இது நம்ம சானல் - THIS IS OUR CHANNEL
(புதிய பகுதி) A NEW CHANNEL
இது யாரையும் புண்படுத்தும் நிகழ்ச்சி கிடையாது. முழுக்க முழுக்க கற்பனை தான். தவறு இருப்பின் மன்னிக்கவும்...
பாகம் : 1 நேயர்கள் கடிதம் -
உங்களுக்கு சமைக்க ஆர்வமா?
ஒளிவு மறைவு இல்லாமல் உண்மை பேசும் சானல்!
இப்போது நிகழ்ச்சிக்கு போவோம்.... வாருங்கள்....
இது நம்ம சானல் சார்பாக உங்கள் எல்லோருக்கும் வணக்கம்.
நிலைய இயக்குனர்:
இன்றைய நிகழ்ச்சி - நேயர்கள் கடிதம்.- சென்ற மாதம் ஒலி - ஒளிபரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா? பற்றி நிறைய கடிதம் வந்துள்ளது. முதல் கடிதம் படியுங்கள்...
இன்றைய நிகழ்ச்சி - நேயர்கள் கடிதம்.- சென்ற மாதம் ஒலி - ஒளிபரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா? பற்றி நிறைய கடிதம் வந்துள்ளது. முதல் கடிதம் படியுங்கள்...
முதல் கடிதம் படிக்கிறார்.... நிலைய தொகுப்பாளர்:
சென்ற மாதம் ஒளி -ஒலி பரப்பிய 'உங்களுக்கு சமைக்க ஆர்வமா?' என்ற நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் 'புதுவகை இட்லிகள்' எப்படி செய்வது என்று செய்து காண்பித்தார்கள். அதன்படி ஒன்று தவறாமல் அப்படியே செய்தேன். இட்லி கொஞ்சம் கூட ருசியில்லாமல், ரொம்ப கன்றாவியா இருந்தது. ஆனால் நீங்கள் அதை சாப்பிட்டு விட்டு 'அஹா ரொம்ப அற்புதம் ! இது நாள் வரை இந்த மாதிரி இட்லி என் வாழ்நாளில் சாப்பிடவே இல்லை. என்று புகழ்ந்தீர்கள். அப்படியென்னா உங்க டேஸ்ட் அவ்வளவு கன்றாவியா?' எனக்கு கண்டிப்பா பதில் சொல்லுங்க..
நிலைய இயக்குனர் பதில் சொல்கிறார்.
மன்னிக்க வேண்டும். வந்த கடிதங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட இப்படித் தான் எழுதியிருக்கிறார்கள். தவறு எங்கள் மீது இல்லை. பலர் நிகழ்ச்சியை முழுவதும் கடைசிவரை பார்க்கவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. நிகழ்ச்சியின் கடைசியில் நாங்கள் சொல்ல வந்ததை மீண்டும் உங்களுக்காக ஒலி -ஒளி பரப்புகிறோம். இப்போது... நிகழ்ச்சி கடைசியில்...
..... இதோ பாருங்க ! நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த 'புது வகை இட்லிகள் ' என்று இட்லி கொப்பரையை திறக்கிறார். ஆ .... இட்லி கூழ் போல இருக்கே. எனக்கு மயக்கம் வருதே. பாக்கிறதுக்கே இவ்வளவு மட்டமாக இருக்கே ! இதை சாப்பிட்டு வேறே பார்க்கணும்மா.. என்னால கற்பனை செய்துகூட பார்க்க முடியலே. ஒருவித குமட்டல் வருகிறது. சரி சரி ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சமைச்சு பணத்தை வீணாக்குகிறீங்க ! நேரே உங்கள் தெரு முக்குக்கு போங்க ! நல்ல ஹோட்டலே பார்த்து நுழையுங்க.. நீங்க எதிர்பார்த்த வகை வகையான இட்லியென்ன , தோசையென்ன சட்னி சாம்பாரோடு நல்ல சாப்பிடுங்க.. புது தினுசா சமைக்கிற ஆசை விடுங்க.. மீண்டும் அடுத்த வாரம் 'உப்பு காப்பி' செய்வது எப்படின்னு பிரபல சமையல் கலை நிபுணர் விளக்குவார்.. அதுவரை.. உங்கள் எல்லோருக்கும் வணக்கம் வணக்கம்..
நிலைய இயக்குனர்..இப்போது நேயர்களின் சந்தேகம் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம்.. நேயர்களுக்கு ஒரு வேண்டுகோள். இனிமேலாவது நிகழ்ச்சிகளை முழுமையாகப் பாருங்க.
நன்றி
வணக்கம்...
Ha haha..Super..
ReplyDelete