Pages

Tuesday, 10 February 2026

From 24.1.26 Aditi BRM (Up to 34 Pages - UPDATED 4th Meeting - 14.3.26) Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. Krishnamurti- An enquiry compilation

 


Introduction to BRM (updated every 14 days). Check with Meeting No. and Date (Latest meeting is Top and old will be next) 

இடம்: சிவா (அதிதி) இல்லம், மஹால் 5வது தெரு, மதுரை 625001 
நேரம்: மாலை 3.00 மணி முதல் மாலை 5.15 வரை 
(விசாரணை காலம்: 14 நாட்களுக்கு ஒரு முறை)

Highlights of JK teachings (Read once before going to the meeting)

ஜே.கே. மனிதனுக்கு நிரந்தரமான நிபந்தனையற்ற விடுதலை அளிப்பதே, தன் உரையின் நோக்கமாகக் கூறுகிறார்.. VGC 

மனிதன் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பூரணமான அறிவைப் பெறாமல், அதிலே மேலோட்டமாக அறிவை ஏற்படுத்திக் கொண்டு அதனை அணுகுகிறான். அதனால், அவனுக்கு பயம், துயரம், வன்முறை, சுயநலம் ஏற்படுகின்றன. அவைகளிலிருந்து அவனை விடுவித்து, நிபந்தனை அற்ற நிரந்தரமான விடுதலைக்கு அழைப்பதே ஜே.கே. தன் உரையில் கூறுகிறார்.

அதற்குத் தடையாக இருப்பது எவை எவைகள் என்பதையும் தருகிறார்.

1. மனம் போராட்டங்கள்   2. உறவு முறைகள்  3. தீவிர விருப்பம்

4. முன்னேறத் துடிக்கும் அவா  5. வேட்கை  6. முயற்சிகள்

7. கபடவேடங்கள் 8. ஊழல்கள் 9. இருள்  10. உள்முகமாகச் சீர்கெட்டு அழியும் பரிதாப நிலை  11. நிழலாகத் தொடரும் சாவு ஆகியவை...

சத்தியத்தைப் பற்றி அவர் கூறுவது..

1. எது களங்கப்படாததாக இருக்கிறதோ,

2. எது கற்பனைக்கு அப்பாற்பட்டதோ, 

3. எதற்கு உத்தரவிட முடியாததோ, 

4. எது நூலிலிருந்து படித்தறிந்து கொண்டு விட முடியாததோ, 

5. எது பிறரால் உங்களுக்கு அளிக்க முடியாததோ, அது தான் சத்தியம் என்கிறார்.

Easy-going tendency, my mind Vs Facing the reality with a higher mind..

**************************************************************************

BRM Meeting No. 4 - 2026 Mar 14th sat 3pm -5pm. 

அன்றைய BRMல் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
'உள்மனப் புரட்சி' என்ற நூலை வாசித்து விசாரணை செய்தோம்  என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.


குறிப்பு: தொடக்கமாக பிரசாந்த் அவர்கள், 'ஜே.கே. as I understood' என்பது பற்றி 10 நிமிடங்கள் உரையாற்றினார்.


பங்கு பெற்றவர்கள்: அதிதி கணேஷ் சந்தர்,  பிரசாந்த், மற்றும் கங்காதரன்.

அன்று படித்த பக்கங்கள் 28 முதல் 34 பக்கங்கள் வரை
விசாரணை செய்த கருத்துகள்:

Question to JK: We don't change our behaviour by your teaching, you deny accepting us as ' Shishya' (சிஷ்யர்கள்), why?

JK 's answer: You like to slip from your responsibility by accepting one as a Guru! That means instead of freedom, you choose dependency. My aim is to 'make man his own problem solver'. Not create dependence.

Here KKG question is, instead of feeding the questionnaire, JK increases the questionnaire's hunger!

JK teachings are important:

'உள்ளதை உள்ளபடி அறிந்து கொள்வது தான் அவசியமே தவிர, அதை வேறொன்றாக உருமாற்றம் செய்ய முற்படுவது தேவையற்றது'.

Conflicting two:

Easy-going tendency, my mind Vs Facing the reality with a higher mind..

************

BRM Meeting No. 3 - 2026 Feb 28th sat 3pm -5pm. 


அன்றைய BRMல் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்
'உள்மனப் புரட்சி' என்ற நூலை வாசித்து விசாரணை செய்தோம் .


