Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Sunday, 25 January 2015

எங்கும் தமிழ்! எழுத்திலும் தமிழ்! - PUTHU KAVITHAI

எங்கும் தமிழ்! எழுத்திலும் தமிழ்!
           மதுரை கங்காதரன் 
பூவின் அழகு ! அதன் இதழ்களில்
வானத்தின் அழகு !நிலவு விண்மீன்களில்
மயிலின் அழகு! அதன் தோகைகளில்
தமிழின் அழகு ! அதன் எழுத்துகளில்.

பெற்ற தாய் இருக்க மாற்றான் தாயை நாடலாமா?
தேனிருக்க சர்க்கரை நீரை அருந்தலாமா?
குயிலிருக்க காக்கையின் கீதம் ரசிக்கலாமா?
தனித்தமிழிருக்க பிறமொழி கலப்பு இனிக்குமா?

பிறமொழி நுழைவால் தமிழ் பேச்சு மாறிப்போச்சு
தமிழ் மொழி பெருமை சவப்பெட்டியில் மூடியாச்சு
தனித்தமிழ் எழுத்துக்கள் தாளம் மாறிப்போச்சு
எங்கும் தமிழ்! மாறி எங்கே தமிழ்? நிலைமை வந்தாச்சு

தமிழ் எழுத்திற்கும் சொல்லுக்கும் வேலி போடு
பிறமொழி எழுத்திற்கும் கலப்பிற்கும் தடைபோடு
தமிழ் மொழிக்கும் எழுத்திற்கும் மதிப்பு கொடு
சிங்கார தமிழ் வளர்ச்சிக்குத் துனணயாய் இரு

பிறமொழி எழுத்திற்கும் கலப்பிற்கும் தடைபோடு
தமிழ் மொழிக்கும் எழுத்திற்கும் மதிப்பு கொடு
சிங்கார தமிழ் வளர்ச்சிக்குத் துனணயாய் இரு

விழித்திடு தமிழா! புதுமைகளை புகுத்திடு தமிழா புகுத்திடு!
கணினித் தமிழை வளர்த்திடு தமிழா வளர்த்திடு
அறிவியல் தமிழை தந்திடு தமிழா தந்திடு
எங்கும் தமிழ் ! எழுத்திடும் தமிழை பரப்பிடு தமிழா பரப்பிடு!

வாழ்க தமிழ்!
வளர்க தமிழ்!
வெல்க தமிழ்!

*********************************************************************************************

*********************************************************************************************

No comments:

Post a Comment