உள்விதி மனிதன்
சம மனிதக் கொள்கை
புண்ணியம் / பாவம் இதோ -
KNOW YOUR PREVIOUS GENERATION SIN / VIRTUE
இனிய மனிதா! நீ இந்த உள்விதி மனிதனைப் பெருமையாக வைத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி! பூர்வ ஜென்ம புண்ணியம் பொறுத்து தான் உன்வாழ்க்கை அமைகிறது என்றெல்லாம் மகான்கள், பெரியோர்கள், அறிஞர்கள் சொல்லக் கேள்விபட்டிருக்கிறோம். அந்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்றால் என்ன? என்று உன்னிடத்தில் கேட்டால் நீ முன்பு செய்த பாவபுண்ணியம் பொறுத்து தான் இந்த வாழ்க்கை கிடைத்துள்ளது என்று நீ சொல்லுவாய்! சரி தானே.
அன்பு மனிதா! அதன் விளக்கத்தைக் கேள். பூர்வஜென்ம புண்ணியம் என்பது நீ முன் ஜென்மத்தில் செய்தது கிடையாது! 'பூர்வ' என்பது 'முன்' என்பது அர்த்தம். அதாவது உனக்கு முன் இந்த உலகில் யார் இருந்தார்கள். உன்னைப் பொறுத்தவற்றில் சந்தேகம் இல்லாமல் உன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதர சகோதரிகள், உறவினர்கள் என்று இவற்றில் ஏதாவது ஒருவரோ அல்லது பலரோ தான் இருந்திருப்பார்கள். அவர்களின் நல்ல (புண்ணிய), கெட்ட (பாவ) செயல்களைப் பொறுத்து தான் உனது வாழ்வு அமைகிறது. கோடீஸ்வரன் மகன், ஒரு கோடீஸ்வரன் தான். அது போல் ஆண்டியின் மகன் ஆண்டி தான். இதில் கோடீஸ்வரன் அல்லது ஆண்டியாவது அவரவர் வாழும் வாழ்கையை பொறுத்துத் தான். உன்னுடைய இந்த ஜென்மம் சிறப்பாக இருந்தால் தான் உனது வாரிசு ஜென்மங்கள் சிறப்பாக இருக்கும். அவர்கள் செழுமையாக இருப்பதற்காக இப்போதுள்ள உனது நிலைமையை நல்ல நிலையில் உயர்த்திக் கொள். அதை செய்யத்தான் நான் உன்னுள் இருந்து ஓடிக்கொண்டு இருக்கிறேன். அதைவிட்டுவிட்டு நீ போன ஜென்மத்தில் கர்ணன், அந்த ராஜா, இந்த ராஜா என்று யாராவது சொல்லி உன்னிடமிருந்து பணம் பறிக்க நினைத்தால் அதற்கு ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டேன். அப்படி உனது செல்வத்தை அவர்களுக்கு கொடுத்தால் இப்போது உள்ள உனது நிலைமையும் மோசமாகிவிடும் ஜாக்கிரதை! அப்படி காது குளிர கேட்டு நீ மயங்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்ளவே வந்திருக்கிறேன்.
மதிப்பு மிக்க மனிதா! நான் உனக்கு ஆரம்பத்தில் கொடுத்த செல்வங்கள் உன்னிடத்தில் சேர்க்கும் வரை நான் ஓயமாட்டேன். அதற்கு உனது ஒத்துழைப்பு எனக்குத் தேவை. அதற்குத் தேவையான அறிவும், ஆற்றலும் உனக்கு நான் தருகிறேன். உன் அப்பா, அம்மாவின் சொத்து அல்லது அவர்களின் வாரிசு சொத்து, அவர்களின் நல்ல பெயர்கள், அவர்கள் செய்த நல்ல காரியங்கள் அனைத்தும் உன்னை வந்து சேர்வதால் நீ புண்ணியவானாகிறாய். உனது வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் அதை நிலைக்க வேண்டுமென்றால் நீயும் அவர்களைப்போல தவறாது நல்ல விதத்தில் சொத்துக்களையும், நல்ல பெயர்களையும் சம்பாதித்து கொடுத்தால் உனது அடுத்த வாரிசுகள் (ஜென்மம்) நன்றாக இருப்பார்கள். அதேபோல் அனைவரிடத்தில் கடன் வாங்கியோ அல்லது இருந்த செல்வங்களை இழந்தோ ஒன்றுமில்லாமல் ஆண்டியாய் இருந்தால் உனது வாரிசுக்கு எந்தவிதாமான சுகம் இல்லாமல் போய்விடும். அதற்கு இப்போதிலிருந்து உனது செல்வத்தை பெருக்கிக் கொள். அதற்கு உனக்கு முழு ஆதரவு தருகிறேன். மேலும் திருடன், கொலைகாரன், அயோக்கியன், கொள்ளைக்காரன் என்று பெயரை சம்பாதித்து கொடுத்தால் உனது வாரிசுகள் அதனால் பெரும் துயரை அடைவார்கள். இருப்பினும் அவர்களுக்கு என்னுடைய அன்பும் ஆதரவும் தந்து அவர்களை நல்ல மனிதர்களாக மாற்றும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. அதைப் பற்றி கவலை கொள்ளாதே! ஏனென்றால் என்னிடத்தில் கல்வி பொருள், சுபிட்சம் கடல் போல இருக்கின்றது.
பெருமையுள்ள மனிதா! இப்போதுள்ள உன் சொத்தோ அல்லது பூர்வீகச் சொத்தோ உனக்குள்ள வாரிசுகளுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கின்றது. அதைவிட்டு விட்டு பேராசை கொண்டு தீய வழியிலோ அல்லது குறுக்கு வழியிலோ செல்வங்களை சேர்க்க நினைத்தால் அது உன் வாரிசுகளுக்குப் பாவமாய் அமைந்து நிம்மதியையும், சந்தோஷத்தையும் கெடுப்பதோடு உனக்கு வாழ்க்கை முழுவதிற்கும் அவபெயரை வாங்கித்தந்து விடும். நல்ல வழியில் சென்றால் நான் உனக்குத் துணையாய் இருப்பேன். கெட்ட வழியில் சென்றால் நானே உனக்கு முதல் எதிரி. ஜாக்கிரதை!
மதிப்பு மிக்க மனிதா! எதெற்கெடுத்தாலும் மாயை, விதி என்ற இருவகைகளை பேசுவதை கேட்டிருக்கிறோம். அதாவது மகான்கள் மாயை எனவும், மனிதர்கள் விதி எனவும், நேரம், காலம் எனவும் பேசுவார்கள். அது புரிந்தோ அல்லது புரியாமலோ தலையை ஆட்டுகிறாய். அதைப்பற்றி விரிவாகவும், தெளிவாகவும் பேசுகிறேன். சற்று பொறுமையுடன் கேள்! அவைகளெல்லாம் ஒருவகையில் நல்ல தீய செயல்களே. அவைகளெல்லாம் நிலைத்தன்மை அற்றவை. நொடியில் மாறுபவை...
உள் மனிதனின் ஓட்டம் தொடரும்.
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
good
ReplyDeleteGood..
ReplyDelete