Pages

Saturday 3 November 2012

உள்விதி மனிதன் பாகம்: 28 நீ தற்காப்புக் கலை கற்பது அவசியம். LEARN HOW TO SAFE YOURSELF?

உள்விதி மனிதன்  
சமமனிதக் கொள்கை 



மதுரை கங்காதரன் 
பாகம்: 28 நீ  தற்காப்புக் கலை கற்பது அவசியம்.
LEARN HOW TO SAFE YOURSELF?





ன் பிரிய மனிதா! உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதன் உனக்கு மேலும் எந்தெந்த வழிகளில் உதவி செய்கிறான் என்பதை இப்போது விளக்கமாகச் சொல்கிறேன் கேள். நீ கருவில் உருவாகும் முதல் பிறக்கும் வரையும், பூமியில் ஜனித்த பின்னர் நீ வாழும் வரையிலும் உனக்குப்  பலவழிகளில் உதவி செய்கிறேன். அதாவது உனது உடம்பிற்கு ஏதேனும் சிறிய கஷ்டமோ அல்லது நோயோ அல்லது உன் உடம்பிற்கு ஒவ்வாத செயலோ அல்லது தேகத்தில் கஷ்டமோ அல்லது தேக சௌகரியம் இல்லாமல் இருந்தாலோ நான் உடனே அதை பலவழிகளில் உனக்கு உணர்த்தி வருகிறேன். அதாவது உன் உடம்பின் வெப்பநிலை அதிகரிப்பதன் மூலமாக (காய்ச்சல்) அல்லது குறைப்பதன் மூலமாக (குளிர் , ஜுரம்), மூச்சு விடுவதில் கஷ்டம் (இளைப்பு )கொடுப்பதன் மூலமாக, அசதியை கொடுப்பதன் மூலமாகவும், சாப்பிட இயலாமலும், வேலையில் கவனக்குறைவு, தூக்கமில்லாமலும், பேசமுடியாமலும், நடக்க முடியாமலும், பார்க்க முடியாமலும் இன்னும் பல. அப்போது தானே உன் உடம்பிற்கு என்ன ஏது? என்று உடனே பார்கின்றாய்.



ன்பு மனிதா! எனது ஜீவ ஓட்டமே தடை பட்டாலும் நான் படும் கஷ்டங்கள் ஏதுமில்லை. ஆனால் அனைத்துத் துன்பங்களும், கஷ்டங்களும் நீ தான் அனுபவிக்கவேண்டும். உன் உடம்பு படும் கஷ்டத்தைப் பார்த்து என்னால் சும்மா இருக்க முடியும்! ஆனால் நான் அவ்வாறு இருக்க விரும்பவில்லை. ஏனென்றால் உன் உடலில் ஓடும் எனது ஆன்ம ஓட்டம் உனது நன்மைக்காக, உனது மகிழ்ச்சிக்காகத் தான் ஓடுகின்றது. அதனால் உன் உடம்பிற்கு ஒன்றென்றால் துடிதுடித்து அந்தத்  துடிப்பை உன் உடம்பிற்கு தொந்தரவு ஏற்படுத்துவதன் மூலம் காட்டுகிறேன் என்பதை புரிந்து கொள்.

பண்புமிக்க மனிதா! எனது ஜீவ ஓட்டம், மூச்சு ஓட்டம் மற்றும் வெப்ப ஓட்டம் எல்லாமே உன் உடலை பாதுகாக்கத் தான். உன் உடல் நன்றாக இருந்தால் தான் என் ஓட்டங்கள் எல்லாமே ஒரே சீராக இருக்கும். அப்போது தான் உனது உடல் ஆரோக்கியதாகவும், புஷ்டியாகவும் இருக்கும். இவைகள் அனைத்தும் உன் கையில் தான் இருக்கின்றது. 

ரியாதையுள்ள மனிதா! உனது உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் தான் உனது வேலைகளை மற்றவர்களின் தயவின்றி நீயாகச் செய்யலாம். மேலும் உன்னைச் சுற்றி உடலால் கஷ்டப்படும் மனிதர்களுக்கு சிறந்த உதவிகள் செய்யவேண்டுமென்பதற்காகத் தான் இவ்வளவு பாடுபட வேண்டியுள்ளது. உனது இந்த பிறப்பே உனது வேலைகளைச் செய்வதற்கும், முடியாமல் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதறகாகத் தான் என்பதைப் புரிந்துகொள். உனக்கு அதற்கான ஆற்றலும், அறிவும் தந்து கொண்டிருக்கிறேன்.



திப்புள்ள மனிதா! நிஜத்தில் அவரவர்கள் அவர்களுடைய வேலைகள் செய்வதற்கே மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அல்லது சோம்பேறித்தனம் காட்டுகிறார்கள். சிலர் உடம்பு வளையாமல் வாழ்கிறார்கள். ஆனால் எனது விதிப்படி அவர்கள் அவர்களுடைய வேலைகள் செய்யாததால் வாழ்கையில் கஷ்டப்படவேண்டும். அதற்காக அவர்களின் உடலை மிகப் பருமனாக்கி அல்லது வெகுவாக இளைத்து பலவாறு கஷ்டப்படுத்துகிறேன். அதன் பிறகு தானே அவர்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வேலைகளான வீட்டு வேலைகள் அல்லது அலுவலக வேலைகள் அவர்களே செய்து கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிறைய உடல் தொல்லைகளிலிருந்து தப்பித்திருக்கலாம். பலர் நேரம் காலம் தெரியாமல் அதிகமாக உழைக்கிறார்கள். அவர்களையும் நான் விட்டு வைக்கவில்லை. எல்லாம் பணத்திற்காக என்று சொல்கிறாய். இந்த பணத்தால் உனக்கு உடல் ஆரோக்கியம் வாங்கிவிட முடியாது.

பாசமுள்ள மனிதா! உனது வேலையில், செயலில் உனது மனதை ஒருமுகப்படுத்தி கவனமாக செய்தாலே உனது மனமும், உடலும் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு சிலர் தீய வழியில் தீய பழக்கத்திற்கு அடிமையாகி தங்களுடைய உடல் நலத்தைத் தாங்களே சிறிது சிறிதாக அழித்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு செய்வது ஆரம்பத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் போகப்போக அந்த மகிழ்ச்சி நிரந்தரமில்லை என்று உணர்கின்றனர். ஆனால் அப்படி கெட்டப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பின்னால் என்னிடம் முறையிட்டு என்ன லாபம்? நீ செய்த செயல், அதன் விளைவுகளை நீ தான் அனுபவிக்க வேண்டும். ஆனால் எனது இரக்ககுணத்தால் உன்னை உடனே அழிக்காமல் விட்டுவைத்திருக்கிறேன். முடிந்தளவு உன்னைக் காக்க முயற்சியும் எடுத்துக்கொள்கிறேன்.



ரக்கமுள்ள மனிதா! எல்லோரும் பொதுவாகச் சொல்வார்கள். மற்றவர்களுக்கு நீ  எப்படி இருந்தாலும் சரி உனக்கு நீ நல்லவனாக, நல்லெண்ணங்களுடன் நடந்துகொண்டால் போதும் என்று. அதைச்  சொல்வது எளிது. ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினம் தான். இருப்பினும் உன்னை நீயே கெடுதலோ அல்லது  கொடுமையோ செய்ய கொள்ள முடியாது. அப்படியிருந்தாலும் அதைச் செய்பவர்கள் மிகவும் அரிது. அதுவும் இந்த உலகில் பல அட்டூழியங்களைப் பார்க்கச் சகிக்காமல், அநியாங்களை எதிர்க்கத் துணிவில்லாமல், அநீதி, சுய கௌரவத்திற்காக வெகு சிலர் தங்களுடைய ஆயுளை அவர்களே (தற்கொலை) முடித்துக்கொள்கிறார்கள். அவர்கள்  இந்த உள்விதி  மனிதனை நம்பாமல் இருப்பதாலும், என் உதவியை உதாசீனப் படுத்தியதாலும் நடப்பவை. அது அதிகம் போனால் 0.0001% இருக்கும். ஆனால் பெரும்பாலும் உனது அழிவு மற்றவர்களினாலும், தவறான வழிகளாலும், வயதாகிவிடுவதாலும், நோயினாலும் வருகின்றது. நீ எப்போதும் எந்த நேரத்திலும் நல்லவனாகத் தான் இருக்கின்றாய். ஆனால் அதைத் தக்க வைத்துக்கொள்வதில் தான் உனக்கு பிரச்சனை ஏற்படுகின்றது.



என் இனிய மனிதா! உனக்குள் இருக்கும் நான் கோடிக்கணக்கான வருட அனுபவமிக்கவன் என்று நான் ஏறகனவே சொல்லியிருக்கிறேன். நீ ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது நான் உனக்குப் பலவிதமான தீர்வுகளை எப்போதும் வழங்கிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் அதைப் பற்றிச்  சிந்திக்காமல் மற்றவர்களின் பேச்சுகளைக் கேட்டு நடக்கவே நீ மிகவும் பிரயாசைப்படுகிறாய். அதன்படி பல காரியங்களைச்  செய்கிறாய். மனிதா! நீ  நல்லவன். ஆனால் உன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் நல்லவர்களாக அல்லது தீயவர்களாக அல்லது இரண்டுமில்லாமல் இருக்கலாம். அதில் தீயவர்கள் உன்னைச் சுற்றி இருந்தால் அவர்களை எப்படி இனம் கண்டுகொள்வது? அவர்கள் நல்லவர்களாக நடித்து உனக்குக் கெடுதல் செய்துகொண்டிருந்தால் எப்படி உனக்குத் தெரியும்?



பிரிய மனிதா! யார் உன்னிடம் ஒளிவு மறைவு இல்லாமல் நல்ல, நன்மையான செயலின் மூலம் 'தான் யார்?' என்று யாரொருவர் உணர்த்துகின்றாரோ அவர்களை நீ நம்பலாம். அவர்களால் உனக்கு நிரந்தர மகிழ்ச்சி கிடைத்தால், உன் வாழ்வு மலந்தால் அவர்களின் பின்னே செல்லலாம். அதை விட்டுவிட்டு எந்த ஒரு செயல் செய்யாமல் வெறும் தேன் தடவிய பேச்சில் உன்னைப் புகழ்ந்தோ அல்லது சுயநலம் கருதியோ அல்லது உணர்ச்சி பொங்க பேசி அந்த உணர்ச்சியை தங்களுக்குச் சாதகமாக்கி உன்னிடத்தில் பணம் பறிப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள். அவர்களை நம்பவே கூடாது. அவர்களிடமிருந்து நீ காத்துக்கொள். 

இனிய மனிதா! இப்போது புரிந்து கொண்டாயா! மற்றவர்களிடமிருந்து உன்னை காத்துக்கொள்ள நீ பலசாலியாக, ஆரோக்கியச் சிந்தனை மிகுந்தவனாக, அறிவுடன் வேலை செய்கின்றவனாக யார் உனக்கு செயலின் மூலம் உனது வளர்ச்சியை உயர்த்திக் கொடுக்கிறார்களோ அவர்களே என்வழி நடப்பவர்கள். அவர்களே நான். நானே அவர்கள். மனிதா! உனக்கு தற்காப்புக் கலை தெரியவேண்டும். நீ மட்டுமல்ல இந்த உலகம் முழுவதுமுள்ள மக்கள். உன்னைச் சுற்றி இருப்பவர்களையும், நடப்பதையும் நீ கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் உனக்கு வரும் தீய செயலிருந்து, அதன் தீய பலத்தை, அதன் தீய விளைவை அறிந்து அதனை வெல்லும் திறமை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்போது உனக்கு எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொடுக்கிறேன். அதன் மூலன் நீ நல்ல பலனை அடைவாய். நான் அதன் மூலம் உனது ஆயுள் முழுவதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கிறேன். உனக்கு நிம்மதியாக வாழவைக்கும் எனது குறிக்கோளை நிறைவேற்றிக்கொள்ளப் போகிறேன்.     

என் ஆசை மனிதா! சில சமயங்களில் உனக்கு உடல்நலம் குறைவாகவோ அல்லது தீராத வியாதியில் இருக்கும்போது நீ (உனது உடல்) அதிகமாக கஷ்டப்படுவது நான் உணர்கிறேன். அந்த சமயங்களில் நீ என்னை தீவிரமாக வேண்டிக்கொள்ளும்போது நான் உன் உடலை  சோதித்து அந்த வியாதியை போக்குவதற்கான முயற்சியும் எடுத்து, உன்னை நலமுடன் காக்க முடியும். நீ டாக்டரை பார்க்கும் முன் என்னிடம் முறையிட்டு என் உதவியை ஏற்றுக்கொண்டால் உனக்கு உண்டான சுகவீனம் பாதியளவு நீங்கி விடும். மீதி பாதி உனது டாக்டர் நீக்குவார். அந்த மாதிரியான சக்தி என்னிடத்தில் இருக்கின்றது. ஏனென்றால் என்னுடைய அனுபவத்தில் சிறிதளவு வைத்தியக் கலையும் கற்றுவைத்திருக்கிறேன்.



ல்ல குணமுள்ள மனிதா! ஒரு மனிதன் அவன் பரம்பரைக்கேற்பத் தான் கல்வியறிவு அல்லது வியாபார நுணுக்கம் அல்லது குறிப்பிட்டத் துறையில் தான் அனுபவம் இருக்கும் என்று தப்புகணக்கு போட்டுவிடாதே. இந்த உள்விதி மனிதனுக்கு எல்லாவற்றிலும் அனுபவம் இருக்கின்றது. நீ எதை விரும்புகின்றாயோ அதை நான் தரத் தயாராக இருக்கிறேன். ஒரு மனிதன் இதுவரை இவ்வுலகில் எத்தனை பிறவி எந்த எந்த மாதிரியான அறிவுடன் இருந்திருக்கின்றானோ அவைகளை ஒன்று திரட்டியே உன்னுள் இருக்கிறேன். உன்னுள் ஆன்ம ஓட்டமாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன். ஆகையால் உனக்கு எந்த நோயானாலும் சரி அதை போக்கிட வேண்டும் என்கிற துடிப்பு எனக்கும் இருக்கும். என்னிடம் கூறும்போது உன் கஷ்டம் பாதியாக குறைக்க முடியும். பிறகு டாக்டரை பார்க்கும்போது பூரண குணம் சீக்கிரமே அடைந்துவிடுய்.   


     

தற்காப்புக் கலை!

உன்னைத்  தீயவர்களிடமிருந்து காக்கும்!     
எனது ஜீவ ஓட்டம் தொடரும்.....

1 comment: