Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Monday, 26 June 2017

கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் - தமிழ்மொழியின் முகவரி ?

மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்திய 
கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் கவியரங்கம் 
இடம் : மணியம்மை மழலையர் பள்ளி  



நாள் : 25.6.17  நேரம் : காலை 10.00 மணி 



கவிஞர் கண்ணதாசன்
எளிய வரிகளாய்த் தந்தவர் 
வலிய பொருளைப் பொதித்தவர் 
கவிஞர்களுக்கு முகவரி தந்தவர் 
கவிதைகளை வாழ வைத்தவர்

  
தமிழ்மொழியின் முகவரி நம் தமிழ் எழுத்தா? கிரந்தெழுத்தா?
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 

ஆறறிவு தந்தத் தமிழ்மொழியானது
ஆறெழுத்திற்குத் தலை வணங்குவதா?
உப்புக்குச் சப்பாணியான கிரந்த எழுத்துகள்
உப்புள்ள பண்டமாக மாற்றுவதா?

அகிலத்தில் இருந்ததோ பல்லாயிரம் மொழிகள் 
ஆதிக்கத்தால் அழிந்ததோ ஆயிரமாயிரம் மொழிகள்
எஞ்சி இருப்பதோ ஒருநூறு மொழிகள்
மிஞ்சி இருக்குமா அதில் தமிழ் மொழி!

தமிழெழுத்து கிரந்தெழுத்தை மறந்தால்
தமிழ்மொழி பௌர்ணமியாய் ஒளிரும்.
தமிழெழுத்தை கிரத்தெழுத்து மறைத்தால்
தமிழ்மொழி அமாவாசையாய் இருளும்

காட்சிக்கேற்ப கல்லைச் செதுக்குவது கலை
கண்டபடிக் கல்லைச் செதுக்குவது கொலை!
கூட இருந்து குழித்தோண்டும் கிரந்தெழுத்து
கூடாநட்பில் புதைத்துவிடாதே தமிழ்மொழியை.

கருவறையின் முகவரி தமிழெழுத்து
கல்லறையின் முகவரி கிரந்தெழுத்து! 
நிரந்தர முகவரி தருவதே தமிழெழுத்து
நாடோடியாய் திரியச்செய்வதோ கிரந்தெழுத்து.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


நிகழ்ச்சியின் இன்னும்பிற மின்படங்கள் 





























அன்றையதினமே மாமதுரைக் கவிஞர் திரு செயராமன் அவர்களின் 'செந்தமிழால் ஒன்றுபடுவோம்' என்கிற காவடி சிந்து கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடந்தது.. அதன் மின்படங்கள் இதோ .... 














 

Monday, 5 June 2017

மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதை போட்டி ..


மாமதுரைக் கவிஞர் பேரவை நடத்தும் கவிதை போட்டி ..
விவரம் இதோ ...
அல்லது 4.6.17 தினமலர் நாளேட்டில் பார்க்க வேண்டுகிறேன்.


நன்றி , வணக்கம்..