Pages

Friday 13 July 2012

தியானம் - இலட்சியத்தை அடையும் எளிய வழி

தியான முறையில் இலட்சியத்தை 
அடையும் எளிய வழி  -

 மதுரை கங்காதரன்



தத்துவம் :  நாம் காற்றை  தீவிரமாக சுவாசிக்கும் போது காற்றுடன் காந்தசக்தியும் சேர்த்து சுவாசிக்கிறோம். அவைகள் தான் நமது மனதில் நுழைந்து எண்ணங்களாக மாறி அதுவே நம் இலட்சியத்தை அடையும் சக்தி நமக்கு தருகிறது. அப்படி நடக்கும்போது உங்கள் ஆழ்மனத்தில் அபரீதமான சக்தி சேமித்து வைக்கப்படுகிறது. அப்போது நாம் ஒன்றையே நினைத்து திரும்ப திரும்ப உங்கள் மனதில் உங்கள் இலட்சியத்தை ஒன்ற வைத்து விட்டால் நீங்கள் நினைத்தது கட்டாயம் நடக்கும்.

இந்த பயிற்சிக்கு மற்றவகளுடைய துணை தேவையில்லை.நீங்கள் தான் மனது வைக்க வேண்டும். என்ன ! உங்கள் இலக்கை அடைய வேண்டும் என்று நினைத்து விட்டீர்களா ?! அப்படியென்றால் நீங்கள் 50% இலட்சியத்தை அடைந்துவிட்டீர்கள். மீதம் 50% அடைய கீழ் காணும் பயிற்சியினை தினமும் தவறாமல் செய்யவேண்டும்.




1. முதலில் சௌகரியமான இடத்தில் அமருங்கள். நீங்கள் அடைய வேண்டிய இலக்கை மனதில் நினையுங்கள். 

2.   இதை  கூடியவரை பிறர் தொந்தரவு தராத இடத்தில் பயிற்சி செய்யுங்கள்.

3. இப்போது உங்கள் உடம்பை நன்றாக தளரவிட்டு கண்களை மெல்ல மூடிக்கொள்ளுங்கள். அதே  சமயத்தில் நீங்கள் அடைய வேண்டியதை நினையுங்கள். 

4.  பிறகு மிக மெதுவாக மூச்சை இழுத்து (காற்றை சுவாசித்து ) மிக மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். (சுவாசித்த காற்றை  வெளியே விடவேண்டும் )

5.    இப்படி குறைந்தபட்சம் 10 அல்லது 12 முறையாவது செய்யும்போது, உங்கள் உடம்பு  மிகவும் இலேசாவதுடன் நீங்கள் நினைத்ததை அடையக்கூடிய தெம்பும், நம்பிக்கையும் உருவாகின்றன. (அதிகமாக செய்ய செய்ய உங்களுக்கு அதிகமான சக்தி கிடைக்கும்) 

6.  அந்த கட்டத்தை அடையும்போது உங்கள் உங்கள் ஆழ்மனதுடன் நெருக்கமான உறவு உன்டாகிறது. 

7.     இப்போது நீங்கள் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ, எந்த நிலை அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை அப்படியே உங்கள் மனதில் ஓடவிடுங்கள்.

8நிச்சயம் நினைத்தது நடக்கும் என்று உங்கள் மனசுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள்.

9. விரும்பியது கிடைத்துவிட்டது என்ற உணர்வை    உங்களுக்குள் பதியவிடுங்கள்.

10. இப்போது நீங்கள் அடைய நினைக்கும் நிலை கிடைத்துவிட்டது என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

11உங்கள் இலக்கை அடைய யார் யார் உதவி செய்தனரோ அவர்களுக்கெல்லாம் உங்கள் மனதிற்குள் நன்றி சொல்லுங்கள்.

12.  தினமும் தவாறாமல்  இந்த  பயிற்சியினை செய்து வந்தால் உங்கள் இலட்சியம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இலகுவாக அதை அடைவீர்கள்.




குறிப்பு: இதை  உங்கள் குடும்பதைருக்கோ, நண்பர்களுக்கோ சொல்வது மூலம் இன்னும் உங்களுக்கு அதிக நம்பிக்கை உண்டாகும் . இதன் மூலம் அரிய , பெரிய அனுபவங்களும் உண்டாகும்.
                
  









































1 comment: