Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Sunday, 21 December 2014

நினைவோ ஒரு ஊஞ்சல் MEMORY IS A SWINGER

நினைவோ ஒரு ஊஞ்சல்

   MEMORY IS A SWINGER
         புதுக்கவிதை
      மதுரை கங்காதரன்
       
நினைவோ ஒரு ஊஞ்சல்
ஆடும் போது ஆனந்தம்
மோதும் போது வெறுக்கும்

நினைவோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கும் போது உற்சாகம்
உட்காரும் போது மௌணம்

நினைவோ ஒரு வாத்து
நீந்தும் போது இன்பம்
மூழ்கும் போது துன்பம்

நினைவோ ஒரு மங்கை
காதலித்தால் இனிக்கும்
கடிந்து கொண்டால் கசக்கும்

   
நினைவோ ஒரு மது கோப்பை
பலவீனம் அடைந்தால் தள்ளாடும்
குடித்து பழகினால் குடியும் மூழ்கும்

நினைவோ ஒரு மானுடம்
இளமையில் வேகம்
முதுமையில் சோகம்

நினைவோ ஒரு தாய்
வந்தாலும் வரவேற்கும்
வராவிட்டாலும் பூஜிக்கும்
 
நினைவோ ஒரு கோமாளி
சில சமயத்தில்  சிரிக்க வைக்கும்
பல சமயத்தில் முட்டாளாக்கும்

நினைவோ ஒரு இராட்டினம்
மேலே உயரும் போது  வாழ்த்தும்
கீழே இறங்கும் போது மிதிக்கும்

நினைவோ ஒரு சுரங்கம்
தோண்டினால் புதையல்
சும்மா இருந்தால் மண்

நினைவோ ஒரு மாயை
நடக்குமென இருந்தால் நடக்காது
நடக்காதது நடந்துவிடும்

 
நினைவோ ஒரு கடவுள்
அள்ளிக் கொடுக்கும்
கிள்ளி எடுக்கும்

நினைவோ ஒரு அதிசயம்
நடந்து விட்டால் பணக்காரன்
நடக்காவிட்டால் பிச்சைக்காரன்
 
நினைவோ ஒரு கவிதை
சில வேளையில் ராஜகீதம்
பல வேளைகளில் சோககீதம்

நினைவோ ஒரு தொடர் கதை
முடிவது போல் தொடரும்
தொடர்வது போல் முடியும்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


No comments:

Post a Comment