Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Sunday, 21 December 2014

ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்! -THINK ABOUT CREATION AND DEVASTATE

"ஆக்கமும் கேடும் நினைக்கப்படும்!"

THINK ABOUT CREATION AND DEVASTATE

                     புதுக்கவிதை
                 மதுரை கங்காதரன்
              
 பொறுமை அன்புமய ஆக்கம் வேண்டும் 
பொறாமைக் கேடை பொசுக்க வேண்டும் 
வளமான ஆக்கத் திட்டங்கள் வேண்டும் 
களமிறங்கி செயல்களைச் செய்திட வேண்டும் 
விலைவாசி ஏறாத நாட்கள் வேண்டும் 
நிலையான வாழ்க்கை எந்நாளும் வேண்டும் 
லஞ்சம் வாங்கா மனிதர்கள் வேண்டும் 
பஞ்சமில்லா உலகு செய்திடல் வேண்டும் 
       
ஊழல் கலவா அரசியல் வேண்டும் 
நிழல் மரங்களாக நிலைக்க வேண்டும் 
கொடுமை பலாத்காரம் ஒழிக்க வேண்டும் 
புதுமை பெண்களாய் மாற்றம் வேண்டும் 
கல்வி விழிப்புணர்வு அமிழ்தம் வேண்டும் 
வேள்வியினால் அறியாமையை அகற்ற வேண்டும் 
கறுப்புப் பணத்தை கைப்பற்றல் வேண்டும் 
உருகும் ஏழைகளுக்குத் உதவிடல் வேண்டும் 
         
ஆக்கச் சிந்தனை இளைஞர்கள் வேண்டும் 
காக்கும் கரங்களாய் நம்பிக்கை வேண்டும் 
கணினியில் தமிழ்மய ஆக்கம் வேண்டும் 
மணியாக வலைத்தளத்தில் பதிந்திட வேண்டும் 
தமிழை உலகில் பரப்பிட வேண்டும் 
தமிழுக்கு வரும் கேட்டை அழிக்க வேண்டும் 
ஆக்கமான செயல்கள் சமுதாயத்திற்கு வேண்டும் 
மூர்க்கமான கேடிற்கு முடிவுரை வேண்டும் 
******************************************

No comments:

Post a Comment