Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Wednesday, 2 March 2022

கிடைக்கும்- முடியும் -வரும்- நடக்கும்- நம்பு - புதுக்கவிதை - மதுரை கங்காதரன்

                           கிடைக்கும் - முடியும் - வரும் - நடக்கும் - நம்பு

                                                        புதுக்கவிதை

                                                 மதுரை கங்காதரன்

தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்!

இறைவனின் பாதிபலம் கிட்டும்!


விடாமுயற்சி செய்து கொண்டிரு!

இறைவனின் முழுபலம் கிட்டும்!


கிடைக்கும் என்று நம்பு! 

கிடைப்பதற்கு விடாமுயற்சி செய்!


முடியும் என்று நம்பு!

முடிப்பதற்கு விடாமுயற்சி செய்!


வரும் என்று நம்பு!

வருவதற்கு விடாமுயற்சி செய்!


நடக்கும் என்று நம்பு!

நடப்பதற்கு விடாமுயற்சி செய்!


நெஞ்சினில் துணிவு கொள்!

மனதினில் பயத்தைத் தவிர்!


எக்கணமும் விழிப்புடன் இரு!

எதையும்  துணிந்து செய்!

 

வாய்ப்புகளைத் தவற விடாதே!

வம்புகளுக்குத் துணை போகாதே!


நல்ல செயலுக்குப் போராடு!

நன்மைக்கு நீ பாடுபடு!  


வாழ்க்கை உன் காலடியில்!

வெற்றி உன் கையில்!

************




No comments:

Post a Comment