Tuesday, 10 July 2012

வெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி வழி யோகா

வெற்றிக்கு, மகிழ்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கான ஒலி , ஒளி  வழி  யோகா -  மதுரை கங்காதரன் 


நமது மனம் மற்றும் எண்ணங்கள் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. அதை பலமுறை அனுபவபூர்வமாகவே கவனித்திருக்கலாம்.அப்படி மாற்ற கூடிய சக்தி எப்படி ,எங்கிருந்து வருகிறது? அந்த சூழ்நிலை சக்தியை வெற்றி சக்தியாக , மகிழ்ச்சிக் கனியாக, ஆரோக்கிய வளர்ச்சிகாக   எப்படி மாற்றுவது தான் இந்த  ஒலி , ஒளி  வழி  யோகா ! இது  மிகவும் எளிதான வழி , எல்லா வயதினருக்கும் , எல்லா இனத்தவருக்கும் , எல்லா மததினருக்கும் பொருந்தும் பொதுவானதும்  பிறருக்கு பாதிக்காத வழியும் ஆகும்  !

நமது சூழ்நிலை சுற்றி பலருடைய எண்ண  அலைகள் இருக்கின்றன. அதாவது அது எண்ண  அலைகளாகவும், ஒலி அலைகளாகவும்,   ஒளி  அலைகளாகவும் , காந்த  அலைகளாகவும் பரவி இருக்கின்றன . அதில் எந்த எந்த  சக்தி அதிக பலம் வாய்ந்ததாக இருககின்றதோ அது தான் உன்னை மீகவும் கவரும் அல்லது ஏற்கச்செயும். அது நல்ல அலைகளாக இருந்தால் நன்மையாகவும், கெட்ட  அலைகளாக இருந்தால் கெட்ட  செயலும் உண்டாகும்.அந்த சூழ்நிலையை எப்படி எப்போதும் நல்ல , வெற்றி மற்றும் மகிழ்ச்சி சக்தியாக மாற்றும் வித்தை தான் இந்த  யோகா.

சுருங்க சொல்ல போனால் முன்பு 'மந்திரங்கள் ' சொல்ல கேட்டுயி ருப்பீர்கள். அந்த  'மந்திரங்கள் ' என்றும் வைத்துக்கொள்ளலாம். இந்த  மந்திரத்தின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் (கண்ணை மூடிக்கொண்டு அதாவது  மனப்பாடம் செய்திருந்தால் )   நிறுத்தி நிதானமாய் உச்சரிக்கும் ஒவ்வொரு  தடவையும் சுத்தமான காற்று அலைகள் உங்கள் உடம்பிற்க்குள் புகுகின்றன. சக்திமிக்க மந்திர வார்த்தைகள்  உச்சரிக்கும்போது ஒலி  அலைகள் உங்களை சுற்றி பரவுகின்றன.மனக்கண்ணால் உங்களை நீங்கள் நினைக்கும் போது ஒளி அலைகள் உங்களை சுற்றி பரவுகின்றது. ஆக  இந்த  அலைகள் தான் உங்களுக்கு அறிய பெரிய காரியங்களை செய்யக்கூடிய சக்தியை கொடுக்க காத்திருக்கின்றது. அதை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது அதன் மகிமையை உணருவீர்கள்.


இந்த  மந்திர சொற்கள் உங்கள் ஆழ்மனதில்  புதைந்து இருக்கும் திறமைகளையும், ஐடியாக்களையும் உங்களுடைய எண்ணங்கள் மற்றும் செயல் மூலமாக வெளியே கொண்டு வருவதற்காக உதவி வந்திருக்கும் கோடாளி. இப்படி  தான்  பல துறைகளில் உள்ள சாதனையாளர்கள் பின் பற்றி வருகின்றனர். உங்களுடைய ஒவ்வொருவருடைய வாழ்கை சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகத் தான்  இந்த ஒலி , ஒளி  வழி  யோகா. தினமும் பின்பற்றுங்கள்! மிகச் சிறந்த பலன்கள் பெறுவீர்கள்.    


