Pages

Wednesday, 12 September 2012

மொபைல் போன் வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக - FOR MOBILE PHONE USER'S SERVICE

மொபைல் போன் ( கம்ப்யூட்டர் & லேப்டாப் ) வசதிகளை பயன்படுத்துபவர்களுக்காக -

FOR MOBILE PHONE USER'S SERVICE

மக்கள் சேவை & விழிப்புணர்வு பகுதி 


நீங்கள் பலவிதமான மொபைல் போன்கள், கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் உபயோகித்துக் கொண்டிருப்பீர்கள். அவைகள் பலவித தினுசில், பலவித வசதிகளுடன் கண் கவரும் பல வண்ணங்களில் பல நாட்டுத் தயாரிப்புகள் வரிசையாக கடைகளில் குறைந்த விலை முதல் அதிக விலை வரை  தாராளமாக கிடைக்கின்றது. தினம் ஒரு மாடல் வந்து இறங்குகின்றது. உங்களுடைய அனுபவத்திலோ அல்லது நீங்கள் கேள்விபட்டதிலோ எந்த மொபைல் போன்கள் குறைந்த விலையில் அதிக வசதி மற்றும் தரம் நிறைந்து நன்றாக உழைகின்றது என்பதை மக்களுக்கு தெரியப் படுத்தினால் வீணாக மக்கள் ஏமாறுவதை தவிர்கலாமல்லவா!


அதே நேரத்தில் தேவையான வசதிகள் எவற்றில் உள்ளது என்று இதன் மூலம் தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமல்லவா! ஏனென்றால் பலர் மொபைல் போன்கள் வாங்கிய உடன் சில வசதிகளை மட்டும் தான் சரி பார்க்கின்றனர். பிறகு தான் அவகளுக்கு அது குறைந்த தரத்துடன் மற்றும் குறைந்த வசதிகளுடன் உள்ளது என்று. இந்த பகுதியில் நீங்கள் எழுதி மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்.


அதே சமயம் மொபைல் போன் சேவைக்கு பலவித நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு பல சலுகைகள் எஸ்.எம்.எஸ் மூலமாகவும், பகட்டு விளம்பரம் மூலமாகவும், நம்முடன் இனிமையாக தொடர்பு கொண்டும் தெரிவிக்கின்றனர். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அதில் விழுந்து பலவிதத்தில் ஏமாறுகின்றனர். அதாவது பலரின் மொபைல்கள் பிறபல மொபைல் சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் கூறும் அறிவுரைப்படி 'ரீ-சார்ஜ் ' செய்யப்பட்டவுடன் காரணமில்லாமல் ரூபாய் 30,50, என்று தங்கள் இஷ்டப்படி பிடுங்கிக் கொள்கின்றனர். அப்படி ஏமாறுகிறவர்கள் வசதி குறைந்தவர்கள். அவற்றை யாரிடத்தில் சொல்வது என்று புரியாமல் திண்டாடுகின்றனர். பலருக்கு தினமும் 'மொய் ' எழுதும் சூழ்நிலைகூட வருகின்றது.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் சேவைப் பிரிவில் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் சரியானபடி பதிலளிக்காமல் சுற்றவிடுகிறார்களே அது தான் மிகவும் கொடுமை . அதுவும் அந்த பேச்சு 'ஆட்டோ மேடிக் ' என்பதால் 'அதை செய் இதை செய், அதை அமுக்கு , இதை அமுக்கு ' என்று சொல்லி அதிக பொறுமை சோதித்து, அதிகம் காக்க வைத்து கடைசியில் நாமே துண்டிக்கும் நிலைமைக்கு தள்ளிவிடுகின்றனர். இப்படித் தான் எல்லா நிறுவனங்களும்  தப்பித்துவருகிறார்கள் . இப்படி  எளிதாக பிடுங்கி நிறைய சம்பாதிக்கின்றனர். அந்த மாதிரியான நிறுவனங்களை மக்களுக்கு எச்சரிக்கை செய்து அடையாளம் காட்டுவது தான் இந்த பகுதி. அதேபோல் பில்லில் ஏகப்பட்ட குளறுபடி. நம் கேள்விக்கு சரியாக பதில் சொல்வதில்லை.

அதே சமயத்தில் நன்றாக சேவை நிறுவனங்களையும் அடையாளம் காட்டுங்கள். அவர்களின் எந்தெந்த சேவைகள் பாராட்டிற்க்குரியது என்பது தெரியப் படுத்தினால் அனைவரும் அதில் மாறுவதற்கு உதவி செய்யலாமல்லவா? இப்ப தான் நம்பரை மாற்றாமல் வேறு ஒரு சேவைகளை மாறலாமல்லவா? இந்த சேவை எதற்காகவென்றால் மொபைல் உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் உள்ளவர்கள். அவர்களுக்கு கட்டாயம் இந்த சேவை மிகுந்த உதவி செய்யும்.