குறிப்பு: தொடக்கமாக KKG , ஜே.கே.யிடமிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன? என்பது பற்றி 10 நிமிடங்கள் உரையாற்றினார்.

பங்கு பெற்றவர்கள்: அதிதி கணேஷ் சந்தர், திரு மூர்த்தி, சாய் ஜீவன், பிரசாந்த், மற்றும் கங்காதரன்

KKG யின் 10நிமிட உரையின் சாராம்சம்:

I understand the following extract from JK teaching:

Whatever we are doing, we leave some residue. If it is good, we will get good results. If it is bad, then we will get bad results. So, always think good.


அன்று படித்த பக்கங்கள் 22 முதல் 28 பக்கங்கள் வரை
விசாரணை செய்த கருத்துகள்:
1. ஜே.கேயிடம் வரும் மக்கள், ஜே.கேஐ ஒரு பிரபல ஞானி என்பதற்காகவே, அவரால் வழிநடத்தப்பட தங்களை தயார் செய்து கொள்கின்றனர். ஜே.கே இதை விரும்பவில்லை. தன்னை சக நண்பனாகவே விவாதத்திற்கு வர அழைக்கிறார்.
அதாவது, listening mode to enquiry modeக்கு மாற வேண்டும் என்கிறார்.
2. கட்டுண்ட மனம் சிந்திப்பதெல்லாம் குழுமச் சிந்தனையின் வரம்பிற்குட்பட்டதே.
இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு சம்பிரதாயத்தின் மூலத் தத்துவத்தை கிடப்பில் போட்டு விட்டு, அதன் வெளிப்பறமான சில சடங்குகளைக் கெட்டிப் பிடியாக பிடித்துக் கொண்டு, அதனை எந்திரகதியில் செய்தலே குழுமச் சிந்தனை என்கிறார்.
3. இதற்கு கணேஷ் சந்தர் ஒரு சிறிய வார்த்தை விளையாட்டு மூலம் நீருபணம் செய்தார்.

அதாவது, "ஒரு Doctor இன் தம்பி வக்கில். ஆனால், வக்கிலுக்கு அண்ணன் இல்லை".
இதில் உறுப்பினர்கள், அதெப்படி தம்பி என்று சொன்ன பிறகு எப்படி அண்ணன் இல்லாமல் இருக்க முடியும்? என்று விவாதம் செய்ததோடு, கேள்வி தவறு என்றும் வாதிட்டனர்.
அவரின் பதில், பொதுவாக டாக்டர் என்றால் 'ஆண்' மட்டுமே நினைவுக்கு வரும். அப்படித் தான் சமுதாயம் நம்மை சொல்லிக் கொடுத்து இருக்கின்றது. ஏன் டாக்டர் 'அக்கா' என்று இருக்கக் கூடாது? இது தான் பிரச்சினை.

4. எது சத்தியம் என்பதை இந்த 'ஆறு' வகையைத் தாண்டியது என்று குறிப்பிடுகிறார்.
5. சத்தியத்தை அறிதல் மட்டுமே உண்மையான புரட்சி. நீங்கள் சற்றும் எதிர்பாராத நேரத்தில், உங்களை அறியாமலேயே சத்தியம் வந்து சேரும்.
6. எதனால் சத்தியம் விலகி இருக்கிறது என்று 12 காரணங்கள் சொல்கிறார்.
7. நம் மனதின் எண்ணவோட்டத்தை, தளைபட்டிருக்கும் (Hook or சிக்கல்) அதன் நிலையை நாம் புரிந்து கொண்டால் தான், சத்தியத்தைப் பற்றி அறியக் கூடிய நிலை உருவாகும்.
8. படித்தாலோ, பேசினாலோ, கேட்டாலோ, உன்னை விடுதலை செய்வதாகவே இருக்க வேண்டும். கட்டிப் போடக் கூடாது.
9. பதிலைத் தேடும் நீங்கள், உண்மையில் பிரச்சினைகளில் அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறீர்கள்.
We are hurrying to find the answer, instead of studying the problem.
10. பிரச்சனைக்கான விடை, பிரச்சினையிலேயே இருப்பதைக் காண முடியும்.
When you study the problem, you will find the solution is hidden in it.
11. Know your life 360° , don't see at a single angle. Then only you will solve the problem.
12. When the problems are approached partially, it is worsened.
13. கேள்வி: When the opposing person call me to untruth, how can I be silent?
பதில்: ஞானியின் வார்த்தை Vs நிஜவாழ்க்கை. இரண்டும் உண்மை. இரண்டையும் சமாதானத்துடன் வாழ்வதே நிஜ மனித வாழ்க்கை.
************

BRM Meeting No. 2 - 2026 Feb 7th sat 3pm -5pm. 

