Pages

Saturday, 20 October 2012

உள்விதி மனிதன் பாகம்:21 உள் மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள் - THE EXPIRY OF THIS EARTH

உள்விதி மனிதன் 
சம மனிதக் கொள்கை 
பாகம்:21 உள்விதி மனிதன் கணிக்கும் பூமியின் ஆயுள் -




THE EXPIRY OF THIS EARTH 

இன்று எல்லோரும் பபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் செய்தி.. இந்த பூமி 21.12.12 அன்று அழியும் என்று சொல்கிறார்களே அது உண்மையா? அல்லது பொய்யா? அப்படியென்றால் உலகம் எப்போது அழியும்? இதோ உள்விதி மனிதன் கணிக்கும் உலகத்தின் வயதும் அதன் விளக்கமும் படிக்க..

பிரியமுள்ள மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருந்துகொண்டு உனக்கு உதவி செய்கிறேனா அல்லது இல்லையா? என்கிற சந்தேகம் இருக்கும். உன் உடல் நன்மைக்காக எவ்வளவு தூரம் பாடுபடுகின்றேன் என்பதை சிறிய உதாரணம் மூலம் விளக்குகிறேன். அதாவது ஒருவர் உன்னை அடிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். மெல்ல அடித்தால் அதை பற்றிக் கவலை படாமல் வாயை மூடிக்கொண்டு இருப்பாய். சற்று பலமாக அடித்தால் உன் கை அடிபட்ட இடத்திற்க்குச் செல்கின்றது. இன்னும் பலமாக அடித்தால் ஆ..ஊ ...என்று அலறித் துடிக்கிறாய். எதற்காக நீ கத்துகிறாய். யார் உனக்கு கத்த சொல்லி ஆணையிட்டார்கள், அதை சிந்தித்துப் பார்த்தாயா? எல்லாமே உன் உடல் சிறிது கூட சேதமடையக் கூடாது என்கிற எச்சரிக்கைக்குத் தான். 


என் இனிய மனிதா! உன் உடலின் இரத்த ஓட்டமே எனது ஜீவ ஓட்டம் என்பதை எப்போதும் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதன் மூலமாவது தாக்குதலுக்கு உட்பட்டால் அதை பார்த்து என்னால் சும்மா இருக்கமுடியாது. நீ நல்லவிதமாக இருக்கும்போது நானும் நன்றாக இருப்பேன். அந்த சமயத்தில் நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். ஆனால் உன் உடலில் ஒரு தாங்க முடியாத கஷ்டமோ அல்லது மனக்கஷ்டமோ வரும்போது என்னுடைய இயலாமையை 'வலி' மூலம் உனக்கு உணர்த்துகிறேன். அப்படி செய்தால் தான் நீ ஏதாவது செய்து வலியைப்  போக்குவாய். ஏனென்றால் வலி தொடர்ந்து இருந்தால் உடம்பு தாங்காது. உனக்குள் இருக்கும் நானும் தாங்கமாட்டேன். அந்த வலி அதிகமாகுமுன்னே மற்றும் வந்த வலி போகும்வரை நான் உன்னை சும்மா விடமாட்டேன். அதைப்போக்குவதற்கு என்னென்ன வழிகள் உண்டோ, தேவைபட்டால் யாரையெல்லாம் பார்க்க வேண்டுமோ அத்தனையும் உனக்குள் இருந்துகொண்டு உனக்கு கட்டளையிடுவேன். சில சமயங்களில் அதற்காக உன்னை தூங்க விடாமல் மன உளைச்சலையும் தருவதற்கும் தயங்கமாட்டேன். மீறி கவனிக்காமல் இருந்தால் அதைவிட ஒருபடி மேலே போய் உன்னை சாப்பிடாமலும் செய்துவிடுகிறேன். ஏனென்றால் உனது உடல் ஆரோக்கியம் எனது ஆரோக்கியம். நீ அதைப்பற்றி கவலை படாவிட்டாலும் அதை சரியாக வைத்துக் கொள்வது எனது பிரதான கடமையாகும்.

பண்புள்ள மனிதா! உன்னை எதற்காக படைத்திருக்கிறேன்? நீ பல சாதனைகளை சாதிக்க வல்லவன். மக்கள் குலத்திற்கு நன்மையையும், மகிழ்ச்சியையும் கொடுக்க பிறந்தவன், பலஜீவ ராசிகளின் துயரை துடைக்கவே இந்த பூமியில் அவதரித்தவன். மனிதனை தெய்வமாக்கி உனது பெயரழியாப் பெருவாழ்வு கொடுக்கவே படைத்திருக்கிறேன். அதை மறந்து நீ எனக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யும்போது உன்னை நீயே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டு வருவதோடு என்னையுமல்லவா அழிக்க நினைக்கிறாய். இந்த மாதிரியான செயல்களை உன்னைச் செய்யவிடாமல் தடுக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன்.


