ஆடும் வரையில் ஆடு - பாடும் வரையில் பாடு - வாழும் வரையில் வாழு -
LIVE YOUR LIFE AT THE MAXIMUM HAPPY
PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன்
முன் பின் 'தெரியாது' கள் ஆயிரம் நடுவில்
இன்றைய வாழ்க்கை ஓடுகிறது.
நாளை காய்கறிகளின் விலை எப்படி இருக்கும்?
தெரியாது!
நாளை ரயில், பஸ் , விமான கட்டணம் கூடுமா?
தெரியாது!
நாளை பெட்ரோல் விலை கூடுமா? குறையுமா?
தெரியாது!
நாளைய பிரதமர் இவர் தான் இருப்பாரா?
தெரியாது!
நாளைக்கு இந்த அமைச்சர் பதவியில் இருப்பாரா?
தெரியாது!
நாளைக்கு சட்ட, பாராளுமன்றம் ஒழுங்காக நடக்குமா?
தெரியாது!
நாளை இந்த கட்சித் தலைவர் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா?
தெரியாது!
நாளைக்கு கூடங்குளம் அணுமின் உற்பத்தி தொடங்குமா?
தெரியாது!
நாளைக்கு கல்விக்கட்டணம் இதுபோல் இருக்குமா?
தெரியாது!
நாளைக்கு நுழைவுத் தேர்வு நடக்குமா? நடக்காதா?
தெரியாது!
நாளைக்கு அரசு ஊழியர்களின் வேலை நிலைக்குமா?
தெரியாது!
நாளைக்கு தங்கம், ஷேர், ஊக வணிகம் ஏறுமா? இறங்குமா?
தெரியாது!
நாளைக்கு புதுச் சட்டம் அமுலுக்கு வருமா? வராதா?
தெரியாது!
நாளைக்கு இந்த வழக்கு முடியுமா? முடியாதா?
தெரியாது!
நாளைக்கு அரசு கொள்கை மாறுமா? மாறாதா?
தெரியாது!
நாளைக்கு அந்த தலைவர் இந்த அணியில் தான் இருப்பாரா?
தெரியாது!
நாளைக்கு நிவாரணம் கிடைக்குமா? கிடைக்காதா?
தெரியாது!
நாளைக்கு காவேரி தண்ணீர் வருமா? வராதா?
தெரியாது!
நாளைக்கு இந்த அணி ஜெயிக்குமா? தோற்குமா/
தெரியாது!
நாளை உலகம் இருக்குமா ? அழியுமா?
தெரியாது!
இன்னும் 'தெரியாது' கள் எவ்வளவோ!
ஏன் என்று புரியவில்லை பலருக்கு?
'தெரியாது' கள் பற்றி கவலை கொள்ளாதே!
ஆடும் வரையில் நீ மகிழ்ச்சியுடன் ஆடு.
பாடும் வரையில் நீ கவலை மறந்து பாடு
வாழும் வரையில் சந்தோசமாக வாழு!
நன்றி
வணக்கம்.
No comments:
Post a Comment