அன்றைய BRMல் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின்

'உள்மனப் புரட்சி' என்ற நூலை வாசித்து விசாரணை செய்தோம் 

பங்கு பெற்றவர்கள்: அதிதி கணேஷ் சந்தர், தினேஷ், திரு மூர்த்தி, சாய் ஜீவன், பிரசாந்த், மற்றும் கங்காதரன்

படித்த பக்கங்கள் 18ம் பக்கம் முதல்  22 பக்கம் வரை

விசாரணை செய்த கருத்துகள் /குறிப்புகள்

1. எந்த ஒரு பிரச்சனைக்கும், தீர்வு காண இயலுமா? என்று கண்டுபிடிப்பதே முக்கியம்

2. சிந்தனையின் இயல்பு என்ன என்பதை அறிய வேண்டும்

VRGC ன் கருத்து:
1. பேசுபவரும், கேட்பவர்களும் ஒரே எண்ண அலைவரிசையில் இருக்க வேண்டும்

2. பிரச்சினையின் தீவிரத்தையும், ஆழத்தையும் கவனித்து கேட்பதே முக்கியம்

3. பிரச்சனையினைத் தீர்க்க முடியுமா? என்று அறிவதே, பிரச்சினையினைத் தீர்ப்பைத் விட முக்கியம்

4. பிரச்சினைகளை இரண்டு விதமாகத் தீர்க்கலாம்

A) மேலோட்டமாக ஒட்டு பூசுதல் முறை

B) பிரச்சினையின் வேரை அகற்றுதல் - அதாவது, உள்ளாழ் மனதில் அடிப்படை மாற்றம்

5. இங்கு 'தளை' என்பதை முடிச்சு அல்லது கட்டுண்ட மனம்

6. கருத்து - எதிர் கருத்து
வாதம் - பிரதிவாதம்
வஞ்சகம் - எதிர் வஞ்சகம்
இதனால் பிரச்சினை வருகிறது

7. பிரச்சினையின் தீர்வைக் காணப் புறப்படும் மனம் எப்படிப் பட்டது? அது இருக்கும் நிலைமை என்ன? என்று அறிய வேண்டும்

8. Society and system mould and restrict your mind, and you are not aware of it. Your formatted mind is in the bigger system, and you think that the bigger system is right


சமூகமும் அமைப்பும் உங்கள் மனதை வடிவமைத்து கட்டுப்படுத்துகின்றன, ஆனால் நீங்கள் அதை உணரவில்லை. உங்கள் வடிவமைக்கப்பட்ட மனம் பெரிய அமைப்பில் உள்ளது, மேலும் பெரிய அமைப்புதான் சரியானது என்று நினைக்கிறீர்கள்.

9. Science first or technology first?

10.De-Moulding is possible only by listening with fresh mind (without any pre-conceived idea 

முதலில் அறிவியல் அல்லது தொழில்நுட்பம்? 

முன்கூட்டிய யோசனை இல்லாமல் புதிய மனதுடன் கேட்பதன் மூலம் மட்டுமே , கட்டுப்பாடு நீங்குவதற்குச் சாத்தியமாகும்

10. விமர்சனம் செய்யாமல், விளக்கங்களை கூறி மொழிபெயர்ப்பு செய்யாமல் கேட்பது

11. பிரக்ஞை நிலையில் ( with outer mind) இருக்கும் போது சத்தியம் கிடைக்காது

12. அவரவர் முயற்சியில் பிரச்சினை அறிந்து, அதனைத் தீர்க்க வேண்டும்

13. You think from stocks What are dumped in your mind

KKG ன் செய்கை 
A) Quick jump into the solution
B) Questioned.. how a layman can understand JK 
C) Meditation or Spiritual is the only solution

*********************


From 24.1.26 Aditi BRM - A book on Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. Krishnamurti- 
A compilation of reading this book in the Aditi group and enquiring about what it says.

