Pages

Monday, 21 October 2013

HAPPY DEEPAVALI WISHES TO ALL OF YOU ! உலக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!




உலக மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!  

புதுக்கவிதை 
மதுரை கங்காதரன் 


தீப ஒளித் திருநாளாம் தீபாவளியாம்!

புத்தாடை உடுத்தி மகிழ்வார்களாம்.

பட்டாசு போட்டு  வெடி வெடிப்பார்களாம் 

கடல் அலையாய் கூட்டம் கூடுமாம் 

அரிதானவர்களை அன்று பார்க்கலாமாம் 

உறவினர்கள் பலரும் ஒன்று சேர்வார்களாம்  

நண்பர்களை விருந்துக்கு அழைப்பார்களாம்  

சிறுவர்கள் ஆடிப் பாடி விளையாடுவார்களாம் 

வேலை செய்பவர்களுக்கு 'போனஸ்' பெறுவார்களாம் 

தொழில் செய்பவர்களுக்கு 'லாபம்' கிடைக்குமாம்    

புதுத்திரைப்படங்கள் தியேட்டர்களில் ஓடுமாம் 


இளைஞர்கள் வாகனத்தில் பவனி வருவார்களாம் 

கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவார்களாம் 

சாதி சமய இன வேறுபாடில்லாமல் கொண்டாடுவார்களாம் 

ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலை மோதுமாம்.

கடைகள் போட்டி போட்டுத் 'தள்ளுபடி'  கொடுப்பார்களாம் 

ஏழைகள் இந்த நாளில் தான் புத்தாடை வாங்குவார்களாம் 

இந்த நாளில் தான் அவர்கள் பலகாரம் செய்வார்களாம் 

இந்த நன் நாளில்பலருக்கு பரிசுகள் கொடுப்பார்களாம் 

அனாதை இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க வைப்போம்

இனிப்பு வழங்கி அவர்களோடு கொண்டாடுவோம் 

முதியோர் இல்லங்களில் சோகத்தை துரத்துவோம் 

தானங்கள் கொடுத்து மனித நேயத்தை வளர்ப்போம் 

நாட்டின் ஒற்றுமையை இதன் மூலம் காட்டுவோம்..

*******************************************************************************************
நன்றி, வணக்கம்..

*******************************************************************************************
DEAR WORLD PEOPLE! 
HAPPY DEEPAVALI WISHES TO ALL OF YOU !

MADURAI GANGADHARAN


Colourful lights are seen in this Deepavali Festival 

All are happy by wearing new dresses

Fire crackers are lighted by all aged categories

People are gathered like ocean

Rare persons are seen in this occasion

All relations are united in in the festival time

Given special hospitality to all friends
Children and kids are playing and dancing happily

Working people are getting 'Bonus' for that year 

Owners are seeing 'Profit' in this festival season

Many new films are released in this time

Youngsters are rounding their area with bikes

Go to the temple and Worship the God with family 

Celebrate this festival irrespective of religion and caste

Crowd seen in all stores, shops and textiles showrooms 

Sell their goods with competitive by giving 'Reduction' 

This is the only day poor are wearing new cloths

Poor are making sweets and preparing tiffin this day only 

Giving presentations and gifts to all their relative and neighbors 

We give gift to orphanage and make them happy

By giving sweets to them and celebrate this festival

Going to old-age home and make them happy 

Giving donations and shows our humanity   

Show our national integrity through this festival.  

*******************************************************************************************


62. (Run) n X (Down) m = (Win) n x m - 62. (ஓடு ) n X (விழு ) m = (வெற்றி) n x m


HAVE A NICE LIFE STEPS

MADURAI GANGADHARAN

62. (Run) X (Down) m = (Win) n x m 

* Run.... Run... Down.... Run... Down.... Down.. Run behind Success..

Down.... Down.... Run...... Down....Run... Down...Down....Achieve your Goal..

