Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Sunday, 3 January 2016

இடி மின்னல் தாங்கும் இதயம் - புதுக்கவிதை

      இடி மின்னல் தாங்கும் இதயம் 

                         புதுக்கவிதை 

                 மதுரை கங்காதரன் 

வானத்தில் மாற்றங்கள் இருக்கலாம்  
உன் எண்ணத்தில் மாற்றம் கூடாது 

கடலில் கூட சீற்றம் உண்டாகலாம் 
உன் உணர்வில் சீற்றம் கூடாது 

நிலத்தில் அதிர்வுகள் ஏற்படலாம் 
உன் இதயத்தில் அதிர்வுகள் கூடாது 

காலம் தோல்வியைத் தரலாம் 
உன் செயலில் தோல்வி கூடாது 

எதிர்பாராதது சில நடக்கலாம் 
தன்னம்பிக்கை இழக்கக் கூடாது 

உடலில் சோர்வுகள் உண்டாகலாம் 
மனதில் சோர்வு கூடாது 

உழைப்பு உன்னை ஏமாற்றலாம் 
சத்தியம் தவறக் கூடாது 

நாளை உலகம் அழியலாம் 
கடமை செய்ய தவறக் கூடாது 

உனது ஆயுள் முடியலாம் 
உனது புகழ் அழியக் கூடாது 

நிழல் கூட வராமல் போகலாம் 
நேர்வழியை தவறக் கூடாது 

இறைவனும் உன்னை கைவிடலாம் 
நம்பிக்கை கை விடக் கூடாது 

நினைப்பது நடக்காமல் போகலாம் 
நடப்பது தவறக் கூடாது  

வார்த்தைகள் தவறி வரலாம் 
வாய்மை தவறக் கூடாது 

99999999999999999999999999999999999999999999999999999999999

No comments:

Post a Comment