Saturday, 27 April 2013

சிரிப்புச் செய்திகள் - NEWS FOR JOKES - (சிரிப்புக்காக) - இது நம்ம சானல்

சிரிப்புச் செய்திகள் 
NEWS FOR JOKES
(சிரிப்புக்காக)
இது நம்ம சானல் 

சிரிப்புச் செய்திகளை பார்த்து கேட்டு வயிறு வலிக்க சிரிக்க இருக்கும் அத்தனை தூய இதயங்களுக்கு இந்த கோமாளி -எக்ஸ் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் வருவது தலையில்லாத செய்திகள்..

                

* இரு சக்கரவாகனங்கள் இரண்டு  நேருக்கு நேர் முத்தம் கொடுத்ததில் இரு ஓட்டுனர்களின் கன்னங்கள் சற்று வீங்கியது.

செய்தி விவரம் : இந்த மோதல் திட்டமிட்டே மோதல் என்று தெரிய வந்துள்ளது. மோதியதில் ஒருவர் பெண் என்றும் மற்றொருவர் ஆண் என்பது சுவாரஷ்யமான தகவல். மேலும் இருவரிடத்த்தில் விசாரித்ததில் நீண்ட நாட்களாகவே மோதுவதற்கு முயற்சி செய்ததாகவும் இப்போது தான் இந்த மோதல் முத்தமாக மாறியதில் கூடுதல் மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார்கள்..  

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


* சென்னையிலிருந்து மதுரை செல்லும் இரயில் தண்டவாளத்தில் மதுரை நெருங்கும் இடத்தில் சிறிய கல்  இருந்ததால் மீண்டும் சென்னைக்கே திரும்பியது.செய்தி விவரம் : சென்னையிலிருந்து மதுரை சென்றுகொண்டிருந்த இரயில், மதுரையை நெருங்கும் போது சிறிய கல் தண்டவாளத்தில் இருந்தததால் மீண்டும் அந்த இரயில் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது. இந்த கல் காக்காயோ அல்லது கழுகோ போட்டிருக்கலாம் என்று அங்குள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

*******************************************************************************


* நிடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் ஒரு இறக்கை கழன்று விழுந்ததில் விமானம் பல குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு தரை இறங்கியது. அதிசயமாக எல்லோரும் தப்பித்தனர்.. சிலரின் பேட்டி இதோ..

                 

நிரூபர்: நீங்க எப்படி இந்த பயங்கரமான விபத்திலிருந்து தப்பித்தீர்கள்?

பயணி : விபத்தா? சான்ஸே இல்லை. இது வெறும் சர்கஸ்.விமான ஓட்டி (பைலட்) இந்த மாதிரி ஒரு இறக்கை கழன்று கீழே விழுந்து விட்டது. அதை எடுக்கிறதற்காக குதிக்கப் போகிறேன். ஒன்றும் கவலைப் படாதீர்கள். விமானம் பல குட்டிகரணம் போட்டு தரை இறங்கும். யார் ஒருவர் இந்த விமானம் எவ்வளவு குட்டிக்கரணம் போட்டது என்று சரியாகச் சொன்னால் ஒரு பரிசு தருவதாக சொன்னார்.   

நிரூபர்: (ஆவலாக) எவ்வளவு குட்டிக்கரணம் போட்டது? யார் சரியாகச் சொன்னார்கள்? பரிசு கிடைத்ததா?

பயணி : சரியாக பதினெட்டு குட்டிக்கரணம் போட்டது. நான் தான் சரியாகச் சொன்னேன். இதோ எனக்கு இந்த 'குரங்கு பொம்மை' பரிசாகக் கிடைத்தது.

=======================================================================


*  பிரபல அரசியல் தலைவர் கட்சிக்கூட்டத்தில் 'காதல் கவிதை' படித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

செய்தி விவரம்: எப்போதுமே அந்த தலைவரின் 'செயலர்' தலைவர்  கூட்டத்தில் எவை பேசவேண்டும் என்பதை தொகுத்து எழுதிக்கொடுப்பது வழக்கம். அன்றைய தினம் அவர் தனது காதலிக்காக ஒரு கவிதையும் எழுதி வைத்திருந்தார்.  கவிதையும், கூட்டத்தில் பேசுபவையும் இடம் மாறிவிட்டன. அதாவது அவசரத்தில் காதலிக்காக எழுதிவைத்திருந்த பேப்பர் அவரது பையில் வைத்துவிட்டார். அவர் வாசித்த காதல் கவிதை வரிகள் இதோ..

விலைவாசி போல் எட்டாத 
உயரத்தில் இருக்கும் என் கண்ணே!
உன்னை காணவே ஓடி வர நினைக்கிறேன்.
மன வேகத்தில்  எனது உடல் வரமாட்டேன் 
என்று அடம் பிடிக்கிறதே!..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


*  பிரபல நகை கடையின் கதவுகளை உடைத்த திருடர்கள்  நகைகள் ஏதும் திருடிச் செல்லவில்லை என்ற ஆச்சரியப்படவைக்கும் தகவல்.

