வெற்றிக்கு ஆம் / இல்லை முடிவில் நம்பிக்கை தேவை
தன்னம்பிக்கை கட்டுரை
இந்த உலகில் வாழ்வதற்காக பிறந்துவிட்டோம். கட்டாயம் உயிர் உள்ள வரையில் வாழ்ந்தே தான் தீரவேண்டும்.ஆனால் பலர் வாழ்கையை ஏதோ ஒரு கடன் என எண்ணி அதை கஷ்டப்பட்டு ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தீர விசாரித்து முடிவெடுக்க நேரமின்மையால் கண்ட காட்சிகள் யாவும் உண்மை என நம்புகிறான். பேசுவதெல்லாம் உண்மை என நம்பி கேட்கிறான்.அதன் படி நடக்கவும் செய்கிறான். ஆனால் அவன் மனம் கூட தான் கண்ணால் பார்ப்பவர்களை நினைத்து 'இவர்கள் இவ்வளவு அருமையாய் வாழ்கிறார்களே ! இவ்வளவு அருமையாய் பேசுகிறார்களே! நாமும் இவர்களைப்போல் வாழ்வோமா? இவர்களைப் போல் நம்முடைய வாழ்வு இருக்குமா ? ' என்று தினமும் எண்ணி எண்ணி ஏங்குகிறான். இன்பமான வாழ்வுக்கும், சுகங்களை அனுபவிப்பதற்கும் அவர்கள் பேசியபடி நடக்க ஆரம்பிக்கிறான் . ஆனால் நடைமுறையில் பின் பற்றிய பிறகு அவர்கள் பேசிய படி அவன் வாழ்வில் நடக்காது போகவே 'என் வாழ்வில் கஷ்டங்கள் கொஞ்சம் கூட மாறவில்லையே ! என்று வருத்தப்படுகிறான். பலவேளைகளில் 'என் வாழ்வு என்னாகுமோ' என்கிற பயம் அவனுடைய ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. அதிலிருந்து தப்பிக்க அல்லது வெளிவர தினமும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு அவன் வாழ்கையின் அநேக நேரத்தை போரட்டத்திலே நிம்மதி இல்லாமல் கஷ்டதுடனே வாழ்ந்து கழித்து வருகிறான்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், எவ்வளவு தோல்விகள் அடைந்தாலும் எவ்வளவு ஏமாற்றங்கள் ஏற்ப்பட்டாலும், எவ்வளவு துன்பங்கள் மற்றும் இறக்கங்கள சந்தித்தாலும் வாழ்வதிலேயிருந்து பின் வாங்க முடியுமா ?
அனுபவிக்கத்தான் வாழ்க்கை என்பது 100 % உண்மை. ஆனால் பலர் சுகத்தை அனுபவிப்பதற்கு பதிலாக கஷ்டத்தை அல்லவா அனுபவிக்கிறார்கள். அதிலேயிருந்து விடுபட வழியைத் தேடி அலைகிறார்கள். செல்லும் வழியெல்லாம் முட்பாதைகள். அதை கடப்பதற்கு அவன் மனம் தயாராக இருந்தாலும் அவன் உடம்பு அதை கடக்க மறுக்கிறது.
எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் மனத்தை திடப்படுத்திக் கொண்டு அந்த கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் தனது பயணத்தை தொடர்ந்து கடக்கிறான். அவனுக்குள்ளே ஏதோ ஒரு மூலையில் கடுகளவு நம்பிக்கை. அதாவது 'தன்னம்பிக்கையோடு செய்யும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும் ' என்ற பல சாதனையாளர்களின் வாக்கு என்றாவது ஒரு நாள் மெய்படும்' என்பதால் தன வாழ்க்கையினை நம்பிக்கையோடு தொடர்கிறான்.
