Pages

Monday, 22 October 2012

பாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம் INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS


கடவுள் எப்போதும் என் பக்கம்


 ( சம மனித கொள்கை) - 


பாகம்:22 உள் மனிதனின் அனுபவம் கோடிக்கணக்கான வருடம் 
INNER MAN'S EXPERIENCE IS CRORES OF YEARS


பிரிய மனிதா! இந்த உள் மனிதன் சொல்வது அனைத்திலும் உனக்கு உடன்பாடு இருக்கும் என்று நினைக்கிறேன். மனிதனுக்கு மனிதன் மேல் நம்பிக்கை இல்லை. மனிதனை மனிதன் பகையாளியாக பார்கிறான். எதனால்? எல்லாமே பேராசை மற்றும் புகழுக்காக. இந்த பூமி இதைவிட பேராசை பிடித்தவர்களும் , புகழுக்காக எதையும் செய்ய துணிந்தவர்களும் வாழ்ந்து அழிந்த சரித்திரத்தை  இன்றும்  மக்கள் மறக்கவில்லை என்றே சொல்லலாம். அவர்கள் போட்ட 'பகைமை' விதை, நாட்டிற்க்கு நாடு பகையைத் தூண்டிவருகின்றது. அதன்மூலமாக  அந்த நாட்டை பிடிக்கும் ஆசை, அங்குள்ள செல்வங்களை கொள்ளையடிக்கும் பேராசை, மக்களை வதைக்கும் செயல் இன்னும் தொடர்கின்றது. அது ஒருவழியாக குறைந்துவிட்டது எனலாம். ஆனால் அதுவே வேறுவிதமாக  ஒரு நாட்டின் தலைவர் மக்களை பலவழிகளில் கொள்ளை அடிக்கும் நிலைமையை இன்று காண்கிறோம். அதுவும் நிலைமாறி நாட்டுக்கு நாடு பகை என்று போய் இன்று அந்த தொத்து வியாதி மாநிலத்திற்கு மாநிலம் பகையாக உருமாறியும், வீடுகளுக்குள்ளேயும் பகைமை விதை வேரூன்றி வளர ஆரம்பித்திருக்கின்றது. இப்படியே இருக்கவிட்டால் உன்னில் இருக்கும் எனக்கும், உனக்கும் அந்த பகைக்கு ஆளாகி இந்த உலக மக்களை அளிப்பதோடு நில்லாமல் , இந்த பிரபஞ்சத்தில் மனிதனுக்கு சொர்கமாக திகழும் இந்த பூமியையே அளித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. 


என் இனிய மனிதா! இந்த காரணமாகத் தான் நானாக இந்த உள் மனிதனை உனக்கு மீண்டும் அறிமுகம் செய்து , மக்கள் இழந்த சந்தோஷத்தை, நிம்மதியை, மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுப்பதற்கு வந்துள்ளேன். உன் மூலமாக அதை நிறைவேற்றும காரண கர்த்தாவாகவும் மாறிவிட்டேன். இனி என் விருப்பபடி , உன் துணை கொண்டு அனைத்தையும் செவ்வனே செய்து இந்த உலகத்தின் சுபிட்சதிற்க்கு உன்னுள் அடிக்கல் நாட்டிவிட்டேன். 


பிரியமுள்ள மனிதா! 'உனக்கு என்ன என்னைவிட  அதிகமாக  திறமை மற்றும் அனுபவம் இருக்கின்றதா?' என்று எள்ளி நகையாடலாம் அல்லது சந்தேகமாகவும் இருக்கலாம்! எனது பிறப்பு, எனது ஆயுள், எனது அனுபவம் இன்றும் , இனிமேலும் யாராலும் கணக்கிடமுடியாது. நான் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டேன். நான் தான் இறப்பற்றவன். ஒரு உயிரிலிருந்து மற்றொரு உயிருக்கு செல்பவன். அப்படியென்றால் உனக்குள் இருக்கும் இந்த உள்மனிதனின் பயணம் இதற்குமுன் எங்கெங்கெல்லாம் இருந்துவந்திருப்பேன், நான்  அவர்களிடத்திலிருந்து எவ்வகையான அனுபவங்களை பெற்றிருப்பேன் என்று இப்போது சொல்கிறேன் கேள்! பலப்பல அறிஞர்கள், பெரியோர்கள், மகான்கள், முனிகள், ரிஷிகள், அரசர்கள், தலைவர்கள், ஆன்மீகவாதிகள் சிந்தனைசிற்பிகள், அறிவியல் மேதைகள், பொருளாதார நிபுணர்கள், வியாபாரமேதைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதனால் தான் இப்போது பிறக்கும் குழந்தைகள் கற்கால குழந்தையாக இல்லாமல் செல்போன்களைக்கூட எளிதாக கையாள்கிறது. அதற்கு பிறப்பிலே அத்தனை அறிவு, திறமை எங்கிருந்து வந்தது. பலவகையான மொழிகள் பேசுகின்றன. அவைகளெல்லாம் என் அறிவு, என் ஆற்றல் படி , எனது சொல்படி, எனது அனுபவப்படி நடப்பதால் வந்திருக்கின்றது.