செய்தி விவரம்: பிரபல நகைக்கடை பஜாரில் இயங்கிவரும் நகை கடை ஒன்றில் திருடர்கள் நகைகளை கொள்ளையடிக்க கதவுகளை கஷ்டப்பட்டு உடைத்தனர். பிறகு தான் அந்த கொள்ளையருக்கு தெரிந்தது. அதாவது அந்த கடை முதலாளி ஏற்கனவே எல்லா நகைகளை எடுத்துக்கொண்டு கம்பியை நீட்டிவிட்டார் என்று. அதனால் அந்த முதலாளி மீது வழக்கு போடுவது பற்றி யோசித்து வருகிறார்..  

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


* லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்களைக் கண்டித்து 'லஞ்சம் வாங்கும் அமைப்பு' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செய்தி விவரம்: 'லஞ்சம்' என்பது ஒரு நாட்டின் புனிதமான வார்த்தை. கடவுள் கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் லஞ்சம் இல்லாமல் இருக்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட லஞ்சத்தை வேண்டாம் என்று சொல்லுகிற அரசு ஊழியர்களை எங்கள் லஞ்சம் வாங்கும் அமைப்பு கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது.. இவ்வாறு அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

               

*வீடு மற்றும் அனைத்து ஹோட்டல்களில் இனிமேல் வட்டவடிவில் தோசை சுட்டு விற்கக்கூடாது என்ற கடுமையான சட்டம் அமுலுக்கு வந்தன.

செய்தி விவரம்: எதிர் கட்சியின் சின்னம் வட்டமான தட்டு. ஆனால் ஆளும் கட்சி சின்னமோ சதுரமான தட்டு. இதை கருத்தில் கொண்டு இச்சட்டம் கொண்டு வந்ததாக நம்பத் தகுந்த வட்டாரம் தெரிவித்தது.  

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((())))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))


                            

* நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் இரு அணியில் உள்ள அனைவரும் 'முட்டை' ரன் எடுத்து உலக சாதனை. மேட்ச் 'டை' யில் முடிந்தது.

செய்தி விவரம்:

நிரூபர்; நீங்க எல்லோரும் சொல்லி வச்சாப்பிலே எப்படி 'முட்டை' ரன் எடுத்தீங்க?

ஒரு அணித் தலைவர்: பொதுவாகவே எனக்கு வாத்து முட்டை பிடிக்கும். அதனாலே தான் இந்த சாதனை!

நிரூபர்: (அடுத்த அணி தலைவரிடத்தில்) அவங்களுக்கு வாத்து முட்டை பிடிக்கும்னு சொன்னாங்க? நீங்களும் கேவலம் ஒரு ரன் கூட எடுக்காமல் எல்லோரும் 'முட்டை' ரன் எப்படி எடுக்க முடிஞ்சது?

அதன் அணித் தலைவர்: அவங்களுக்கு வாத்து புடிக்கும் னா எங்களுக்கு கோழி முட்டை பிடிக்கும். தட்ஸ் ஆல்..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


* பூவா? தலையா? போட்டு அடுத்தமாதம் அணுமின் நிலையம் ஓடுமா? ஓடாதா? என்று நீதிபதி குழு அறிவிப்பு.

செய்தி விவரம்: கால் பந்தாட்ட போட்டி முடிவு ஒரு 'ஆக்டோபசி' மீன்  சொல்லும்போது நாம் ஏன் பூவா தலையா ? போட்டு தீர்ப்பு சொல்லக்கூடாது? என்று நீதிபதி குழு சரமாரி பதில்..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

                                        

*  பிரபல நடிகைகள், நடிகர்கள்   முத்தமிட்ட மாம்பழம் , ஆப்பிள் , கொய்யா , மாதுளை போன்ற  பழங்கள் மார்க்கெட்டில் அமோக விற்பனை..

  
செய்தி விவரம் : பிரபல நடிக நடிகைகளின் உடைகள், பிரபல படம் மற்றும் சீரியல் பெயர் கொண்ட உடைகள் தான் நமக்குத் தெரியும். ஆனால் இப்போது பிரபல நடிக நடிகையர்களின் முத்தமிட்டப் பழங்கள் சந்தையை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு வருகின்றது. அதை பற்றிய சிறு தொகுப்பு இதோ..

நிரூபர்: ஏற்கனவே பழங்களின் விலை அதிகம். இப்போது 'முத்தமிட்ட பழம் ' ரொம்ப அதிகமாக இருக்குமே?

மக்கள்: விலையைப் பற்றி யாருக்குக் கவலை. இந்த மாதிரி பழம் முதல்லே கிடைக்குமா?

நிரூபர்: முத்தமிட்டது என்று எப்படி நம்புறது?

மக்கள்: இப்படி கேப்பீங்க என்று தெரியும். அதாவது ஒவ்வொரு பழத்திலேயும் இதோ சிவப்பு நிறத்திலே உதடு அச்சு இருக்குதே?

நிரூபர்: யாரோட உதடு எப்படி தெரியும்?

மக்கள்: இதோ பாருங்க சார்ட். ஒவ்வொரு நடிக நடிகைகளின் உதட்டின் அளவு!

நிரூபர் : (மனதிற்குள் ) உங்களை திருத்த அந்த ஆண்டவனாலும் முடியாது. நான் வர்றேன்...   

#############################################################################

No comments:

Post a comment