மனதிற்கு இரண்டே விஷயங்கள் தான் தெரியும். அதாவது 'வேலையை செய் ' என்று சொல்லும். அல்லது ' வேலையை செய்யாதே' என்று சொல்லும். இதை 'நினை ' அல்லது 'நினைக்காதே ' என்று கூறும். 'அங்கே போ ' அல்லது 'போகாதே ' என்று எச்சரிக்கும். இது தான் மனதின் குணம். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் நேர்மறை எண்ணங்கள் அல்லது திர்மறை எண்ணங்கள் இந்த இரண்டு தான் மனதுக்கு தெரியும். இந்த இரண்டிற்குமிடையில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் எதை தேர்ந்தெடுப்பது என்பது குழம்பி தடுமாறி தவிக்கிறான். எதனாலென்றால் நண்பர்கள் ஓன்று சொல்லியிருப்பார்கள். தான் கேள்விப்பட்ட சாமியாரிடம் கேட்டபோது அவர் ஓன்று கூறியிருப்பார். குடும்பத்தார்கள் ஒரு வழியை காட்டியிருப்பார்கள்.இப்படி ஆளுக்கொரு வழி சொல்லும்போது அவன் மனம் குழப்பத்திற்குள்ளாகி அவனுடைய எண்ணங்கள் சிதறி முடிவில் ஏனோதானோவென்று அரைகுறை மனதுடன் ஒரு முடிவை கடைசி வினாடியில் எடுக்கிறான். பிறகு தான் அவனுக்கு தெரிகிறது அது தவறான முடிவு என்று. அதன் பிறகு தனக்குத்தானே நொந்துகொண்டு தன்னுடைய தோல்விக்கான காரணத்தை மற்றவர்கள் மீது போட்டுவிட்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறான்.
இதை எளிதாக விளக்கலாம். 'ஒரு பூட்டுக்கு ஒரு சாவி இருக்கின்றது ' என்று வைத்துக் கொள்வோம். பூட்டு உனது வாழ்கையைக் குறிக்கின்றது. சாவி என்பது உனது எண்ணத்தை பிரதிபலிக்கிறது. திறக்கும் திசை உனது முடிவை (நேர்மறை அல்லது எதிர்மறை) காட்டுகின்றது. பூட்டு திறப்பதை வெற்றியையும், பூட்டியே இருப்பது தோல்வியையும் காட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம இப்போது பூட்டை திறப்பது உன் கையில் தான் இருக்கின்றது. அதன் சூட்சமம் சாவியை வலது திசையில் திருகினால் பூட்டு திறந்து கொள்ளும். சாவியை இடது திசையில் திருகினால் பூட்டு பூட்டிக்கொள்ளும். ஏனென்றால் பூட்டுவதற்கு ஒரு சாவியும் திறப்பதற்கு ஒரு சாவியும் இருப்பது இல்லை.
அதுபோலத்தான் வாழ்க்கை. வாழ்க்கையினை சந்தோஷமான பாதையில் பயணிக்கலாம் அல்லது துக்கமான பாதையில் நடக்கலாம். அதை தேர்ந்தெடுப்பது உன் கையில் தான் இருக்கின்றது.
அப்படித்தான் ஒருவன் பயணம் செய்து கொண்டிருக்கும்போது இரு பாதைகள் பிரிந்து சென்றன. ஒரு பாதை 'சொர்க்கம் ' செல்லும் வழி என்றும் எதிர் திசையில் 'நரகம் ' செல்லும் பாதை என்றும் இருந்தது. இரண்டும் ஒரு வழி பாதை. ஒரு முறை ஒரு வழியில் சென்றால் திரும்ப வர முடியாது. ஆகவே பாதையை தேர்தெடுக்கும் போது மிகவும் ஜாக்க்ரதையாக இருக்க வேண்டும்.