என்பாசமுள்ள மனிதா! இறப்பவர்களுடைய ஜீவ ஓட்டம் நின்றாலும், அந்த ஜீவன் அதை விட்டுவிட்டு புதிதாக பிறக்கப் போகும் ஜீவனை இயக்கவல்லது. அதற்கு ஜீவ ஓட்டம், ஆன்ம ஓட்டம் கொடுக்க வல்லது. அந்த ஓட்டம் தான் உன்னுடைய உடம்பில் இரத்த ஓட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அவர்களுடைய எண்ணங்கள், திறமைகள், ஆற்றல் எல்லாமே உனக்குள் புதைந்து இருக்கின்றன. உனக்குத் தேவையானதை நீ இந்த உள் மனிதன் மூலமாக எளிதாக பெற்றுக்கொள்ளலாம். அதற்கு நான் உனக்கு உதவி செய்கிறேன். அவைகளை கொடுத்து உன்னை மகிழ்ச்சியடையச் செய்வதே எனது குறிக்கோள். 


பண்புள்ள மனிதா! அனைவருக்குள்ளும் எனது கோடிக்கணக்கான ஆண்டுகளின் அனுபவங்கள் ஒளிந்து இருக்கின்றன என்று இப்போதாவது புரிந்து கொண்டாயா! அந்த அற்புத சக்தியினால் தான் முட்டாள்களும் திடீரென்று மேதையாகின்றனர். இயற்கையில் ஒரு கூழாங்கல் வைரமாக மாறாது. ஆனால் மனிதனில் அந்த அற்புதங்கள் நடக்கும். நேற்று வரை ஏழையாய் இருந்தவன் திடீரென்று பணக்காரனாக மாறுக்கிறான். எல்லாம் இந்த உள் மனிதனின் செயலால் தான். ஆனால் எல்லாவற்றையும் நான் கொடுத்திருந்தாலும் நீ அதிலிருந்து கொஞ்சம் தான் எடுத்துக் கொண்டிருக்கின்றாய். இன்னும் இருக்கும் விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை எடுத்துக்கொள்ள மறுக்கிறாய்.


இரக்கமுள்ள மனிதா! அதனுள் பெரியோர்களின் நீதிபோதனைகள், வற்றாத செல்வங்கள் அடையும் வழிவகைகள் , நீதிமான்களின் சட்டங்கள், பல அரசர்களின் வெற்றிவழிகள், வீர தீரச் செயல்கள், உலக கல்விகள், மக்களுக்காக நேர்வழியில் உழைத்த தலைவர்களின் எண்ணங்கள், விஞ்ஞான அறிஞர்களின் அறிவியல் சாதனைகள், தொழில் நுட்பம், மருத்துவம் மற்றும் கலைகளில்  சிறந்தவர்கள், விவசாயிகள், பலத்தரப்பட்ட தொழிலாளர்களின் கஷ்ட நஷ்ட அனுபவங்கள், முதலாளிகளின் எண்ணங்களும் செயல்களும் இவைகள் அனைத்தும் அடங்கும். உனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்.   


மதிப்புமிக்க மனிதா! சில மனிதர்கள் பல நூல்கள் கற்று கல்விமானாக ஆவதும் , கடின உழைப்பில் செல்வச் சீமானாக விளங்குவதும், நாடு போற்றும், மக்கள் போற்றும் தலைவராக ஜொலிப்பதும், அரிய பெரிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து உலகுக்கு கொடுக்கும் அறிஞராக போற்றுவதும் , சத்திய வழியில் ஆன்மீக குருவாக மக்களுக்கு பல நன்மைகள் செய்வதும், சில நாட்டுத்தலைவர்கள் நல்லாட்சி நடத்துவதும் எப்படி ஏற்ப்படுகின்றது. இவைகளெல்லாம் எனது அனுபவ அறிவை தந்து அதன் ஆற்றலை வெளிப்படுத்துவதால் தான் எனபதை தெரிந்து கொள்.


இனிய மனிதா! இவர்கள் இப்படியிருக்க சிலர் கெட்ட வழியை தேர்ந்தெடுத்து உலகத்தையும், உலக மக்களையும் மாசுபடுத்துகின்றனர். அந்த மாதிரியான எண்ணங்களை அழிக்கவே எல்லோரிடத்திலும் உள் மனிதனாக வந்திருக்கிறேன். நல்ல மனிதர்கள் சிலர் இருப்பதனால் தான் ஓரளவாவது மழை பெய்கின்றது. பூமி நனைகின்றது. மக்கள் வயிறு நிறைகின்றது. ஓரளவு மகிழ்ச்சி கிடைகின்றது. 


இனிமையான மனிதா! நீ எப்படி முன்னேறினாலும் , எதை படைத்தாலும், எதை கண்டுபிடித்தாலும் என்னைவிட அதிகமாக முன்னேறிவிடமாட்டாய் . ஆகவே உனது முன்னேற்றங்களை நல்லவழியில் பயன்படுத்தி மக்களுக்கு பல நன்மைகள் கொடுத்து வாழ்க்கையை சிறப்படையச் செய்யவே உனக்குள் இருக்கிறேன்.

உள்மனிதனின் கோடி ஆண்டு அனுபவம் உனக்கு கிடைக்கும் விலைமதிப்பற்ற பொக்கிஷம் ! 


    உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.   

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

No comments:

Post a Comment