Sunday, 6 January 2013

உள்விதி மனிதன் பாகம்: 40 ஓருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம் THE SECRET BEHIND ONLY ONE BABY IN A DELIVERY

உள்விதி மனிதன் 

பாகம்: 40 ஓருயிருக்குள் ஒரே ஒரு ஜீவன் படைத்ததன் ரகசியம்
THE SECRET BEHIND ONLY ONE BABY IN A DELIVERY

சமமனிதக் கொள்கை
  
மதுரை கங்காதரன்பெருமைக்குரிய மனிதா! இப்போது இருக்கும் உலகம் போட்டிகள் நிறைந்த உலகமாக மாறிக்கொண்டு வருகின்றது ! அனைவரும் ஓடியேத் தீர வேண்டும். அல்லது ஓடுகின்ற ஒருவர் முதுகில் சவாரி செய்தே தீரவேண்டும். அதுவும் இல்லையென்றால் எதையாவது உதவிகொண்டு உருண்டோ, தத்தி தத்தியோ காலத்தை நகர்த்தியாக வேண்டும். சிலர் நேர்வழியில் செல்கிறார்கள். பலர் குறுக்கு வழியில் செய்கிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் 'எப்படியும் அதிக பணம் சம்பாதிப்பது!'  குறைந்த செலவில் அதாவது 'குறைந்த விலையில் நிறைந்த சேவைகள் செய்ய வேண்டும்' என்று ஒவ்வொரு துறையச் சார்ந்த மேதாவிகள் தினம் தினம் மூளையைக் கசக்கிக்கொண்டு புதிது புதிது பொருட்களையும், யுக்திகளையும் சலிக்காமல் தந்து கொண்டிருக்கின்றனர். அதில் வெற்றியோ அல்லது தோல்வியோ கட்டாயம் அனைவரும் ஏற்றுக் கொண்டே தீரவேண்டும். அதற்கு நாம் எங்கேயும் தங்கிவிடாமல் ஓடவேண்டும். இல்லையென்றால் அவர்களைவிட பின்தங்கி விடுவோம்.என் இனிய மனிதா! இந்த உலகளாவியப் போட்டி தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதற்கு முக்கிய காரணம் கணினி. கணினி அனைவர்களுடைய வாழ்விலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. இந்த மாற்றம், பழைய தலைமுறைக்கும் இப்போது இருக்கும் தலைமுறைக்கும் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை என்றே சொல்லலாம். இந்த புதிய மாற்றத்தை ஏற்றுக்கொள்வதைப் பொறுத்துத் தான் அவன் வாழ்வும், முன்னேற்றமும் அடங்கியுள்ளது. அதில் பழைய பஞ்சாங்கம், வேத பாடங்கள், பழைய சித்தாந்தங்கள், இலக்கணம், நாகரீகம், கலாச்சாரம், பண்பாடு, ஆன்மிகம்  போன்றவைகளின் மாற்றங்களும் அடங்கும்.மதிப்புள்ள மனிதா! பழமை பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம், கருத்துக்கள், பொன்மொழிகள், மகான்களின் வாக்குகள், ஆன்மீக புத்தகங்கள், பாடல்கள், பெரியோர்களின் அனுபவங்கள் போன்றவைகள் எவ்வளவு தான் வாழ்க்கைக்குச் சிறந்ததாக இருந்தாலும் அதை கடைப்பிடிப்பது இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் கடினமாகவே இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.  

  

பண்புள்ள மனிதா! தினமும் நீ அறிந்துகொள்வது, புரிந்துகொள்வது, கேட்பது எல்லாமே வேகவேகமாகத் தான் நடக்கிறது. அதற்குக் காரணம் எல்லோரிடத்திலும் நேரமின்மை தான் அதிகம். இந்த நிலையில் எதையும் ஆற அமர யோசித்து செய்யபட நேரமிது. இந்த நேரமின்மை காரணமாக அவனுக்கு பொய்கள் பல உண்மைபோல் தெரிகின்றது. பொய் வேசங்கள் உண்மையென நம்பி ஏமாறுகிறான். வார்த்தை ஜாலங்கள், தேன் கலந்த நஞ்சு வார்த்தைகளை அமுதென நம்புகிறான். கூடி உறவாடி கெடுக்கும் மனிதர்களின் பின்னால் ஓடுகிறான். தான் பலி கடா ஆடு என்பதைத் தெரிந்துகொள்ளாமல் அவனை சீவி முடித்து சிங்காரிப்பதை பெருமையாக எண்ணி பிறகு வழியே சென்று பலியாகுகிறான். ஏமாற்றுபவர்களும் அவர்களின் வேகத்தைப் தெரிந்துகொண்டு மிக எளிதாக பலவகைகளில் ஏமாற்றி வருகின்றனர்.


