடம், உயிர் என்பவைகளின் தோற்றமூலத்தைப் பற்றி வாதங்கள் இருக்க, இவையிரண்டையும் முறைப்படுத்தி முடுக்க ஒரு “முடுக்குவான்” (Moving Cause) இருக்கவேண்டுமென கூறி,  பல தத்துவவியலாளர்கள் அம்முடுக்குவானுக்கு பல பெயரிட்டு விளக்கினார்கள். கீழ் கண்ட பட்டியலில் பெயர்களையும் பெயரிட்ட தத்துவவாதிகளையும் காணலாம்.

 

முடுக்குவானின் பெயர்

தத்துவவாதிகள்

இறைவன்

ஹீப்ரு தத்துவம் மற்றும் பல தத்துவவாதிகள்

தலையாய நகர்த்தி – Prime Mover

முதல் முடுக்கி – first mover

இறைவன் - God

அரிஸ்டாட்டில்

உலகக் கட்டுமானி – world builder - Demiurgus

பிளேட்டோ

நௌஸ் Nous அல்லது மனம்

அநாக்ஸிகோரஸ்

Natura Naturans

Bruno and Spinoza

பூரணக்கருத்து Absolute Idea

Hegal

பூரண அகம்பாவம் Absolute Ego

Fichte

தூய படைப்புச் சக்தி Pure Creative Energy

Schelling

பூரணச் சித்தம் Absolute Will

Shopenhauer

இச்சாவலிமை will to power

Nietzshe

உணர்வறியா இச்சை Unconscious Will

von Hartmann

உலக ஆன்மா World Soul

Fechner

அறியவொண்ணாதது  Unknowable

Spencer

தர்ம ஜனன வலிமை  Power that makes righteousness

Mathew Arnold

பூரண ஆத்மா Absolute soul

Modern Idealist

நிர்வகிக்கும் காரணி Elan vital அதாவது organising factor

Henry Bergson

 தொடரும் .....

No comments:

Post a Comment