பதினாறும் பெற்று பெருவாழ்வு கொடுக்கும் பொங்கல் பண்டிகை -
புதுக்கவிதை -
PONGAL VIZHA - PUTHU KAVITHAI
மதுரை கங்காதரன்
அதிகாலையில் கதிரவனை வணங்கச் செய்யும்
மங்கயர்களை அழகிய கோலங்களை இடச் செய்யும்
மாடு கன்றுகளுக்கு அலங்காரம் பண்ணச் செய்யும்
அனைத்து உறவுகளையும் அழைக்கச் செய்யும்
கரும்பின் இனிமையை கடித்து சுவைக்கச் செய்யும்
ருசியாக சர்க்கரைப் பொங்கலை பொங்கச் செய்யும்
வீரக்காளைகளை அடையாளம் காட்டும்
உழவர்களின் உழைப்பைப் போற்றச் செய்யும்
தொழிலில் லாபத்தை பெருகச் செய்யும்
செய்யும் வேளையில் புத்துணர்ச்சி கொடுக்கும்
அமுது கொடுக்கும் பூமியை நன்றி காட்டச் செய்யும்
பழையது கழித்து புதியதை கூட்டச் செய்யும்
என்றும் வாழ்கையில் மகிழ்ச்சி கிடைக்கச் செய்யும்
கஷ்டங்கள், கவலைகளை மடியச் செய்யும்
உங்கள் கனவுகளை நனவாகச் செய்யும்
உலகில் வாழ் தமிழர்களை வாழ்த்துக்களைச் சொல்லும்
மொத்தத்தில் பதினாறு செல்வங்கள் பெற்று
பெருவாழ்வு கொடுக்கும் இந்த பொங்கல் திருநாளில்
இல்லறங்கள் நல்லறமாய் சிறக்க
எல்லோர் இதயங்கள் தூய்மை பெற
ஏற்ற இறக்கமில்லா சமவாழ்வு வாழ
வாழ்வு கரும்பின் மேலிருந்து நுனிவரை இனிமை கூடுவது போல
எல்லோருக்கும் உள்ளம் கனிந்த
பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
நன்றி
வணக்கம்.
No comments:
Post a Comment