Wednesday, 15 January 2020

*ராஷ்ட்ரபந்து L. K. துளசிராம் - 150 வது பிறந்த நாள் (14.01.2020).


*ராஷ்ட்ரபந்து*
 *L. K. துளசிராம்* அவர்களின் 150 வது பிறந்த நாள் இன்று (14.01.2020).

பாரதியாரின் பாடல்களைத் தடையை மீறி சட்டசபையில் முழங்கியவரும்,
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கென மதுரையில் உயர்நிலைப் பள்ளியை நிறுவி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரும்,
மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடியும்,
நெசவாளர்களுக்கு தெருவில் பாவு நீட்டுவதற்கு உரிமை பெற்றுத்தந்தவரும்,
சௌராஷ்ட்ர சமூகத்தின் தந்தையுமான
"' *ராஷ்ட்ரபந்து*
*L. K. துளசிராம் B.A.B.L.,* அவர்களின் *150* வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது  

நாள் : *14.01.2020*  *செவ்வாய்க்கிழமை* 
நேரம் : *காலை 08.30* *மணி* 
 *இடம்:சௌராஷ்ட்ர* *ஆண்கள் மேல்நிலைப்* *பள்ளி,* 
 *காமராஜர் சாலை,* 
 *மதுரை - 9* 
அலைகடலென திரண்டு வந்தனர் !
இவண் :
*கே தேவராஜ்,* 
நிறுவனர், *அவ்ராம் அமி* *டிரஸ்ட்.* 
செல்:9443832105வாட்ஸ் ஆப் செய்தி 14.1.2020 
அனைவருக்கும் வணக்கம், 


இன்று 14-01-2020 மாலை சரியாக 5.30 மணிக்கு ராஷ்டிரபந்து L.K. துளசிராம் அவர்களின் பிறந்த நாள் சேம்பர் அலுவலகத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. அனைவரும் பங்குகொள்ள வேண்டுகிறோம்.சரியாக மாலை 6.00 மணிக்கு சௌராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இதில் வங்கியின் தலைவர் திரு. T. S. சாரதி அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்.அனைவரும் தவறாது கலந்து கொள்ள விரும்புகிறோம். நன்றி

General Secretary
***********************


Saturday, 11 January 2020

தாய்மொழி தினவிழா அழைப்பு - மா.க.பே -கவியரங்கம் -16.2.2020

மாமதுரைக் கவிஞர் பேரவையின்  
தாய்மொழி தினவிழா அழைப்பு - 
கவியரங்கம் -16.2.2020


அனைவரும் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்துத் தருமாறு உங்களை மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பாக
 அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 
நன்றி 
*********Monday, 30 December 2019

29.12.19 கவியரங்கம் - எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டு...மா.க.பே


மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில்
மாமதுரைக் கவிஞர் பேரவையின் 
தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவனார் தலைமையில் நடந்த கவியரங்கம் - 
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்...
முன்னிலை செயலர் கவிஞர் இரா.இரவி.
நாள் 29.12.2019.படங்கள் 
புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் மற்றும் கு.கி.கங்காதரன் அவர்களின் கை வண்ணம்   
அன்று நான் வாசித்தக் கவிதை 
எல்லோரும் தமிழ்ப்படிக்க வேண்டுமென்றால்

இருமொழியில் பயிற்றுமொழிச் சட்டம் வேண்டும்
கு.கி.கங்காதரன்   9865642333

இருகை தட்டினால் ஓசை எழுந்துவரும்
இருமொழியில் பயிற்றுமொழி அறிவை வழங்கிவரும்
வலதுகையை தமிழாக வைத்துக்கொள்வோம்
இடதுகையை ஆங்கிலமாய் ஏற்றுக்கொள்வோம்
இரண்டும் நமதானால் இயக்கம் நமைக்காக்கும்
இல்லை என்றால் இழப்பு நமைக்கெடுக்கும்

கம்பகாதை திருக்குறளே தமிழின் கதியாகும்
கவித்தமிழை ஆங்கிலத்தை பயிற்றுமொழியாய்க்
கற்றால்தான் தமிழினத்தின் விதிமாறும்
சும்மா இருந்தால் தமிழின் சுதந்திரமே பறிபோகும்
தமிழ்மொழியைக் கற்காத கூட்டம் பெருகிவிடும்
அமிழ்தத்தின் அடையாளம் அழிந்துவிடும்.

கதிரவனுக்கு பகையாக நிலவு நின்றிடுமா?
கடலுக்குப் பகையாய்க் கரைகள் மாறிடுமா?
தங்கத்திற்குப் பகையாய்ச் செம்பு சிரித்திடுமா?
தமிழுக்குப் பகையாய் ஆங்கிலம் எழுந்திடுமா?
தமிழ்வழியில் பயிற்றுமொழிச் சட்டம் வந்தால்
தமிழ்வளர்ச்சி ஆங்கிலத்தைத் தாண்டிச் செல்லும்.

காட்சி காண இரண்டு கண்கள் தேவை
கடந்து செல்ல இரண்டு கால்கள் தேவை
கற்றுக்கொள்ள இரண்டு மொழிகள் தேவை
கம்பர் இரண்டு மொழிகள் கற்கவில்லையா?
காலத்தை வென்றிங்கே நிற்கவில்லையா?
கற்றுக்கொள் தமிழா பயிற்றுமொழியாய்த் தமிழையுமே.

மேலும் இந்நிகழ்ச்சி பற்றிய மின்படத்தொகுப்பிற்கு 
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் நன்றி 
Monday, 23 December 2019

அறியும் அறிவு வகைகள் - புதுக்கவிதை - மதுரை கங்காதரன்

அறியும் அறிவு வகைகள் 
       புதுக்கவிதை
    மதுரை கங்காதரன்

உணர்வால் அறிவர் ஞானிகள்
உயிரால் அறிவர் முனிகள்

கற்று அறிவர் அறிஞர்கள்
கேட்டு அறிவர் மேதாவிகள்

படித்து அறிவர் அறிவாளிகள்
பார்த்து அறிவர் குருமார்கள்

அறிந்தும் அறியார் பாமரர்கள்
எதையும் அறியார் மக்குகள்
          ***********

Tuesday, 17 December 2019

24.11.19 அன்று மதுரை அதிதியின் 11ம் ஆண்டு விழா - சில மின்படங்கள்

24.11.19 அன்று மதுரை அதிதியின் 11ம் ஆண்டு விழா - மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
அன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
அன்றைய நிகழ்ச்சியின் சில மின்படங்கள்  *************************