Pages

Saturday, 21 July 2012

புகை உயிருக்கு பகை - பரிசு கவிதை

புகை உயிருக்கு பகை - பரிசு கவிதை 






அகில இந்திய தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் மாநில அளவில் நடந்த புது கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது 

புகை பிடிப்பவனே 
கொஞ்சம் நில்.


என்னை ஆசையாய் எடுத்தாய் 
ஆதரவாய் முத்தமிட்டாய் 
அன்பென எண்ணி ஏமாந்தேன் - பிறகு 


தீயிட்டும் பொசுக்கினாய் 
'இறந்து விட்டேன்' என்று எண்ணி.


நானும் பொசுக்குவேன் - உன் 
உடம்பினுள் புகையாக மாறி.


அது மட்டுமா?
சுகத்தைத தந்த நான்- உன் 
சுகத்தை அழிக்கப்போகிறேன் .


ஒரு நாள் உன்னையும் 
'புற்று நோய்' சூட்டால் 
எரித்துச சாம்பலாக்குவேன்.


என் வெள்ளாடையை 
எரித்தாயல்லவா?  உன் 
மனைவிக்கு அந்த வெள்ளாடையை 
பரிசளிப்பேன்.


பௌர்ணமி போல  இருக்கும் 
உன் வாழ்வை  என் 
புகை கொண்டு மூடி 
அமாவாசையாக்குவேன்.


இதெல்லாம் தேவையா? நான் 
என்ன உன் கை பாவையா.?


மனிதா 
என் புகை உயிருக்குப் பகை 
அதை மறந்துவிட்டால் 
வாழ்வை துறந்துவிடுவாய்.!


என்னை முத்தமிட்டவர்கள் 
மாண்டு போவார்கள் 
ஜாக்கிரதை!


'ரெட்' அபாய அறிகுறி 
'சிகரெட்' மரண அறிகுறி.







  

No comments:

Post a Comment