அவனோ சொர்கத்தின் திசையை பார்த்தான். அவனுக்கு ஆச்சர்யம். ரொம்ப போனால் ஓரிருவர் தான் சென்று கொண்டிருந்தனர். ஆனால் நரகம் செல்லும் பாதையில் ஏராளமானோர் கூட்டம் கூட்டமாய் வரிசையில் காத்திருந்தனர். அங்கே அவர்களை வரவேற்ப்பதற்க்கு ஆண்களும் பெண்களும் வரவேற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் எல்லோரும் பகட்டான சூழ்நிலையில் கவர்ச்சிகரமான ஆடையணிந்து வசீகர பேச்சில் பலவிதமான வாக்குறுதிகளை அள்ளித்தந்து கொண்டிருந்தனர். அதாவது 'இந்த நரகத்தினுள்ளே அழகிய பூஞ்சோலைகள்,நீர்வீழச்சிகள், பழத்தோட்டங்கள், அறுசுவை உணவுகள், நடன நாட்டிய நிகழ்ச்சிகள், சினிமா, கேளிக்கைகளை அனுபவிக்கலாம்' என்கிற விளம்பரங்கள். அதை கணினி மூலம் வீடியோ மற்றும் போட்டோக்களை காண்பித்துக்கொண்டிருந்தனர். அதைப் பார்ப்பதற்கு முண்டியடித்துக் கொண்டிருந்தனர். அதை பார்த்தவர்கள் எல்லோரும் அஹா ஓஹோவென்று ஆச்சர்யமாகவும் ஆர்வமாகவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் சொர்க்கத்தில் வரவேற்ப்பதற்க்கு ஆட்கள் யாருமில்லை. அங்கிருப்பவர்களிடம் இங்கு அழகிய பூஞ்சோலைகள்,நீர்வீழச்சிகள், பழத்தோட்டங்கள், அறுசுவை உணவுகள், நடன நாட்டிய நிகழ்ச்சிகள், சினிமா, கேளிக்கைகளை அனுபவிக்கலாமா? என்று அவன் கேட்டான். அங்குள்ளவனோ ஓ ! அனுபவிக்கலாமே ! என்று அவன் சொன்ன பதில். 'கிழக்கே போனால் பூஞ்சோலைகள், நீர் சுனைகள் இருக்கின்றது. மேற்கே அறுசுவை உணவுகள், அதற்க்கு மேலே வலது பக்கம் நடன நாட்டிய நிகழ்ச்சிகள், இடது சினிமா மற்றும் கேளிக்கைகளை அனுபவிக்கலாம்' என்றார்.
"அப்படி கண்ணுக்கெட்டிய தூரம் ஒன்றுமே இருப்பதாக தெரியவில்லையே ! எப்படி இருக்கும் என்பதை காட்டுங்கள் " என்றான்.
அதற்கு அவனோ "அவற்றை காட்ட முடியாது. நேரடியாகத்தான் அனுபவிக்க முடியும்" என்ற பதிலில் அவனுக்கு திருப்தி இல்லாமல் இருந்தான். மேலும் 'இந்த சொர்கத்தில் எதுவுiமில்லை போலிருக்குது. அப்படியிருந்தால் ஏதாவது ஒரு போட்டோவாவது வைத்திருக்கலாமே இதனுள்ளே போனால் நாம் அனுபவிக்கமாட்டோம். போவது சுத்த வேஸ்ட்' என்ற முடிவுக்கு வந்து நரக பாதையில் நடந்தான்.
பலத்த வரவேற்ப்புடன் வசிகர பேச்சில் மயங்கி சிரித்துக்கொண்டே உள்ளே காலடி வைத்தான். அவன் காலடி வைத்தது தான் தாமதம். எங்கிருந்தோ இரு அரக்கத்தனமான குண்டர்கள் அலேக்காக ஒரே தூக்கு தூக்கி ஓரிடத்தில் போட்டனர். அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது. அங்கிருப்பவர்கள் கஷ்டத்தை கொடுக்கும் ஆசாமிகள், ரத்தத்தை உறிஞ்சும் அயோக்கியர்கள், உழைப்பை கசக்கி பிழியும் எத்தர்கள். பொக்கிஷத்தை களவாடும் திருடர்கள், கொலைக்கு அஞ்சாத பாதகர்கள், பெண்களை இம்சை படுத்தும் காமுகர்கள். இவர்களிடம் சிக்கிவிட்டோமே ? இவர்களா சுகத்தை கொடுப்பவர்கள் ? இவர்களிடம் வசமாக மாட்டிக்கொண்விட்டோமே ! புலம்பியபடி அங்குள்ளவர்களிடம் கேட்டான்.