வாழ்கை முன்னேற்றத்துக்கு ஒரு உந்து சக்தி, ஒரு தூண்டுதல் , ஒரு தன்னம்பிக்கை மிக மிக அவசியம். அந்த  உந்து சக்தி தான் இந்த  மந்திர வரிகள். நாம் பிறர் தயவிலோ பிறருக்காகவோ  காத்திருந்தால் நமது முன்னேற்றம்  தடை படும். அந்த முன்னேற்றதுக்கான சுய ஊக்கி தான் இந்த மந்திரவரிகள். 


அந்த மிந்திர வார்த்தைகள் இதோ ....


முதலில்படிக்கும் மாணவ , மாணவியருக்கு ..  

நான்  எனது  வாழ்கை முன்னேற்றதிக்காக  சிறந்த  இலட்சியங்களை உருவாக்கிக் கொள்வேன்.அதற்காக அறிவு சார்ந்த பல புத்தகங்களை பலவழிகளில் கற்று வெற்றி பெறுவேன். எநநிலையிலும்   கர்வம் கொள்ளாமல் எனது கடமைகளை கண்ணும் கருத்துமாய் செய்வேன். பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த  உலகுக்குப் பெருமை சேர்க்கும் விதம நடந்து கொள்வேன்.


என்னுடைய கல்வி அறிவு, திறமை மற்றும் புத்திசாலிதனத்தை ஒருமுகபடுத்தி நான் கொண்ட இலட்சியத்தை அடைந்தே தீருவேன்.


என்னிடம் எண்ணற்ற திறமைகள்,  ஐடியாக்கள் பல இருக்கின்றன,  என் ஆழ  மனம் காட்டும் வழியிலும் அதன் சக்தியிலும் எனக்கு மிக அதிக நம்பிக்கை இருக்கின்றன. என் நிஜமான தேவைகள் கண்டிப்பாக நிறைவேறும். எனக்கு கிட்டாதவற்றை பற்றி கவலை கொள்ளமாட்டேன். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தை   நழுவவிடாமல் நன்றாக பயன்படுத்திக் கொள்வேன்.     


ஒவ்வொரு செயலையும் முனைப்புடன் முயற்சிப்பேன்.'என்னால் முடியாது' என்று ஒருபோதும் கூறமாட்டேன்.வாழ்க்கையை வளப்படுத்தும் அன்பு, செல்வம், சந்தோஷம் ஆகியவற்றை கொண்டு வந்து சேர்க்கும் எண்ணங்களை மட்டுமே நான் சிந்திக்கிறேன்.வெற்றிகளை கொடுக்கும் பல எண்ணங்கள் இந்த  உலகில் நிறைந்திருக்கின்றன.அவைகளை நான் பெற்றுகக் கொண்டிருக்கிறேன்.    என் அறிவு, என் சக்தி, என் பலம் சுபிட்சமான வாழ்க்கைக்கு என்னை அழைத்துச் செல்லும் பாதை. இந்த  சுபிட்சத்தை என் கண்ணால் காண்கிறேன் அதை அடைவேன் என்று உறுதி கொள்கிறேன்   


குறிப்பு : இதை  தொடர்ந்து தினமும் குறைந்தது ஒருமுறையாவது சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். உங்கள் இலட்சியம் நிறைவேறும். 


