14.7.13 அன்று காமராஜர் பிறந்த நாள் ஒட்டி மாமதுரை கவிஞர் பேரவை, மதுரை. நடத்திய கவிதைப் போட்டியில்
தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதை.
தமிழ் காக்கும் கவசமெது?
(புதுக்கவிதை)
முதலில் தமிழ் மொழியைக் காக்க வேண்டிய அவசியமேது?
அழிவு இருந்தால் தானே அதை காக்க வேண்டிய அவசியம்!
சாகா பலம் பெற்றது செம்மை மொழி தமிழ் படைப்புகள்
தமிழுக்கு கவசம் வேண்டுமா? சிரிப்பான் பாரதி!
துணிவிருந்தால் என் கவிக்கு எதிர் கவி பாட வாரும் என்பான்!
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! என்று பறை சாற்றிய நாள் எங்கே?
ஒழியும் தமிழ்! அழியும் தமிழ்! என்று சொல்வதை இனி ஒழிப்போம்
எங்கே பாரதி? எங்கே பாரதி? என்று தேடி அலைய வேண்டாம்
இங்கே பாரதி! இங்கே எல்லோரும் பாரதிகள் என்றே அறிவிப்போம்.
புதுக்கவிதைகள் தந்து தமிழுக்குப் புண்ணியம் சேர்த்தார் பாரதி!
இங்கே முழங்கிடும் கவிதைகள் கவசமாய் காத்திடுமே தமிழை!
தமிழின் கவசமே அதில் புதைந்திருக்கும் பொக்கிசம்
அள்ள அள்ள குறையாத வளமை ! படிக்க படிக்க திகட்டாத இனிமை!
பார்க்க பார்க்க தெவிட்டாத புதுமை! எழுத எழுத சலிக்காத எளிமை!
தமிழனின் உடல் பொருள் ஆவியாய் கலந்திருப்பது தமிழ்
கத்தி கண்டு பயப்படாது! அணுகுண்டு போட்டாலும் அழியாது தமிழ்!
வாழையடி வாழையாய் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வரும் தமிழ்
தமிழ் மக்களுக்கு கெளரவம் கொடுத்த செம்மை மொழி
அன்னிய மொழிகள் பூச்சாண்டி காட்டினாலும் கவர்ச்சி காட்டி இழுத்தாலும்
கன்னித் தமிழ் மொழிக்கு தமிழ் மக்கள் நாம் கவசமாய் இருப்போம்!
- ஆக்கியோன்
கவிஞர் கு.கி. கங்காதரன்
***********************************************************************************
No comments:
Post a Comment