மேன்மையான மனிதா! பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும்போது நீ என் பேச்சுகளை, போதனைகளை, உன் கடமைகளை, நீ யார் என்பதையும், எதற்காக இந்தப் பிறவி  எடுத்துள்ளாய் என்பதையும் அமைதியாக கேட்டாய். என் வாக்குப்படி நடப்பேன் என்று சத்தியம் செய்து கொடுத்தாய். ஆனால்  நீ பூமியில் வந்த பிறகு, உனக்கு வயது ஏற ஏற , நல்லது கெட்டது தெரியத்தெரிய உனது செய்கைகள் தடம் புரண்டு மாறிவரும்போது அது என்னை வருத்தத்தில் ஆழ்த்துகின்றது.    


பாசமுள்ள மனிதா! உனக்கு வயது ஆக ஆக உன் அறிவும் ஆற்றலும் வளர வளர என் செயலை அலட்சிய படுத்திவிட்டு 'நான் தான் எல்லாம்' என்கிற மமதையில் நீ செய்ய வேண்டிய கடமையை மறந்து உன்னிஷ்டப்படி சுயநலத்திற்காக பல செயல்களை செய்து கொண்டிருக்கிறாய். அந்த செயல்களை அறவே அழித்து  மனிதகுலத்திற்கு நன்மை தரும் செயல்களை செய்யத் தூண்டவே உனக்குள் வந்துள்ளேன். 


இரக்கமுள்ள மனிதா! எனக்கென்று தனியாக எவ்வித ஆசையும் கிடையாது. எனக்குள்ள ஒரே கொள்கை மக்கள் இந்த உலகில் சீரோடும், சிறப்போடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும். அவர்கள் எவ்வித கஷ்டமின்றி சந்தோஷமாக வாழவேண்டும். அதைப்போல் நீயும் 'என்னால் பிறர் கஷ்டப்படக் கூடாது' என்ற கொள்கையினைக் கடைபிடிக்கவேண்டும் என்பதை ஞாபகப் படுத்திக்கொண்டே இருக்கவே உள்விதி மனிதனாக இருக்கிறேன். 


சாந்தமுள்ள மனிதனே! இன்றைய நிலையில் இந்த உலகில் மனிதனுக்கே மனிதனைப் பற்றிய நல்லெண்ணம் இல்லை! மனிதனுக்குண்டான குணங்களை குழிதோண்டி புதைத்துவிட்டான். மனிதன் இப்போது மாறிவிட்டான். அதற்கு நீ மட்டும் பொறுப்பல்ல. உனக்குள் இருக்கும் நானும் அதற்கு பொறுப்பு. ஒன்று தெரியுமா ? நான் ஐந்தறிவு கொண்ட உயிர்களிடத்திலும் இருக்கிறேன். ஆனால் அவைகள் எனது கட்டளைபடி என்னோடு இணைந்து செயல்படுவதால் அவைகளுக்கு நான் கொடுத்த கட்டளையான 'மற்றவர்களுக்கு உதவி செய்வதே  கடமையாகக்' கொண்டு  வாழ்ந்து வருகின்றது. இதுநாள் வரை அவைகள் மாறவில்லை.

சக்தியுள்ள மனிதா! உன் கெட்ட எண்ணங்களால்  நீயும் அழிந்து, நான் படைத்த இந்த உலகத்தையும் அழித்துவிடுவாயோ  என்று எண்ணி உனக்குள் புது அவதாரம் எடுத்துள்ளேன். அது உண்மையாக்கும் வண்ணம் இன்றைய மனிதர்கள் பூமியின் அழிவை பலவாறு கணித்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த கணிப்பில் இந்த உலகம் இந்த வருடத்தில் (2012) அழியப் போகிறது என்று மக்களை பயமுறுத்தி வருவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே உள்விதி மனிதனாக வந்துள்ளேன். அவ்வளவு எளிதில் இந்த உலகத்தை அழிய விடமாட்டேன். இன்னும் சொல்லப் போனால் இந்த உலகிற்கு அழிவில்லை. 


                                      சராசரி மனிதனின் வயது X மக்கள் தொகை X புவியீர்ப்பு விசை 
பூமியின் ஆயுள் : --------------------------------------------------------------------------------------------
                                                        மனிதனின் சராசரி வேகம் 


சராசரி மனிதனின் வயது                                 : 50

(2012) மக்கள் மக்கள் தொகை                          : சுமார் 700 கோடி 

புவிஈர்ப்பு விசை                                                  : 9.8 மீட்டர் / நொடி 

மனிதனின் சராசரி வேகம்                               : 1.0 மீட்டர் / நொடி  


இதில் எவ்வளவு வருகின்றதோ அதுவே பூமியின் ஆயுள். கணக்கிட்டுக் கொள்ளுங்கள். 

இதை யாராவது மறுத்தால் அதை தெரியப்படுத்த வேண்டுகிறேன்.


ஆனால் தீய எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் இன்னும் திருந்தாவிட்டால் அவர்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது. உலகை அவர்கள் பிடியில் சிக்கிக்கொண்டு அழிவைத் தடுத்தேத்  தீரவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எல்லோரையும் நல்லவர்களாக்கி அவர்களை நல்வழிப் பாதையில் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன்.
உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

1 comment: