Pages

Friday, 13 July 2012

நீங்கள் பணம் காய்க்கும் மரம் தான். - நீங்களும் லட்சாதிபதி ஆகலாம் ! -

நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம் ! -
 மதுரை கங்காதரன் 

நீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.



இது  உங்கள் வாழ்க்கைக்கான நிதி நிர்வாகத்திற்கான எளிய வழி  முறைகள்





நீங்கள் பணம் காய்க்கும் மரம் தான்.

இந்தக் கட்டுரை படிக்க ஆரம்பிக்கும் ஒவ்வொருவரும் இன்று முதல் லட்சாதிபதிகள் !  இன்றைய லட்சாதிபதிகள் நாளைய கோடீஸ்வரர்கள் ! என்ன ஆச்சர்யமாய் பார்க்கிறீங்க! தினமும் ஒருநாள் பிழைப்பு ஒட்டுறதுக்கே வழி  இல்லாம இருக்கோம் ?! இதுலே  எப்படி நாங்க லட்சாதிபதி ..... என்று இழுப்பதை என்னால் உணர முடிகிறது. அதே சமயத்தில் எப்படி ? எந்த வழியில் ? என்கிற பல கேள்விகள் உங்கள் மனதில் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன அப்படித்தானே ? ஒருவேளை இது  ஒருவகையான ஏமாற்று வேலையா ? அப்படியெல்லாம் கவலை படவேண்டாம் .

ஒரு சிலர் 'ஆமா , இதுபோல எத்தனையோ பேர் எத்தனையோ வழிகள்லே சொல்லி நாம அது படி செஞ்சதுலே நம்மகிட்டே கொஞ்ச நஞ்சம் இருந்ததை இழந்துட்டோம், இப்போ நம்மகிட்டே இருக்கிறதை நாங்க இழக்கத்தயாராக இல்லை, மேலும் அப்படிப்பட்ட ஆசையை நாங்க கனவுலே கூட நினைக்கலே ?! இன்னும் சொல்லப்போனா அந்த ஆசையே மறந்துட்டோம்' என்று உங்கள் மனசுக்குள் குமுறுவது எனக்குக் கேட்கின்றது.

வீடுகளில் தினம் கேட்கும் புலம்பல்கள்  

 

ஒரு சிலர் 'வீடு கட்றதுக்கு பேங்கிலே கொறஞ்ச வட்டிக்கு லோன் கொடுக்கிறாங்களே ன்னு ஆசைபட்டு பணம் வாங்கினோம். போக போக வட்டி ஏறுதனாலே அசல் கட்ட முடியாம கடன்காரனாக மாறிவிட்டோம் '     

'தேவைக்கு கொஞ்ச பணம் வேண்டும்கிறதனாலே நகைகளை அடமானம் வச்சோம் , திருப்ப முடியலே '

'வீட்டை  அடமானம் வச்சி பணம் வாங்கினோம் , வட்டி கட்ட முடியலே '

'லோன் போட்டு வண்டிய வாங்கினேன், அதுக்கு சரியா தவணை கட்டமுடியாம திண்டாடுறேன், எப்போ வண்டிய புடிங்கிட்டு போவாங்கலோன்னு பயமா இருக்கு !'

'ஒருபக்கம் பையன் , பொண்ணுகளுடைய பீஸ் கட்டணும் !'

'பொண்ணுக்கு வயசாயிருச்சி , அவளுக்கு காலாகாலத்திலே கல்யாணம் பண்ணி  கரைய ஏத்துறதுக்கு நக நட்டு வாங்கணும் ! '

'நகை கடை பக்கம் எட்டி கூட பார்க்க முடியலே, அவ்வளவு விலை ! '

'தொழில் தொடங்குறதுக்கு மூலதனம் கொஞ்சம் குறையுது , அதை புரட்ட முடியலே !'

'போன  மாசம் டாக்டர்கிட்டே சும்மா செக்கப்புக்கு போனேன் , இந்த டெஸ்ட் , அந்த டெஸ்ட் ன்னு எடுக்கச்சொல்லி சேர்த்து வச்ச கொஞ்ச பணத்தையும் பிடுங்கிட்டு மேற்கொண்டு கடனையும் வாங்கவச்சுட்டார் !'

'வீட்டு வாடகை, மளிகை கடை பாக்கி , பால்காரன், ஸ்திரி பெட்டி தேய்க்கிறவனுக்கு, காய்கறிக்கடைகாரனுக்கு , ஆட்டோ ரிக்ஷா '

இப்படி அதிகபட்சம் எல்லா வீட்டிலேயும் இந்த  புலம்பல் சத்தம் இருக்கும். யாருக்குமே குறித்த நேரத்திலே பணம் தர முடியமே, மானம் போகிறாப்ப்பிலே பல சங்கடங்களை அனுபவிச்சுவர்றத நாம பார்க்கிறோம்.

அதுக்கும் மிஞ்சி இன்னும் சில இடத்திலே 'வீட்டிலே ரெண்டு சம்பலக்கரன்னு தான் பேச்சு , மாச கடைசியிலே ஒரு ரூப கூட மிஞ்சலே ' இப்படியும் பல பேர் புலம்புறதை நாம பார்க்கிறோம்.

இவையெல்லாம் விடுங்க! முக்கியமா இந்த கட்டுரை எழுதத் தூண்டிய நிகழ்ச்சி இதுதான். ரொம்ப வருசத்துக்கு முன்பு என் நண்பன் ஒருவருடைய கல்யாணத்திற்கு சென்றிறுந்தேன்.அப்போது அவரோட வயது 27 இருக்கும். அவருடைய அப்பா நல்ல பெரிய வேலையில் இருப்பவர். இன்னும் ஓரிரு வருடத்தில் 'ரிடையர்டு' ஆக  இருப்பவர். அதற்குள் தன பையனுடைய கல்யாணத்தை   முடித்துவிடவேண்டும்' என்று முனைப்புடன் கல்யாணம் நடத்தினார்.

நான் தெரியாத்தனமாய் ஒரு கேள்வியை அவரிடத்தில் கேட்டுவிட்டேன். 'சார், கல்யாணம் ரொம்ப சிறப்பா நடந்திருச்சி ! எவ்வளவு சார் பட்ஜெட் போட்டீங்க, அதுக்குள்ளே முடிச்சுட்டீங்களா ' என்று கேக்குறதுக்குள்ளே கொஞ்சம் கூட யோசிக்காமல் 'ஒரு லட்சமாகும்னு நினைத்தேன், ஆனா அது ஒன்றரை லட்சத்திலே போய் முடிஞ்சது' என்று அங்கலாய்த்தார்.

உடனே நான் சும்மா இருக்கமே, 'சார், நீங்க பெரிய உத்தியோகத்திலே இருக்கீங்க, நல்ல சம்பளம் வாங்குறீங்க , நிறைய சேர்த்து வச்சிருப்பீங்க , அதனாலேத்தான் உங்க பையனோட கல்யாணத்தை ஜாம் ஜாம் ன்னு நடத்தியிருக்கீங்க ! அப்படித்தானே' என்றேன்.

'அட போங்க தம்பி , சேமிப்பா , அப்படின்னா என்ன அர்த்தம் தம்பி, இதுநாள் வரை ஒரு நயா  பைசா கூட சேமிக்கலே, எவ்வளவு சம்பளம் வாங்கிறேனோ அப்பப்போ செலவுக்கு சரியாப் போகுது. எல்லாம் பிறகு பார்த்துக்கலாம் ன்னு  அசால்டா இருந்துட்டேன், பையனுக்கு 27 வயசு ஆனது தெரியல்லே, இவ்வளவு  சீக்கிரமா நான் ரிடையர் ஆவேன்னு கூட நினைச்சு பாக்கலே. இவ்வளவு வேகமா வருஷம் போயிருச்சி . எல்லாம் சமாளிச்சுடலாம்னு ரொம்ப குருட்டு நம்பிக்கையா இருந்துட்டேன் '  என்றார்.    

நானும் விடல்லே. 'சார், உங்க அப்பாவும் (அதாவது பையனோட தாத்தா ) பெரிய ஆபீசரா இருந்து ரிடையர் ஆனவர். அவர் எதாவது சொத்து சேர்த்து வச்சிருப்பாருள்ளே' என்றேன்.

'தம்பி , என் அப்பாவும் என்னோட கல்யாணத்தை கடன் வாங்கித்தான் பண்ணினார். அவர் வாங்கின கடனை நான் அடச்சுட்டேன், இப்ப் நான் என் பையனுக்காக வாங்கின கடனை அவன் அடைக்கணும்.  ம் ... கடன்லே தான் எங்க பரமபரை ஓடுது !' என்று தன கையாலாகாத்தனத்தை பரிமாறிக்கொண்ட்டார்.

அப்போது தான் எனக்கு ஒரு இலட்சியம் பிறந்தது. எல்லோருக்கும் தன குடும்பத்திற்கு ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஒவ்வொரு செலவு வரும். எல்லா செலவும் ஒரேயடியாய் வருவதில்லை. பையனோ பொன்னோ பிறந்த உட்னே ஸ்கூலுக்கு போவதில்லை, உடனே கல்யாணம் செய்வதிலை. எல்லாத்துக்கும் நேரம் , காலம் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அதிகம் வசதி படைத்தவர்களுக்கும் இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். எதற்ககெல்லாம் மூலக்காரணம் போதியளவு  'நிதி நிர்வாக'த்திறமை இல்லாதது அதை பற்றிய விழிப்புணர்வு இல்லாதது தான்.




இப்படி 'கடன்' என்னும் ஈட்டிகாரனிடமிருந்து தப்புவது எப்படி? கிடைக்கும் பணத்தில் சிறந்த 'நிதி நிர்வாகம்' செய்து எப்படி 'லட்சாதிபதி' ஆகலாம் என்பதன் ரகசியம் தான் இந்தக்கட்டுரை. ஏற்கனவே இதை பின் பற்றித்தான் பல பேர் 'லட்சாதிபதி' ஆயிருக்கிறனர். 'லட்சாதிபதிகள்' 'கோடீஸ்வரர்கள் ' ஆகியிருக்கின்றனர். இதை பின்பற்றுவது மிக எளிது. இதில்  வரும் ஐடியாக்கள் எளிதானது. இதை  ஓய்ந் பற்றுங்கள் பலன் கிடைக்கும்.

தொடரும் ...     

             

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 


  











No comments:

Post a Comment