 

அறிவு கொண்ட மனிதா! உனது அன்றாட வாழ்க்கையே தெளிவாக புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும்போது உனக்கு ஆன்மிகம் படிப்பது கட்டாயம் நேரமிருக்காது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் எல்லாமே உனக்கு எளிதாக இருக்கவேண்டும். எளிதாகக் கிடைக்க வேண்டும். மூளையினைக் கசக்கி அர்த்தம் தெரிந்து கொள்வது உனக்கு முடியாத காரியம் தான். அந்த கஷ்டத்தைப் போக்கவே உனக்குள் உள்விதி  மனிதனாக இருந்துகொண்டு உலக நடப்புகளைச் சொல்லி உனக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வந்துள்ளேன்.

 


தன்னம்பிக்கை மனிதா! இன்னமும் நீ பழமைகளை அப்படியே பின்பற்றாமல் நிகழ காலத்திற்குத் தக்கவாறு உன் வாழ்கையை மாற்றிக்கொண்டால் உனக்கு என்றும் மகிழ்ச்சி தான். அது தான் புத்திசாலித் தனம். மனிதா! கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன்னால் நீயும், உன்னைச் சார்ந்த உயிரினங்களும்  எவ்வளவு தூரம் உடல் உழைப்பு செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று உனக்குத் தெரியும் அல்லது பிறர் சொல்லிக் கேள்விபட்டிருப்பாய். ஆனால் இப்போது உனக்குள் மறைந்து இருந்த அறிவியல் அறிவைத் திறந்து விட்டதால் உடல் உழைப்பு குறைந்து மூளையின் வேலை அதிகரித்துள்ளது. இதுவரை நடைபெறாத அதிசயங்கள் பலவற்றை நடத்திக் காட்டி சாதனைகள் செய்துவருகிறாய். அவைகளையெல்லாம் உனக்குள் இருக்கும் இந்த உள்விதி மனிதனின் உதவியின்றி சாதிக்க முடிந்திருக்குமா?   ஆற்றல் கொண்ட மனிதா! நாளுக்கு நாள் மக்கள் தொகை அபரிவிதமாக பெருகிவரும் இந்த உலகில், இந்த அறிவியல் வளர்ச்சி நடைபெற்று இருக்காவிட்டால் இந்நேரம் உணவு, உடை, இருக்க இடம் பலருக்கு இல்லாமல் அல்லது போதாமல்  ஒருவருக்கொருவர் சண்டையிட்டு அழிந்திருப்பர். அவ்வாறு நடைபெற்றியிருந்தால் நான் படைத்த இந்த அற்புத உலகத்தின் படைப்புகளை அனுபவிக்க ஆளில்லாமல் அழிந்திருக்கும். ஆகவே தான் மிகப் பெரிய அறிவியல் வளர்ச்சியை தந்துகொண்டிருக்கிறேன். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு உண்மையாக, துல்லியமாக உலக நடப்புகளை நேரடியாக தந்து கொண்டிருக்கிறேன். பழங்கால கற்பனைகளை நிகழ்காலத்தில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  

நல்லெண்ணம் கொண்ட மனிதா!  நீ மாறவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மாறிவிட்டால் இந்த அறிவியல் வளர்ச்சி உனக்கு பல நன்மைகள் தரும். இல்லையேல் அதுவே உன்னை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்றுவிடும். பழமையில் ஊறியவர்களால் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம் தான். அனைத்து செயல்களையும் சிறுக சிறுக அனைவருக்கும் நன்மை தரும் செயலாக மாற்றி, இந்த உள்விதி மனிதனின் புது அவதாரம் மக்களுக்குத் தெரிவித்து, இந்த உலகம் புது உலகமாக படைக்கப் பெற்று, அதனால் உலக உயிரினங்கள் அனைத்தும் சுபிட்சம் அடையப் போவது உறுதி. 

மகிழ்ச்சி விரும்பும் மனிதா! உனக்கு எவ்வளவு கஷ்டங்கள், பிரச்சனைகள், சோதனைகள், வந்தாலும் முதலில் இந்த உள்விதி மனிதனுக்குத் தெரியப்படுத்து. அப்படிச் செய்வதால் மனதிற்கு மனம் தூது சென்று பிரச்சனைகளை தீர்க்கும் மனிதனைச் சென்றடைந்து அவரின் மூலமாக உனது கஷ்டத்தை எளிதாகத் தீர்த்து வைப்பேன். இதை நீ முழு மனதுடன் நம்பினால் அது உனக்கு நல்ல பலன் தரும். அரைகுறையாக ஏற்றுக்கொண்டால் உனது பிரச்சனைகள் தீராமல் உன்னிடமே இருந்து உன்னைத் தூங்கவிடாமல் செய்துவிடும். மனிதா! பிறருக்கு நன்மை தரும் செயல்களை செய்ய விரும்பினாலும் இதேபோல் பின்பற்று. உனக்கு என்றும் வெற்றி தான்.