" கணினி மூலம் பலவற்றை அழகாக காட்டுனீர்களே, அதன்படி இம்மியளவு இல்லையே " கோபத்தில் கொப்பளித்தான்.
"ஒ.. அதுவா. அவைகளெல்லாம் உங்களை கவருவதற்காகத்தான். ஆரம்பத்தில் இங்கு ஒருவர் கூட வரவில்லை. பிறகு தான் நன்றாக யோசித்து மக்களின் பவீனங்களை ஆராய்ந்தது இந்த மாதிரி ஏற்பா டு பண்ணினோம். வெகுநல்ல பலன் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது. இங்கு உள்ளே வரும் ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து தான் எங்கள் சுகம் இருக்கின்றது .உங்கள் மூளையை மழுங்கடித்து ஆயுள் பூராவும் எங்களுக்கு அடிமையாக்குவதே எங்கள் வேலை. இந்த பொய் , பித்தலாட்ட, ஏமாற்று வேலைகளை நாங்கள் தெளிவாக பிசிறு இல்லாமல் பிசகாமல் செய்து வருகின்றோம். உங்கள் சந்தோஷங்கள் கணினியில் பார்த்ததோடு முடிந்துவிட்டது. இனி உங்களுக்கு எப்போதும் கஷ்டகாலம் தான் " என்ற பதிலை கேட்டு அவன் மூர்ச்சையானான்.
அப்போது தான் அவனுக்குப் புரிந்தது. அந்த சொர்கத்தில் தான் உண்மையான அனைத்து சந்தோஷங்கள் இருக்கின்றது. ஆனால் இங்கு போல் அங்கு பசப்பு வார்த்தைகள் இல்லை. கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இல்லை. ஆண் பெண் வசீகரமில்லை. வெளிப்புறத்தோற்றத்தை ஏமாந்துவிட்டேனே ! என்று அலறினான். இந்த மாதிரி தான் அனைவருடைய வாழ்கையில் நடக்கின்றது.
ஆக ஆம் அல்லது முடிவை எடுக்கும் போது ஒன்றிக்கு இரண்டு தடவை நன்றாக ஆராய்ந்து அறிந்து உனது எதை விரும்புகின்றதோ அதை நம்பிக்கையுடன் துணிந்து செயல்படுத்தவேண்டும். வீண் புகழ்ச்சி, வார்த்தை ஜாலங்கள், கவர்ச்சி வசீகரத்தில் மயங்காமல் மனதை சிதறடிக்காமல் உண்மையான சந்தோசம் தரும் வாழ்க்கைப் பாதையில் எவ்வித கஷ்டமில்லாமல் எளிதாக வாழலாம் . அது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்து இருக்கின்றது.
கிடைக்கின்ற சிறிய தோணி கொண்டு வாழ்க்கை கடலை கடப்பதற்கு தயாராக இருக்கவேண்டும். பெரிய கப்பல் வரும் வருமென்று நினைத்து வாழ்கையின் ஆரம்ப நிலையிலே இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறக்காது. ஆகவே முதலில் திருப்தியான சிறிய வாழ்க்கையினை ஆரம்பியுங்கள்.
வெற்றி பெறுங்கள்.

தொடரும் ...
******************************
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Very Nice
ReplyDeleteமிகவும் நல்லது
ReplyDelete