-----------------------------------------------------------------------------------------------------------------------


தொழிலில் பல சாதனை செய்ய வேண்டும் என்கிறவர்களுக்கும், நல்ல வேலை கிடைக்கவும்,  பதவி உயர்வு மற்றும் குடும்பத்தின் நலனுக்காகவும் , முன்னேற்றத்திற்காகவும் பொதுவாக எல்லோருக்காகவும்....   
என்னிடம் எண்ணற்ற புதுமைகள் படைக்கும்  திறமைகள் இருக்கின்றன, அதிக பலனை தரும் எளிமையான ஐடியாக்கள் இருக்கின்றன, தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு போன்ற  மூல பலங்கள் இருக்கின்றன அவற்றை நான்  தெரிந்து வைத்திருக்கிறேன்.அவற்றின் விலை மதிக்கமுடியாத மதிப்பை உணர்ந்திருக்கிறேன். என்  திறமைகளை  பயன்படுத்தும்போதும் பணிகளை செய்யும்போதும் நிச்சயம் பலன் கிடைக்கிறது. செல்வம் சேர்க்கக்கூடிய வாய்ப்புகளும் ஐடியாக்களும் என்னிடம் நிறைய இருக்கின்றன. எனக்கு பிடித்தமான தொழிலை நான் செய்கிறேன். அதன் மூலம் பணம் சேர்ப்பேன்.என் ஆழ்மனம் கூறும் யோசனைகளிலும் அதன் உந்துதல் சக்தியிலும் எனக்கு பரிபூரண நம்பிக்கை இருக்கிறது.


என்  நிஜமான தேவைகள் அனைத்தும் சரியான நேரத்தில் நிறைவேறும் என்று எனக்குத்  தெரியும். ஆகையால் நான் பொறுமை இழக்கவில்லை, கவலைப்படவில்லை, சந்தேகம் கொள்ளவில்லை.


நான் விரும்புவது ஒவ்வொன்றும் முறையான வரிசைப்படி முறையான நேரத்தில் என் வாழ்கையில் கிடைக்கும். இது  இயலாது என்கிற எண்ணம் எதுவுமே எனக்கு கிடையாது. அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம் அகியவற்றை கொண்டு வந்து சேர்க்கும் எண்ணங்களை மட்டுமே நான் சிந்திக்கிறேன். அவை தான் என் வாழ்வை வளப்படுத்தும்.


வெற்றிகரமான எண்ணங்கள் இந்த  உலகெங்கும் நிறைந்திருக்கின்றன. அவை இப்போது எனக்கு கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.


பல சக்திகள் இதுவரை பயன்படுத்தாமல் என்னுள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி விரைவாகவும் சுலபமாகவும் என் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளப்போகிறேன்.


நான் சொந்த முயற்சியில் சம்பாதிபேன் . அதை முதலீடு செய்து பன் மடங்கு பெருக்குவேன். ஆக்கப்பூர்வமான  சிந்தனைகள் அலை அலையாய் எனக்குள் பொங்கி எழுகின்றன.


எதிர்பாராத பணம். உதவி மற்றும் சந்தர்ப்பங்கள் பரபரப்பான சூழ்நிலையில் எனக்கு கிடைக்கிறது. பின்னடைவு ஏற்பட்டால் அதுவும் வளர்ச்சிக்கு ஒரு வழி என்று நினைக்கிறேன். பின்னடைவு என்பது மாறு வேடத்தில் வரும் பரிசு தான் என்று நினைக்கிறேன். அதுவே எனது முன்னேற்றத்துக்கு படிக்கல் என்று கருதுகிறேன். 


என் அறிவு, என் சக்தி, என் பலம் எனது இலட்சிய  வாழ்க்கைக்கு என்னை அழைத்துச் செல்லும் பாதை. இந்த  இலட்சியத்தை  என் கண்ணால் காண்கிறேன் அதை அடையும் வரை ஓயாமல் உழைத்து வெற்றி பெறுவேன்  என்று உறுதி கொள்கிறேன்.   குறிப்பு : இதை  தொடர்ந்து தினமும் குறைந்தது ஒருமுறையாவது சொல்லிக்கொண்டு வந்தாலே போதும். உங்கள் இலட்சியம் நிறைவேறும். 


VETRIKKU, MAGILCHIKKU, AROKKIYATHIRKKU OLI, OLI VALI YOGA - BY MADURAI GANGADHARAN

No comments:

Post a comment