Pages

Monday 6 August 2012

ஆயிரம் (2000) ரூபாய் விதை கேள்விபட்டிருக்கிறீர்களா ? நீங்களும் இலட்சாதிபதி

           நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!

                  ஆயிரம் (2000) ரூபாய் விதை            
                   கேள்விபட்டிருக்கிறீர்களா ? 

                                        

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் உங்களுக்கும் உங்கள் சந்ததியினருக்கும் காலம் காலமாக உதவியாஇருக்க வேண்டுமல்லவா? அப்படி என்றால் உங்களுக்கு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் விதை கட்டாயம் தெரிந்தாக வேண்டும். அதற்கு நீங்கள் கேள்விபடாத விதைகளைப்  பார்ப்போம்.

                           

           வீடு அல்லது பிளாட் விதை:

                             

எங்க அப்பா அல்லது தாத்தா எப்போவோ ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்கினார். என்னோட காலம் வரைக்கும் நல்லபடியா விற்காமல் பார்த்துகிட்டேன். இப்போ அதோனோட விலை பத்து லட்சத்துக்கும்  மேலே போகுது.                            

                              தங்க விதை:

                          

எங்க அம்மா அல்லது பாட்டி அந்த காலத்திலே தங்கம் ஒரு கிராம் நூறு ரூபாய் வித்தப்போ துணிந்து நூறு பவுன் வாங்கி போட்டாங்க. கஷ்டப்பட்டு காப்பாதினதாலே இப்போ  என் பொண்ணுக்கு அந்த நகைங்களைப்  போட்டு 'ஜாம் ஜாம்'னு கல்யாணத்தை முடிச்சிட்டோம்.

                         டெபாசிட் விதை:

                                 

நான் பிறக்கும்போதே என்னோட அப்பா அரசு வங்கியிலே / தபால் ஆபீஸ்லே   ஒரு லட்சம்  டெபாசிட் போட்டிருக்கிறார். செலவு பண்ணாமே இருத்ததாலே என்னோட பொறியியல் பட்டபடிப்பு     நல்லபடியா முடிச்சுட்டு இப்போ வேலைக்கு போய் கை நிறையா சம்பாதிக்கிறேன்.

இப்போது உங்களுக்கு என்ன விதை வேண்டும்?

                              

இன்றைக்கு வீடு / பிளாட் மற்றும் தங்கத்தின் விலை   தாறுமாறா எகிறி இருக்கின்றது. இனிமேல் அதிலே முதலீடு செய்து ரெண்டு அல்லது ஐந்து மடங்கு ஆகும்னு கனவிலே கூட நினைக்க வேண்டாம். ஏன்னா இப்பவே நிறைய வீடு / பிளாட் விற்க முடியாம தினறுகிறாங்க. அதனாலே இப்போது உங்களுக்கு 1000 / 2000 அல்லது 10,000 ரூபாய் விதை தான் வேண்டும். இல்லாவிட்டால் வீடு / பிளாட் வாங்குங்கள். கூடவே இந்த ரூ 2000 அல்லது 10,000 விதை வாங்குங்கள்.          

நான் செய்யச்சொல்வது மிகவும் எளிதானது ஏன்  கேளி கூட செய்வீர்கள். அதை பற்றி எனக்கு கவலையில்லை. உங்களால் மாதம் ரூபாய் 100 சேமிக்க கட்டாயம் முடியும். ஒரு பத்து மாதம் சேமித்தால் ரூபாய் 100 X 10 =1000 கிடைக்கிறது. இப்போது 1000 ரூபாய் விதை ரெடி. இல்லை நான் ஒரே மாதத்தில் ரூபாய் 1000 ரெடி பண்ணினாலும் சரி தான். குறிப்பாக திருமண நாள் , பிறந்த நாட்களில் இதை பின் பற்றினால் மிகவும் நல்லது.

உங்கள் 1000 ரூபாய் 7 வருடங்களில் (இப்போதைய வங்கியின் அதிகபட்ச வட்டியின் படி) இரு மடங்காகிறது என்று வைத்துக்கொண்டு விதையுங்கள்.     

                                                                                                   
இப்போது அதன் வளர்ச்சி பார்ப்போம்.

ஒரே ஒரு தடவை ரூபாய் 1000 முதலீடு செய்து மறந்துவிடுங்கள். எவ்வளவு தொகை கிடைக்கின்றது என்று பாருங்கள்.         

 வருடங்கள்      முதிர்வு தொகை  
                 0              முதலீடு ரூ 1000  
                 7              2000 (கிடைக்கின்ற தொகை மறு முதலீடு  )
                 14             4000
                 21             8000
                 28           16,000
                 35           32,000
                 42           64,000
                 49         1,28,000
                 56         2,56,000
                 63         5,12,000
                 70        10.24,000 (கிட்டத்தட்ட பத்து லட்சம்)


                      

இந்த ஒரு விதை ரூ 10,000 மாக இருந்தால்   

                  
 வருடங்கள்      முதிர்வு தொகை  

                 0              முதலீடு ரூ 10,000  
                 7              20,000 (கிடைக்கின்ற தொகை மறு முதலீடு  )
                 14             40,000
                 21             80,000
                 28           1,60,000
                 35           3,20,000
                 42           6,40,000
                 49         12,80,000
                 56         25,60,000
                 63         51,20,000
                 70      1,02,40,000 (கிட்டத்தட்ட ஒரு கோடி )

ரூ1000 விதைத்தால் 70  வருடங்களில் நீங்கள் ஒரு   லட்சாதிபதி.   ரூ10,000    விதைத்தால்  70 வருடங்களில் நீங்கள் ஒரு கோடீஸ்வரர். இங்கு தான் நீங்கள் சிரிப்பீர்கள். 70 வருடமா அவ்வளவு எப்படி? அப்போது விலைவாசி எப்படி இருக்கோ? ஒரு  டீ யின் விலை ரூ100 கூட இருக்கலாம். இப்படி நினைப்பவர்கள் / சொல்பவர்கள் சேமிக்காமல் இருக்க சாக்கு போக்கு சொல்பவர்கள். அவர்கள் கட்டாயம் குடும்ப உறுப்பனர்களின் மகிழ்ச்சி அல்லது தங்களது சந்தததியினரை பற்றி கவலைபடாதவர்கள். அவர்களுக்கு ஒரு கேள்வி ? உங்களது தாத்தா பாட்டிக்கு வயது கட்டாயம் 60 முதல் 70 க்குள் இருக்குமல்லவா? அப்படி என்றால் உங்கள் கையில் பத்து லட்சமோ அல்லது ஒரு கோடியோ இருக்கின்றதா? ஆனால் லட்சமா? அவ்வளவும் கடன் தான் இருக்கின்றது என்று புலம்புவது எனக்கு கேட்கின்றது அப்படித்தானே?

     இப்போதே ரூ 1000 விதையை விதையுங்கள். 

                                


    பத்து லட்சம் ரூபாய் அறுவடை செய்யுங்கள்.



சேமிக்க சிக்கனம் தேவை. அந்த சிக்கனம் எப்படி வரும்? 

அடுத்த பகுதியில்.....             
                                                        
      





     
தொடரும் ...     
********************************************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

1 comment: