விவேகானந்தர் - அவர் ஆன்மீக நியூட்டன் -
பாகம் : 1 அவரது ஆயுள் நீண்டிருந்தால்....
VIVEKANANDA - LIKE NEWTON BUT IN SPIRITUAL
150 வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை
150 வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை
பாகம்: 1
சுவாமி விவேகனந்தர் அவர்களின் சரிதை, ஆன்மீக சொற்பொழிவுகள், சிந்தனைகள், பொன் மொழிகள், விழிப்புணர்வு கட்டுரைகள், இளைஞர்களுக்கு அவர் சொன்ன அறிவுரைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள் போன்ற பலவிதமான தொகுப்புகள் இருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். சிறிய வயதில் அவர்களின் மறைவு என்பது ஆன்மீகத்திற்கும், மக்கள் சமூகத்திற்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு பேரிழப்பு என்பது தான் உண்மை. அவருக்கு ஆன்மிகம் ஒரு கண்ணாக இருந்தாலும் மறு கண்ணாக அவருக்கு இளைஞர்களை நல்ல வழியில் நடத்திச் செல்லும் அளவிற்கு ஆன்மீக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ன்பதே அவருடைய மேலான குறிக்கோளாக இருந்தது. மேலும் அன்றைய காலகட்டத்தில் பல மதங்களுக்கிடையே நடைபெறும் போட்டியை அறவே நீக்கி மதங்களினால் மக்களுக்குன்டாகும் நன்மைகளை எடுத்துச் சொல்லி மதங்களிடையே ஒருமைபாட்டை வளர்த்து மக்கள் சமுதாயத்தை மேன்மையடைய மிகுந்த பாடுபட்டார்.
அவரின் ஆயுள் ஒருவேளை நீண்டிருந்தால்... என்னென்ன அவர் மனித சமுதாயத்திற்கு சொல்லியிருப்பார். இளைஞர்களுக்கு எப்படி வழிகாட்டியாக இருந்திருப்பார். மதஒற்றுமையை எவ்வாறு மக்களிடையே பரப்பியிருப்பார். நமது இந்தியாவின் சுதந்திரத்திற்கும் , முன்னேற்றத்திற்கும் அவர் எவ்வாறு முன்னோடியாக இருந்து பாடுபட்டிருப்பார் என்பதை விளக்கவே இந்த கட்டுரை. பாரதி எவ்வாறு 'புதுமைப் பெண் 'ணுக்கு முன்னோடியாக இருந்தாரோ, அதுபோல் சுவாமி விவேகனந்தர் அவர்கள் 'இளைஞர்களின் ஆன்மீக விழிப்புணர்வு' க்கு முன்னோடியாக திகழ்ந்திருப்பார் என்பதே மறுக்கமுடியாத உண்மை.
சுவாமி விவேகனந்தர் அவர்கள் ஆன்மீகவாதிகளுள் சற்று வேறுபட்டு , ஆன்மிகம் மட்டுமில்லாமல் அனைவரின் சமூக நலனில் அக்கறையோடு இரண்டும் கலந்த ஒரு ஆன்மீகவாதி. அவரை 'ஆன்மீக நியூட்டன்' என்று சொன்னாலும் மிகையாகாது. சர் ஐசக் நியூட்டன் ஒரு அறிவியல் மகாமேதை. அவரின் தத்துவங்கள் இன்றளவிலும் நிலையாக இருப்பதோடு, மற்ற தத்துவங்களுக்கு அடிப்படையாகவும் இருக்கின்றது. அதிலும் அவரது 'புவியீர்ப்பு தத்துவம் ' கொடுத்த அனுபவம் எல்லோருக்கும் தெரியும். அதாவது அவர் ஒருநாள் ஆப்பிள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த போது ஒரு ஆப்பிள் தனது தலையில் விழுந்ததைப் பற்றி சாதாரணமாக எண்ணாமல் அதனுள்ளே இருக்கும் மிகப் பெரிய தத்துவம் அவர் சொல்லித்தான் இந்த உலகுக்கு தெரிந்தது. அவர் தலையில் மட்டுமா ஆப்பிள் விழுந்திருக்கும். அதற்கு முன் பலபேரின் தலையில் விழுந்திருக்குமல்லவா ? அவர்களுக்கு எட்டாத விஷயம் அவரது தலைக்கு (மூளைக்கு) எப்படி எட்டியது?
அதுபோல இதுநாள் வரை எத்தனையோ பேர்கள் கோவில்களுக்குச் சென்றிருப்பார். அங்குள்ள தெய்வத்தை தரிசனம் செய்திருப்பார். கடவுளைப் பற்றிய புத்தகங்களை பலவகையில் படித்திருபபார்கள். கடவுளின் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருப்பார். இவ்வளவு இருப்பினும் சுவாமி விவேகனந்தரின் 'எனக்கு கடவுளைக் காட்டமுடியுமா?' என்ற ஒரு ஆணித்தரமான கேள்வி பல முனிவர்களையும், மகான்களையும், அறிஞர்களையும் அதிர்ச்சி தந்ததோடு கடவுளைப் பற்றிய சிந்தனையை அறிவதற்கு பலருக்கு தூண்டுகோலாக இருந்தது என்னவோ உண்மை தான். கிட்டத்தட்ட அனைவராலும் தீர்க்கப் படாத ஒரு வினாவாகவும் இருந்தது. அதற்கான விடையைத் தேடியும் புறப்பட்டார். கடைசியாக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்கிற உண்மை குருவால் அதற்கான விடையை அறிந்துகொண்டார். கடவுளை அறிந்து கொண்டார். அறிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் தன்னைப்போல இருக்கும் இளைஞர்களுக்கும் தனக்கு கிடைத்த அந்த அனுபவத்தை கொடுக்கவேண்டுமென்று பிரயாசைப் பட்டார். அதற்காக அக்கால இளைஞர்களிடையே கடவுளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பலவிதத்தில் அதற்கான முயற்சியை எடுத்துக்கொண்டார்.
கடவுளை அறிய முக்கியமான ஒன்று, தன்னையே முதலில் அறிந்து கொள்ளும் 'தியானக் கலை' மற்றும் யோகா. இந்த கலைகளை தினமும் பயிற்சி செய்வதால் மட்டுமே எளிதில் கிட்டும் என்பதை உணர்ந்தார். இந்த தியானம், சாதி, மதம், இனம் என்கிற வேறுபாடு இல்லாமல் மனித சமுதாயம் எல்லோருக்கும் பொதுவானது என்றும் அதன் மூலம் ஆன்மீக ஆற்றலும், உடல்பலமும், மனப்புத்துனர்ச்சியும், ஆழ்ந்த அறிவும், எதையும் சாதிக்கும் மனத்திடமும் கிடைப்பதை உணர்ந்தார். இந்த உணர்வு இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா பிரிவினருக்கும் கிடைக்குமென்பதை மக்களுக்கு தெளிவு படுத்தினார். இதன் மூலம் எதையும் பகுத்தறியும் சக்தி கிடைகிறது என்றும் அந்த சக்தியை மக்களுக்கு இளைஞர்களின் மூலமாக கொடுக்கும்போது நாடு எதிர்கொள்ளும் பலப் பிரச்சனைகளுக்கு நல்லவிதமான தீர்வுகள் கிடைக்கும் என்கிற சிந்தனைகளை வளர்த்தார்.
அவருடைய அனுபவத்தில் அனைத்து தீர்வுகளும் ஆன்மீகத்தால் மட்டுமே கிடைக்காது என்பதை உணர்ந்ததோடு எல்லாவித துயரங்களை ஆன்மீகத்தால் துரத்தமுடியாது என்பதில் உறுதியோடு இருந்தார். மனிதனுக்கு வாழ்கையில் முன்னேற்றம் எனபது மிகவும் அவசியம். அந்த முன்னேற்றம் கடின உழைப்பினால் மட்டுமே கிட்டும். அந்த உழைப்புக்கு ஆற்றலும், அறிவும் தேவை. அதற்கு ஒருமுக சிந்தனையும், நேர்கொண்ட பார்வையும் அவசியம். அதை கொடுப்பது தியானம் மற்றும் யோகா. அந்த யோகா மற்றும் தியானத்திற்கு ஆன்மீக சிந்தனை நிச்சயம் வேண்டும். அதை வளர்ப்பது இளைஞர்களின் கையில் இருக்கின்றது. அவர்களுக்கு இடைவிடாமல் விழிப்புணர்வு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிபட்ட இளைஞர்களை வழிநடத்துவதற்கு தன்னை தயார் செய்துகொள்ள வேண்டுமென்பதற்காக தியானத்தையும், அரிய பெரிய நூல்களையும் குறிப்பாக இந்த உலகம் முழுவதும் தன்னுடைய ஆன்மீக எழுச்சி பயணம் தொடர ஆங்கில மொழியை கற்று அதில் நன்கு புலமை பெற்றார்.
வெறும் பேச்சால் மட்டுமே இளைஞர்களை வழிநடத்திச் செல்லமுடியாது. அதில் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்காது என்பதை கருத்தில் கொண்டு தனது எண்ணங்களை செயலின் மூலம் வெளிப்படுத்தினார். இளம் வயது முதற்கொண்டே குழந்தைகளுக்கு நேர்வழியில், நன்மைதரும் செயலைச் செய்யப் பழக்கிவிட்டால் இந்த மனித சமுதாயம் சிறந்து விளங்கும். ஒழுக்கமுள்ள, நல்ல சிந்தனைகளுள்ள இளைஞர்களால் மட்டுமே இந்திய தேசத்தை உலகத்தில் தலைசிறந்த நாடாக மாற்றமுடியும் என்று மிகவும் நம்பினார்.
மதம் ஆன்மீகத்திற்கு உதவ வேண்டும். அந்த ஆன்மிகம் மனித சமூகத்திற்கு வழிகாட்டியாக இருக்கவேண்டுமென்பதற்கு அவரே முன்மாதிரியாக திகழ்ந்தார். மத நல்லினத்திக்காக , மத ஒற்றுமைக்காக சுவாமி விவேகானந்தர் சிகாகோ நகரில் நடைபெற்ற அனைத்து மத மகாநாட்டில் கலந்துகொண்டு ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றினார். அவருடைய சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே மதங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்காக பலத்தரப்பட்ட மதத்தலைவர்கள் நிறைந்த கூட்டத்தில் 'சகோதர, சகோதரிகளே!' என்று ஆரம்பித்தார். இந்த ஆரம்பம் நமது இந்திய நாட்டிற்க்கு புகழையும், ஆன்மீகத்தில் நாடு கொண்ட நம்பிக்கையும் அன்று உலகுக்கு எடுத்துரைத்தார். அவர் பேசிய ஒலி அலைகள் வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது சொற்ப்பொழிவு மூலம் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய்ப் பிள்ளைகள் (அதாவது கடவுளின் பிள்ளைகள்) . இதில் ஜாதி, பேதங்கள் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கிறார். ஒருவருக்கொருவர் அன்பு, கருணை, நேசம், பாசம் காட்டவேண்டும். பிறரின் துன்பம் தனது துன்பம் போல கருதவேண்டும். அவர்களுக்கு உதவி செய்து வாழ்வதே சிறந்த ஆன்மீகவாதி என்பதை அறிவுறுத்தினார். இளைஞர்களை நல்வழிப் படுத்துவதன் மூலம் தான் இந்த நாட்டை அழிவுப் பாதைக்குச் செல்லாமல் ஆக்கப்பூர்வமான பாதைக்கு அழைத்துச் செல்லமுடியும் என்பதை ஆணித்தரமாக நம்பினார்.
வெறும் பேச்சால் மட்டுமே இளைஞர்களை வழிநடத்திச் செல்லமுடியாது. அதில் அவர்களுக்கு நம்பிக்கை பிறக்காது என்பதை கருத்தில் கொண்டு தனது எண்ணங்களை செயலின் மூலம் வெளிப்படுத்தினார். இளம் வயது முதற்கொண்டே குழந்தைகளுக்கு நேர்வழியில், நன்மைதரும் செயலைச் செய்யப் பழக்கிவிட்டால் இந்த மனித சமுதாயம் சிறந்து விளங்கும். ஒழுக்கமுள்ள, நல்ல சிந்தனைகளுள்ள இளைஞர்களால் மட்டுமே இந்திய தேசத்தை உலகத்தில் தலைசிறந்த நாடாக மாற்றமுடியும் என்று மிகவும் நம்பினார்.
அவர் இளைஞர்களைப் பார்த்து ..
ARISE, AWAKE AND STOP NOT TILL THE GOAL IS REACHED
அதாவது
எழுமின், விழிமின் குறிக்கோளை அடையாது ஓயாது உழைமின்!
பாகம் : 2 தொடரும்... அடுத்த பகுதியில்..
No comments:
Post a Comment