Run X Down = Win

(Run) X (Down) m = (Win) n x m

* In your life , always don't be dependent on a person or a company. Because you don't know when he or that company will say ' No ' to you. At that time, your work and experience will help you. So love your work !

* Do not keep past wastefully happening in your mind. It will loose your present happiness and will forgot your future duties.

* If you have seen with any one colour of mirror, then you see any object in that same colour. You do not know any colour difference in seeing object. Alternatively, if you have seen with white mirror then you can see all objects in it's original colour. 

* In olden days it was very difficult to enter in to the business . But easy to prolong in the business. Nowadays It 's easy to enter into the business . But it is very difficult to retains in the business. 

Success life steps continues next...

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 

62.  (ஓடு ) X (விழு ) m = (வெற்றி) n x m

* ஓடு ... ஓடு...விழு ...ஓடு.... விழு ... விழு ... வெற்றியின் பின்னால் ஓடு ..

  விழு ...விழு ....ஓடு .... விழு .... ஓடு.... விழு .... விழு .... இலட்சியத்தை அடை ..

  ஓடு  X விழு  = வெற்றி 

  (ஓடு ) X (விழு ) m = (வெற்றி) n x m


* உனது வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு நபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ நம்பி இருக்காதே! ஏனென்றால் அவரோ அல்லது அந்த நிறுவனமோ எப்போது உன்னை 'வேண்டாம்' என்று சொல்லும் என்று தெரியாது. அந்த சமயத்தில் உனக்கு கை கொடுப்பது உனது வேலையும் , அனுபவமும் தான். ஆகவே உனது வேலையை நேசி!

* வீணான பழைய நிகழ்சிகளை மனதில் வைத்துக் கொள்ளாதே ! அது நிகழ்கால மகிழ்ச்சியையும், வருங்கால கடமையை மறக்கச் செய்யும்.

* உன் மனக்கண்ணாடி ஒரே நிறத்தை கொண்டிருந்தால் நீ பார்ப்பது அனைத்தும் ஒரே நிறமாகத் தெரியும். வேறுபாடு எதுவும் தெரியாது. இதற்கு மாறாக உன் மனக்கண்ணாடி நிறமில்லாமல் வெள்ளையாக இருந்தால் நீ பார்ப்பதனைத்திலும் சரியான நிறம் தெரியும்.

* முன்பெல்லாம் வியாபாரத்தில் நுழைவது மிகவும் கடினம். நுழைந்துவிட்டால் நீடிப்பது சுலபம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வியாபாரத்தில் நுழைவது எளிது. ஆனால் நீடிப்பது மிகவும் கடினம்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்....

)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

61. WHO IS RULING? WHO IS RULED BY WHOM? - 61. யார் ஆளுகிறார்கள்? யார் யார் ஆளப்படுகிறார்கள்?


HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

61. WHO IS RULING? WHO IS RULED BY WHOM?


* Which is not to talk, not to write, not to read all of that what 80 % of people are doing.Their thoughts and actions how it will be good .


* People are ruling who is having knowledge. But working people are ruled by them.  


* If you sow the confident seeds in your thoughts of the fertile land, then you must harvest the success.


* A man who is feared by you. Also you don't show affection towards him. 


* Happy ways for living

--- > Work hard in the youth stage .

--- > Play but limit.

--- > Do not worry what others says about you !

--- > Get happy with what you are having. 

--- > Do not do harm to anyone !

--- > Do not be angry forever !

Success life steps continues next...

********************************************************************************************************************************


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள்

 
மதுரை கங்காதரன் 

61. யார் ஆளுகிறார்கள்? யார் யார் ஆளப்படுகிறார்கள்?


* எதை பேசக்கூடாதோ , எதை எழுதக் கூடாதோ , எதை படிக்கக் கூடாதோ  அதைத் தான் 80% மக்கள் செய்கிறார்கள்.பின் அவர்களின் எண்ணங்களும், செயல்களும் எப்படி நல்லதாக இருக்கும்?