எனக்கேற்ப்பட்ட பிரச்சனை :

முதன்முதலில் ஏர்-செல் தான் மொபைல் சேவை பெற்றிருந்தேன். ஒழுங்காக சேவை கொடுத்தவர்கள், கொஞ்சம் நாட்களுக்கு பிறகு நான் ஒவ்வொரு முறை ரீ-சார்ஜ் செய்யும்போதெல்லாம் ரூபாய் 30 என்று காரணமில்லாமல் அடிக்கடி பிடுங்கிக் கொண்டனர். வாடிக்கையாளர் சேவை பிரிவில் சரியான பதிலில்லாததால் அதே நம்பரில் 'ஐடியா' மொபைல் சேவை பெற்றேன். அங்கும் ஒரு தடவை காரணமில்லாமல் ரூபாய் 30 பிடித்தார்கள். உடனே இ .மெயிலில் 'நீங்கள் ரூபாய் மறுபடியும் எனக்கு தராவிட்டால் வேறு ஒரு சேவைக்கு மாறநேரிடும் . நான் ஏற்கனவே ஏர் - செல் இருந்து வந்துள்ளேன் ' என்றவுடன் ரூபாய் 30 திருப்பி தந்ததுடன் மன்னிப்பும் கேட்டார்கள். அதிலிருந்து இதுவரை எந்த ஒரு பிரச்சனை இல்லை.

ஆனால் எனது மற்றொரு சேவைக்காக  நேற்று (11.9.12) டாடா டோகோமோ ஒரு மாத எஸ்.எம்.எஸ் சேவைக்கு ரூபாய் 26 ரீ-சார்ஜ்ம் , டாப்-அப் ரூபாய் 21 கொடுத்து ரூபாய் 17 டாக் டைம் பெற்றேன். ஆனால் ஒவ்வொரு மெசேஜ் க்கும் ரூபாய் 1 எடுத்துக் கொண்டார்கள். மேலும் காரணமில்லாமல் ரூபாய் 15 பிடித்தும் விட்டனர். இப்போது பேசவும் முடியாது. மெசேஜ் அனுப்பவும் முடியாது. வாடிக்கையாளர் சேவை பிரிவில் தொடர்பு கொள்ளும்போது சரியான பதிலில்லை. ஆகவே வேறொரு மொபைல் சேவைக்கு மாறலாம் என்று முடிவு செய்துள்ளேன். அவர்கள் பிடித்தது இது முதல் முறையல்ல. பல முறைகள் !

இந்த லட்சனத்தில் இவர்கள் மூலம் மொபைல் வங்கி (Mobile - Bank) சேவை பெற்றால் ஒரே நாளில் அனைத்து ரூபாயும் 'நாமம்' சாத்திவிடுவார்கள்.

அதேபோல் மொபைல் ரேட்டிங்  (Mobile rating) இதன் மூலம் கொடுங்கள்.

அதாவது அவர்களுடைய சேவையின் தரம், டவர் வசதி, சேவையில் வசதிகள், சலுகைகள், வாடிக்கையாளர்களின் அணுகுமுறை, ஏமாற்றுவது, பணத்தை காரணமில்லாமல் திருடுதல் போன்றவைகளை மனதில் கொண்டு 10 மதிப்பெண்ணிற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்ணை இதன் மூலம் தெரியப்படுத்துங்கள். இது நீங்கள் மக்களுக்கு கொடுக்கும் மிகப் பெரிய சேவை. மேலும் பெரிய பெயருடைய நிறுவனகளின் சேவையின் லட்சனத்தை மக்கள் தெரிந்து கொள்ளட்டுமே.

அதாவது:

என்னுடைய ரேட்டிங் :

ஏர் -செல் - 0
டாடா டோகோமோ - 0
ஐடியா - 8

(குறிப்பு - ஆங்கிலத்திலும் தெரிவிக்கலாம்)

உங்கள் ஒத்துழைப்பிற்கு மிகவும் நன்றி.

 
   
நன்றி !    

2 comments:

  1. Airtel - 2
    Vodafone - 3
    ஏர் - செல் - 2
    டாடா டோகோமோ - No ஐடியா
    ஐடியா - No ஐடியா
    Except BSNL, all other pre paid are cheating in bill.
    Except BSNL, all other land line are cheating in bill.

    ReplyDelete
  2. I'm using Airtel and jio without any problems. I didn't try any others.

    ReplyDelete