Pages

Saturday, 29 December 2012

அந்நிய முதலீடும் காப்பிய மாதவியும் FOREIGN INVESTMENT VS KAAPPIYAM MATHAVI

அன்னிய  முதலீடும் காப்பிய மாதவியும் - 

புதுக்கவிதை 



FOREIGN INVESTMENT VS KAAPPIYAM MATHAVI 
மதுரை கங்காதரன் 



கோடி ரூபாய் பரிசுச் சீட்டு மக்களுக்காம் 
தேர்தல் குலுக்கல் நடைபெறுமாம் 
பரிசு அரசியல் தலைவர்களுக்கும்
அவர்களின் வாரிசுகளுக்குமாம் 
மக்களுக்கோ 'ஜோக்கர்' பரிசாம் 

ஐந்து ஆண்டுகளில் அட்டகாசம் 

அதற்கு உடந்தை மக்கள் பிரதிநிதிகள் 
நாடு கெட்டாலும் பரவாயில்லை 
மக்கள் செத்தாலும் கவலையில்லை 

அன்னிய  முதலீடு வேண்டுமாம் இப்போது 
பகற்கொள்ளை அரங்கேற்றம் செய்ய 
விலைவாசி கொண்டு வயிற்றில் அடித்தவர்கள் 
அன்னிய  முதலீடால் உயிரை எடுக்க வருகிறார்களா ?  



கற்புக்கண்ணகி இங்கிருக்க
மாதவிக்கு ஆசைபடுவானேன்
உள் நாட்டில் முதலீடு இருக்க
அன்னிய  முதலீடுக்கு ஆசைபடுவது சரியா?



உள் நாட்டில் பழைய சோறுக்கு வழியில்லை
அந்நியன் வடை பாயாசம் சோறு போடுவானாம்
பெற்றவளுக்கு இல்லாத அக்கறை
அன்னியனுக்கு வருவது நம்ப முடிகிறதா?



கோவலன் கண்ணகியை உதறினான்
மாதவி அழகில் மயங்கினான்
அனைத்துச் செல்வங்களையும் இழந்தான்
கடைசியில் ஆண்டியானான்



மீண்டும் கண்ணகியிடம் சேர்ந்தான்

இழந்த செல்வங்களை சேர்க்க நினைத்தான்
வியாபாரம் செய்ய மதுரை வந்தான்
பாண்டிய மன்னனால் மரணமடைந்தான்



கண்ணகி துயரச் செய்தியை கேள்விபட்டாள்
கொதித்து எழுந்தாள்
மன்னனிடம் நீதி கேட்டாள்
மதுரையை எரித்தாள் .



காப்பிய மாதவி கோவலனை அழித்தாள்
கிழக்கிந்திய மாதவி நம்மை அடிமையாக்கினாள்
அன்னிய  முதலீடு மாதவி சும்மா விடுவாளா?
நாளை எந்த ரூபத்தில் மாதவி வருவாளோ?



அரசியல் தலைவர்களுக்கு தன்மானம் இல்லை
நிமிர்ந்து நிற்க முதுகெலும்பு இல்லை
ஆயிரம் தடவை பட்டும் அறிவு வரவில்லை
அவர்கள் இருக்குமட்டும் நமக்கு விடிவு காலமில்லை



கையை கட்டிக்கொள் என்கிறான்
கையை கட்டிக் கொள்கின்றனர்
வாயைப் பொத்திக்கொள் என்கிறான்
வாயை பொத்திக்கொள்கிறான்

கண்களை குத்திக்கொள் என்கிறான்

கண்களை குத்திக் கொள்கிறான்
பாதாளத்தில் விழு நான் காக்கிறேன் என்கிறான்
பாதளத்தில் இழுகின்றான் ஆனால் காப்பானா?



கத்தியின்றி இரத்தமின்றி சுதந்திரம் பெற்றோம்
போரின்றி கோழையாக அடிமையாக போகிறோம்
பெற்ற சுதந்திரத்தை அரசியல் தலைவர்களிடம் இழந்தோம்
இப்போது அன்னியனிடத்திலும் இழக்கப் போகிறோம்



விளைநிலம் அழித்து விவசாயியை நசுக்கினான் 
வரிச்சுமை ஏற்றி மக்கள் மகிழ்ச்சியை பொசுக்கினான் 
விலைவாசி அதிகமாக்கி தொழிலை அழித்தான் 
அன்னிய முதலீட்டில் சிறுவணிகர்களை தொலைக்க வருகிறான்  

ஏமாந்து விடாதே !



எச்சரிக்கையாய் இரு !

விழித்துக்கொள் !



உன்னைக் காத்துக்கொள்! 


No comments:

Post a Comment