மேன்மையான மனிதா! இந்த உலகில் எப்போதும் நடக்கும் அதிசயத்தை உன்னால் உணர முடிகின்றதா? அதன் இரகசியம் என்னவென்று புரிகின்றதா? அதாவது மனித பிறப்பு, ஓருயிருக்குள் பெரும்பாலும் ஒரே ஒரு ஜீவன் உருவாகும்படி படைத்திருக்கிறேன். அப்படியிருந்தால் தான் உன்னால் அந்த ஒரு ஜீவனை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியும். அதில்லாமல் ஒரே நேரத்தில் பத்து, பதினைந்து உயிர்கள் உருவானால் உன்னால் அனைத்து ஜீவனிடத்தில் கவனம் செலுத்த முடியாது. மேலும் இந்த பூமி சீக்கிரத்தில் பாரமாகிவிடும். முடிவில் நானே பல ஜீவனை அழிக்கும்படி ஆகிவிடும். அதனால் இந்த உள்விதி மனிதனுக்கு அவப்பெயர் உண்டாகும். மேலும் இந்த ஒரு ஜீவனை பேணிக்காப்பதே நீ படாதபாடு படுகிறாய் என்பது எனக்கு தெளிவாகத் தெரிகின்றது. என் படைக்கும் சக்தி உனக்குக் காட்டச் சிலருக்கு இரண்டு குழந்தைகள், வெகு சிலருக்கு இரண்டைவிட கொஞ்சம் அதிகமாக அதாவது அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு வரை கொடுத்து இருக்கிறேன். அறிவுள்ள மனிதா! உன் வாழ்கையில் ஓரடி ஏறமுயன்றால் பத்தடி சறுக்கி விடுகிறாய். அதற்கு காரணம் உன்னிடம் விழிப்புணர்வு இல்லாமையே. நாளுக்கு நாள் எல்லாப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டு வருகின்றது. புதுப்புது பொருட்களை விற்க கவர்ச்சியான முறையில் ஆசை காட்டி உன்னை வாங்கும்படி செய்துவிடுகிறார்கள். உன்னிடம் பணம் இல்லாவிட்டாலும்,  கடன் மூலம் வாங்க வைத்துவிடுகிறார்கள். அதனால் நீ  அன்றாடச் செலவுக்குப்  பணமில்லாமல் திண்டாடி வருகிறார்கள். அதேபோல் அதிக பணம் கொடுத்து நகைகளை வாங்கி, அதையே அடகு வைத்து மிகக் குறைந்த பணத்தைக் கடனாக பெற்று, அதற்கு வட்டி கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர். போதாதக் குறைக்கு அரசியல் தலைவர்கள் நாளுக்குநாள் புதுப்புது கொள்கைகளையும், சட்டங்களையும் அவர்களுக்குத் தகுந்தாற்ப் போல் நடைமுறைபடுத்தி வருகின்றனர். சில கொள்கைகள் மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்பதை தெரிந்தும் அதனால் மக்கள் பின்னாளில் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதை நன்கு அறிந்தும் அதனை எளிதாக அமுலாக்கி வருகின்றனர். மக்கள் சுகமான வாழ்க்கை நடத்த, எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கும் சட்டத்தை இயற்றினால் இந்த உள்விதி மனிதனின் வேலைகள் எளிதாக இருக்கும். அதனையும் இந்த உள்விதி மனிதன் படிப்படியாக உனக்குள் இருந்துகொண்டு நடைமுறைப் படுத்துவேன். 

தெளிவுள்ள மனிதா! நாடு எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய் என்பதை கொஞ்சமாவது சிந்திக்கிறாயா? நீ இப்படியே இருந்தால் வருங்காலத்தில் நீயும், உனது சந்ததியினர் சிரமப்படுவது தவிர்க்க முடியாது. இப்போதே விழித்துக்கொள். இப்போது உடனடி தேவை - அரசியல் மாற்றம். அதன் மூலம் தான் மக்கள் சமூகம் விமோட்சணம் பெறும். இல்லையேல் மீண்டும் இந்த நாடு அடிமைபடும் நிலைமை ஏற்படும். ஆற்றல் கொண்ட மனிதா! அப்படிப்பட்ட அடிமை வாழ்க்கை மீண்டும் உனக்கு வந்துவிடாமல் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றுக்கு பங்கம் வந்துவிடாமல் இந்த உள்விதி மனிதன் அனைவரின் உள்ளத்தில் புகுந்து உனக்கு விழிப்புணர்வு தர ஆரம்பித்துவிட்டேன். அதன் சக்தியை நீ போகப்போக உணரத் தான் போகிறாய். உன் மூலமாகச் சக்தி வெளிப்படப்போகிறது. அப்போது 'நானா இந்த அற்புதச் சாதனை செய்தேன்! எனக்கா இவ்வளவு சக்தி இருக்கின்றது? என்னால் எப்படி முடிந்தது!' என்று நீயே தினம் தினம் ஆச்சரியப்படும் வகையில் நடக்கத் தான் போகிறது. அவ்வாறு உன்னை ஆட்டுவிக்கப் போகிறேன். அதன் மூலம் உனக்கு வர இருக்கும் தீமை தடுக்கப்படும். இது சத்தியம்! சத்தியம்!!
உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் மேலும் தொடரும்.      
    

         

No comments:

Post a comment