Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Saturday, 13 December 2014

மரணம் கூட சுகமே! DEATH IS ALSO SWEET!

மரணம் கூட சுகமே!
DEATH IS ALSO SWEET!
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
 

தாய்க்கு பிள்ளை சுகம்
பிள்ளைக்கு தாய் சுகம்

ஆணுக்குப் பெண் சுகம்
பெண்ணிற்கு ஆண் சுகம்

வெயிலுக்கு குளிர் சுகம்                  
குளிருக்கு வெயில் சுகம்

காதலுக்கு திருமணம் சுகம்
திருமணத்திற்கு காதல் சுகம்

கொடுத்ததை வாங்குவதில் சுகம்
வாங்கியதை கொடுப்பதில் சுகம்

படிப்பதை பார்ப்பதில் சுகம்
பார்ப்பதை படிப்பதில் சுகம்

எழுதுவது கற்பனைக்குச் சுகம்
கற்பனைக்கு எழுதுவது சுகம்

அன்புக்கு அறிவு சுகம்
அறிவுக்கு அன்பு சுகம்

இருளுக்கு வெளிச்சம் சுகம்
வெளிச்சத்திற்கு இருள் சுகம்

இல்லாதவர்களுக்கு நம்பிக்கை சுகம்
நம்புவது இல்லாதவர்களுக்கு சுகம்

கனிக்கு காத்திருப்பதில் சுகம்
காக்க வைப்பது கனிக்கு சுகம்

நினைப்பது மனதிற்கு சுகம்
மனதிற்கு நினைப்பது சுகம்

நிலத்திற்கு வானம் சுகம்
வானத்திற்கு நிலம் சுகம்

இளமைக்கு முதுமை சுகம்
முதுமைக்கு இளமை சுகம்


முதுமைக்கு மரணம் கூட சுகம்
மரணத்திற்கு மறுபிறவி சுகமோ சுகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++






1 comment:

  1. தங்களின் கவிதையைப்
    படிப்பது
    சுகமோ சுகம்

    ReplyDelete