Pages

Monday 4 February 2013

REALIZE YOUR MISTAKE IS LEADED FREE FROM SIN - நீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது

நீ செய்த தவறை உணரும் போது கடவுளின் மன்னிப்பு கிடைகிறது - 
REALIZE YOUR MISTAKE IS LEADED FREE FROM SIN

அனுபவப் பொன்வரிகள் 
மதுரை கங்காதரன் 

ஒரு மனிதன் தவறு செய்வது தவிர்க்க முடியாத ஒன்று தான். தவறே செய்யாதவன் கட்டாயம் மனிதனாக இருக்க முடியாது. ஆனால்  தவறு செய்வதே வாழ்க்கையாய் இருந்தால் அந்த மனிதன் வாழ்வதில் அர்த்தம் இருக்குமா? அவனிடத்தில் உண்மை, நேர்மை, அன்பு இருக்குமா? ஒருவர் சிறிய அளவில் தவறு செய்கின்ற போதே அவர் திருத்திக் கொள்ளாவிட்டால் , பின்னால் அதனால் பெரிய பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


இதற்கு எளிமையான உதாரணம் ஒன்று என்னால் சொல்ல முடியும்.

கீழ் கண்ட சாதாரண வாக்கியத்தை படித்து அர்த்தம் கூற முடியுமா?


IF I BECAME A DACTAR, I WILL TREAT PAAR PEAPLE WITHAUT MANEY.

உங்களால் எவ்வளவு பெரிய அகராதியை புரட்டிப் பார்த்தாலும்   இந்த வாக்கியத்திற்கு அர்த்தம் சொல்ல முடியுமா? வார்த்தையில் இலக்கணம் சரியாக இருக்கின்றதா ? இல்லை. ஏனென்றால் இந்த வாக்கியத்தில் உள்ள சில வார்த்தைகள் தவறாக இருக்கின்றது. சரியான வாக்கியம் இதோ...

IF I BECOME A DOCTOR, I WILL TREAT POOR PEOPLE WITHOUT MONEY.

இதன் அர்த்தம் : நான் மருத்துவரானால் ஏழை மக்களுக்கு பணமில்லாமல் மருத்துவம் செய்வேன் என்பது.


அதாவது 'O'  (ஒ) என்கிற எழுத்திற்கு பதிலாக 'A' என்ற எழுத்து 'கீ ' செய்யப்பட்டு இருக்கின்றது. ஒரே ஒரு எழுத்து தவறி அடிக்கும்போது (கணினியில்) அந்த எழுத்து சார்ந்த அனைத்து வார்த்தைகளும் அர்த்தமில்லாத தவறான வார்த்தையாக மாறிவிடுகின்றது. அந்த ஒரு எழுத்து பிழையால் இலக்கணம் இல்லாமல் போய்விடுகின்றது. ஓரிரு வரியில் இந்த பிழை இருந்தால் அதை உடனே திருத்திவிடலாம். இதுவே பல பக்கம் அடங்கிய புத்தகமாக இருந்தால் அவ்வளவு எளிதாக திருத்திவிட முடியாது. அவ்வளவு பாடுபட்ட அனைத்து வேலையும் வீண் தான். 


இந்த தவறுக்கு சில காரணங்களும் அதன் தீர்வுகளும்:

1. விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ;

கணினியில் அடிக்கும்போது சரியாக கவனிக்காமல்  'O'  (ஒ) என்கிற எழுத்திற்கு பதிலாக 'A' நினைத்து அடிப்பது.

2. தவறாகவே கொடுப்பது (தவறான வழிகாட்டுதல்):

வேலை கொடுப்பவர்கள் அவர் தவறுதலாக அடித்து, அதன் படியே அடித்து கொடுக்கச் சொல்வது.    

3. அடிக்கும் 'கீ ' போர்டில்  'O'  (ஒ) என்கிற எழுத்திற்கு பதிலாக 'A' யும்  ,  'A'   என்கிற எழுத்திற்கு பதிலாக 'O' யும் மாறி இருப்பது :

கணினியிலேயே தவறுதலாக எழுத்து மாற்றி இருப்பது.

இதற்கான தீர்வு, ஒருதடவைக்கு இரண்டு தடவை சரி பார்ப்பது. சரியான வார்த்தைகளை தெரிந்து வைத்துக் கொள்வது. தவறு ஆரம்பிக்கும்போதே அதை திருத்தி அடிப்பது. 

தெரியாமல் செய்கின்ற தவறுகளுக்கு மன்னிப்பு எப்போதும் உண்டு. அதேபோல் தவறை உணரும்போது கூட. ஆனால் அந்த தவறு பிறரின் உடலுக்கோ அல்லது மனதிற்கோ காயப்படாமல் இருதால்.. ஆனால் தெரிந்து  செய்கின்ற தவறுக்கு எப்போதும் தண்டனை உண்டு.  
தவறுகளை நீ உணர்ந்தாயானால் அதற்குண்டான தண்டனைகள் குறைக்கப் படும். மேலும் மேலும் தவறுகள் செய்வதால் உடலும், மனதும் பாழ்பட்டு நிம்மதி இழக்க நேரிடும்.


 ஆகவே தவறு செய்வதைத் தவிர்.


1 comment: