Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Wednesday, 26 March 2014

இன்றைய தினம் இனிமையாய் இருக்க - TODAY IS A SWEET DAY FOR YOU

இன்றைய தினம் இனிமையாய் இருக்க !
                            
     TODAY IS A SWEET DAY FOR YOU !

               
                       புதுக்கவிதை 

                
                  மதுரை கங்காதரன் 


காலையில் விழித்தவுடன் கண்ணாடியில் பார்
இன்று சாதனை செய்யப் போகும் நாயகன் தெரிவான்

சில வினாடி புன்னகை கொள்
வெற்றி வாழ்த்தைப் பெற்றுக்கொள் 

நிகழ் காலம் உனது கையில் 
எண்ணுக தினமும் நம்பிக்கையுடன் 

நல்லது நடக்கும் நீங்கள் நினைப்பது போல் 
நிச்சயம் கிடைக்கும் பல வெற்றிகள் 

தோல்விகளை நினைத்து துவண்டுவிடாதே 
பிரச்சனைகளைக் கண்டு பயந்து விடாதே 

இன்றைய பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை  
நேற்றைய மனிதன் போராடி வெற்றி பெற்றதே 

                            

ஏன் உன்னால் தீர்க்க முடியாது? சந்தேகம் வேண்டாம் 
தடைகளை வெல்லும் அறிவு , ஆற்றல் உன்னிடம் உண்டு 

எது சின்ன பிரச்சனை ! எது பெரிய பிரச்சனை !!
நாம் எடுத்துக் கொள்ளும் விதம் தான் 

துணிந்து எதிர்த்தால் தூசு போலாகிவிடும் 
பயந்து ஒதுங்கினால் மலை போல் உயந்து விடும் 

உறவு இருப்பவர்களுக்கு உறவே பிரச்சனை 
உறவு இல்லாதவர்களுக்கு 'உறவு இல்லாததே'  பிரச்சனை 

பொருள்  இருப்பவர்களுக்கு அதை காப்பாற்றுவது பிரச்சனை 
பொருள் இல்லாதவர்களுக்கு 'அது இல்லாததே' பிரச்சனை 

                                   

காதல் புரிவோருக்கு கல்யாணம் பிரச்சனை 
காதல்  வாய்ப்பு கிடைக்காதவருக்கு அதுவே பிரச்சனை 

மணமுடிந்தவருக்கு  இன்பமாய் வாழ்வது  பிரச்சனை 
மணமுடிக்காதவருக்கு 'மணமாகவில்லையே' என்ற பிரச்சனை 

குழந்தை  செல்வம் கிட்டியவர்களுக்கு வளர்ப்பதில் பிரச்சனை 
குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் இல்லாதது பிரச்சனை 

கல்வி  கற்றவருக்கு அதன்படி நடப்பதில் பிரச்சனை 
கல்வி கல்லாதவருக்கு படிப்பறிவு வராதது  பிரச்சனை 

                                        

சிந்தனை கொண்டவர்களுக்கு  செயலில் பிரச்சனை 
சிந்தனை இல்லாதவர்களுக்கு செயல்படுத்துவது  பிரச்சனை 

வேலையில் உள்ளவருக்கு தக்கவைப்பதில் பிரச்சனை 
வேலை இல்லாதவர்களுக்கு அது கிடைக்காதது  பிரச்சனை 

பதவியில் வகிப்பவர்களுக்கு சுற்றியுள்ள எதிரிகளின் பிரச்சனை 
பதவி வகிக்காதவர்களுக்கு பதவி கிடைக்காதது பிரச்சனை

இருப்பது எதுவோ அதை அனுபவிப்பதில் பிரச்சனை 
இல்லாதது எதுவோ அதுவே பிரச்சனை 

இறப்பைச் சந்திக்காத வீடும் இல்லை 
பிரச்சனை இல்லாத மனிதனும் இல்லை 

                                    

உனக்கிருக்கும் பிரச்சனை போல் 
மற்றொருவனுக்கு இல்லாமல் இருக்கலாம் 

அவனுக்கு இருக்கும் பிரச்சனை போல் 
உனக்கில்லாமல் இருக்கலாம் 

பிரச்சனையின் உருவங்கள் மாறியிருக்கலாம் 
பிரச்சனையின் பெயர்கள் மாறியிருக்கலாம் 

பிரச்சனையின் அளவும் மாறியிருக்கலாம் 
பிரச்சனை பிரச்சனை தான் அதில் மாற்றமில்லை 

                                           

இன்றைய தினம் இனிமையாய் இருக்க 
இக்கணம் முதல் நிகழ்காலத்தில் வாழப் பழகு

அதோ பார் உன்னை நோக்கி வருது வெற்றித் தேர்
உன்னை அழைத்துப் போக ஓடி வருது

தேரில் ஏற பிரயாசைப் படு
நம்பிக்கையோடு விடாமுயற்சி கொள்

உனது மனதை இதயத்தை விசாலமாக்கு
உனக்கு வழிகாட்ட நான் இருக்கிறேன்

வீறுகொண்டு எழு !
                      
வெற்றி உனதே !

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நன்றி ... வணக்கம்...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

No comments:

Post a Comment