From 24.1.26 Aditi BRM with உள்மனப் புரட்சி - ஜே.கே. நூலைக் குழுவில் படித்து,  அதில் கூறியிருப்பதை விசாரணை செய்ததன் தொகுப்பு 


24.1.2026 நூல்: உள்மனப் புரட்சி; ஜே.கே நூலிலிருந்து..
Book Reading Meditation (BRM)

இடம்: சிவா (அதிதி) இல்லம், மஹால் 5வது தெரு, மதுரை 625001 
நேரம்: மாலை 3.00 மணி முதல் மாலை 5.15 வரை 
(விசாரணை காலம்: 14 நாட்களுக்கு ஒரு முறை)

BRM Meeting No. 1 - 2026 Feb 7th sat 3pm -5pm. 

அன்றைய BRMல் ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'உள்மனப் புரட்சி' என்ற நூலை வாசித்து, விசாரணை செய்தோம். 

இதுவரை படித்த பக்கங்கள்: 18ம் பக்கம் வரை (முன்னுரை உள்பட)


பங்கு பெற்றவர்கள்: அதிதி கணேஷ் சந்தர், திரு மூர்த்தி, சாய் ஜீவன், பிரசாந்த், மற்றும் கங்காதரன்


விசாரணை செய்த கருத்துகள் /குறிப்புகள்

1. ஜே.கே அவர்கள், மனிதன் மனதில் இருக்கும் பயம், சுயநலம், வன்முறை மற்றும் துக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

2. மேற்கூறியனவற்றுக்குக் காரணம் 'பற்றாக்குறை' ஆகும்.
இதன் Outcome from participants:

VRGCன் கருத்து 
1. Food less but more mouth - Why?

2. மனிதன் ஒவ்வொன்றையும் அவன் மனதின் மூலம் கையாளுகிறான். ஆனால், தன் மனதைக் கையாளத் தெரியாமல் இருக்கின்றான்.

KKG யின் கருத்து:
பற்றாக்குறை பற்றிய எனது கருத்து...

உண்மையில் பற்றாக்குறை என்பதே இல்லை. மக்கள் தொகைக்கு மேலே விளைச்சல் இருக்கிறது. மேலோட்டமாக பார்க்கும் போது பற்றாக்குறை போலத் தெரிகிறது. அப்படி தெரிவதற்கான காரணங்கள் இதோ..

1. உணவு தானியங்கள் பலவகைகளில் பல இடங்களில் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பது

2. பல இடங்களில், நாடுகளில் (ஏற்றுமதி வழியாக) விற்பனைக்குச் சென்றதால்..

3. நாட்பட்டு முழு பூச்சிகளால் வீணாவது 

4. கீழே சிந்தி வீணாவது

5. முறையாக அல்லது நாகரீகத்தின் காரணமாக குளம், அணை,  குட்டையில் தண்ணீர் சேமிக்காததால் சில இடங்களில் வறட்சியால் விளைநிலம் தரிசாக மாறியதால்..

6. விலை ஏற்றத்திற்காக பதுக்கி வைப்பதால்..

7. பாலைவனத்தில் குடிபெயர்ந்து அங்குள்ளவர்களுக்கு, விளைச்சல் அதிகம் உள்ள நாடுகளின் மூலம் இறக்குமதி செய்வதால்..

8. சோம்பேறிகள் அதிகமாகி விட்டதால்.. வயலில் வேலை செய்யாமை..

9. உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் அதிகமாக உற்பத்தி இருந்தாலும், அவை விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் கிடைக்காததால் விவசாயம் செய்வது நிறுத்தியதால்..

10. சப்ளை செயின் சரியாக இல்லாமல் உணவு வீணாகப் போவது..

இவையனைத்தும் தான்,  மனிதனின் பற்றாக்குறைக்கான காரணங்கள்.. இதனால் தான் மனிதனுக்கு மனிதன், பயம், துயரம், வன்முறை, சுயநலம் உண்டாகிறது. இதிலிருந்து மனிதன் விடுதலை பெற வேண்டும் என்று ஜே.கே வலியுறுத்துகிறார். எப்படி என்று விளக்குவதே 'உள்மனப் புரட்சி ' நூல்..

BLPன் கருத்து

'பற்றாக்குறை' இருந்தால் தான் தேடுதல் இருக்கும்... எல்லாவற்றிற்கும் ஒரு இயக்கத்தில் வைக்க, பற்றக்குறையானது  பிரம்மத்திற்குத் தேவைபடுகிறது...

***********************

No comments:

Post a Comment