Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Monday, 25 September 2017

தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு - புதுக்கவிதை


தமிழ்காக்கக் கொட்டு முரசே கொட்டு
புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 

பெற்றெடுப்பது தாயின் கடமை
பேணிக் காப்பது யாரின் கடமை?
தமிழ் மொழி தமிழர்களின் உடமை
தலையாய் காப்பது தமிழரின் கடமை!

முரசுக் கொட்டி ஊரைக் கூட்டுகிறோம்
முந்தி வந்து தமிழமுதைச் சுவைக்கிறோம்
ஆகா ஓகோ வெனப் புகழ்கிறோம்
அடுத்த நொடியே அதனை மறக்கிறோம்.

நித்தம் காலத்தின் கோலம் மாறுது
சத்தமில்லாமல் மாற்றங்கள் அரங்கேறுது
அஃதில் தமிழ் மொழியும் சிக்கித் தவிக்குது
இருந்த இடம் தெரியாமல் அழியப் போகுது.

தமிழர்களே! உறங்கியதுபோதும் விழித்து எழு
தமிழ் மொழி அழியப்போவதை அறிவால் தடு
தமிழ்காப்பேனென ஓங்கி ஒலித்துச் சபதம் எடு
தமிழ் காக்கக் காலம் அளிக்கும் இறுதிக் கெடு.

கணினித் தமிழை கற்றிடச் செய்வோம்
கணினியில் தமிழ் இணையம் வளர்போம்
கடலாய்த் தமிழில் படைப்புகளை ஏற்றுவோம்
கால ஓட்டத்தில் தமிழை அழியாமல் காப்போம்.

#################









































































































 நன்றி