Pages

Saturday 4 August 2012

சேமிப்பு எதற்காக வேண்டும் - நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!

              நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!

                    

                   சேமிப்பு எதற்காக வேண்டும்?  

                             


நமது வாழ்க்கை நாட்கள் மெதுவாக போகின்றதாக எண்ணிக்கொள்ளதீர்கள். அது ஜெட் வேகத்தில் பறப்பதை உணருங்கள். உங்களது பள்ளி, கல்லூரி வாழ்க்கை என்னவென்று முழுவதும் தெரியுமுன்னே அல்லது நன்றாக அனுபவிக்கு முன்னே ஓரளவு மகிழ்ச்சியுடன் கழிந்துவிடுகிறது. பிறகு ஏதோ ஒரு வேலை அல்லது நல்ல வேலையில் சேர்ந்த பிறகு தினமும் பர பரவென்று 'வேலை, வேலை' என்பதில் மூழ்கி அந்த எண்ணங்க மாதங்கள் நாட்களாகவே கழிந்து ஓடிவிடுகிறது. 


பிறகு கல்யாணம், குழந்தைகள் என்று வாழ்க்கை விரிய விரிய அன்றாட தேவைக்கான செலவுகளை சமாளிப்பதக்குள் முழி பிதுங்கிவிடுகிறது. அவசர தேவைக்கான செலவுகளை சரி செய்ய வட்டிக்கு கடன் வாங்கியோ அல்லது வீடு, நகைகளை அடைமானம் வைத்து சமாளிக்கின்றனர். அதில் எதிர்கால தேவைக்கு எப்படி எதிர்கொள்வது என்பது பலருக்கு நினைத்துப் பார்க்கவே பயமாய் உணர்கிறார்கள். அதை பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் தினமும் வாழையடி வாழையாய் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறனர். தலைமுறை தலைமுறையாய் விதி என்று எண்ணி சிரமப்பட்டு திண்டாடுகின்றனர். அந்த பரம்பரை கஷ்டத்தை தீர்க்கவே இன்று முதல் சேமிக்க ஆரம்பியுங்கள்.       

                                                                                                                   


                   சம்பாதிக்கும் வழிகள் :



'திரை கடல் ஓடி திரவியம் தேடு' அதாவது கடல் கடந்து வியாபாரம் செய்து பொருட்களை தேடிக்கொள். அது இந்த தலைமுறையினருக்கு நன்றாகவே பொருந்தும். வேலைக்காக பலர் சர்வ சாதரணமாய் பல தெரியாத, மொழி புரியாத நாடுகளுக்கு சென்று மாடாய் உழைத்து வீட்டிற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்து பணத்தை அனுப்புகிறார்கள். அந்த வீணாக்காமல் நல்ல வழியில் சிக்கனமாக எப்படி , எந்த வழியில் பாதுக்காப்பாக சேமிப்பது என்று இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

                               

உழைத்த பணத்தை நல்ல வழியில் சேமிப்பீர்!

வாழ்கையில் நிம்மதியை தேடிக்கொள்வீர் !                                          

******************************************************

தொடரும் ...     

             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

      

No comments:

Post a Comment