* அறிவை உபயோகிப்பவர்கள் ஆளுகிறார்கள்! உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகிறார்கள்.


* எண்ணங்கள் என்னும் விளைநிலத்தில் நம்பிக்கை வித்துக்களை ஊன்றினால் கட்டாயம் வெற்றியை அறுவடை செய்யலாம்.


* ஒருவன் எந்த மனிதனைக் கண்டு அஞ்சுகிறானோ அவனிடத்தில் பாசம் இருப்பதில்லை.


* மகிழ்ச்சியாய் வாழும் வழிகள் 

---> இளவயதில் கடுமையாய் உழை.

​​​---> அளவோடு விளையாடு

---> பிறர் என்ன சொன்னாலும் கவலை கொள்ளாதே !

---> வாழ்வில் கிடைத்தது எண்ணி மகிழ்ச்சி கொள் .

---> எவருக்கும் கெடுதல் செய்ய எண்ணாதே !

---> எப்போதும் கோபம் கொள்ளாதே !

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

********************************************************************************************************************************


   

60. GET SUCCESS FROM GROUND, SEA OR EVEN IN SKY ! - 60. வெற்றியை நிலம்,கடல் மற்றும் ஆகாயத்திலிருந்து பெறு !


HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN


60. GET SUCCESS FROM 
GROUND, SEA OR EVEN IN SKY !


* Past is past. Alert now. Today is the day to start your tomorrow's success journey.

* Working groups are getting money in their hand and enjoying the life. But luck expecting groups are seeing money in the mirror and getting satisfaction.


* Constantly re-evaluate your surrounding and the method of style that you are using to reach your goal. Sometime you have learn from it and find a better way to do it the next time.


* We should defined our goal what ever the cost may be. We shall get it in the ground, we shall get it the sea even in the sky also. Any way, we shall never give up.


* Time is also a killer . If you are not handle the time properly it will eat you.  

Success life steps continues next.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
60. வெற்றியை நிலம்,கடல் மற்றும் ஆகாயத்திலிருந்து பெறு !


* சென்ற நாட்கள் போகட்டும். இப்போது விழித்துக்கொள்! இன்றைய நாள் நாளைய 'வெற்றி அடையும் நாள்' என்று எண்ணி பயணத்தைத் தொடங்கு.

* உழைப்பாளிகள் கையில் பணத்தைப் பெற்று வாழ்கையை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து நிற்பவர்களோ முகம் பார்க்கும் கண்ணாடியில் பணத்தை பார்த்து வாழ்கையில் திருப்தி அடைகிறார்கள் மேலும் பெருமூச்சு விடுகிறார்கள்.


* உங்களைச் சுற்றி நடப்பவைகளை மற்றும் உங்கள் குறிக்கோளை அடையும் முறையினையும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பரிசீலிக்க வேண்டும். தேவைபட்டால் அந்த வழியை மாற்றியோ அல்லது மேம்படுத்தவும் செய்யலாம். ஆனால் ஒவ்வொரு தடவையும் நீங்கள் அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்வதோடு அடுத்த தடவை நல்ல புதிய வழிகளை கடைபிடிக்க செய்யும்.


* எவ்வளவு மதிப்பு இருந்தாலும் பரவாயில்லை. நாம் நம்முடைய குறிக்கோளை அடைவதற்கு தக்க வழியினை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அது நிலத்தில் தேடினாலும் சரி ! கடலில் கிடைத்தாலும் சரி ! அல்லது ஆகாயத்தில் இருந்தாலும் சரி! ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் நாம் நமது கொள்கையிலிருந்து பின்வாங்கக் கூடாது.


* 'நேரம்' ஒரு கொலைகாரன் தான்! அதை நீ சரியாக கையாளவிட்டால் அது உன்னைக் தின்று விடும்.



வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^