Pages

Tuesday, 31 July 2012

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - தங்க நகைகளுக்கு கடன் வழங்குதல்

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும் யோசனைகள் - தங்க நகைகளுக்கு  கடன் வழங்குதல் 




தங்கத்தின் மீதான நம்பிக்கை வரக் காரணம் :


என்னதான் விலை இருந்தாலும், உயந்தாலும் தங்கத்தின் பேரில் மக்களுக்கு அலாதியான மோகம் இருக்கத்தான் செய்கிறது. அதனால் குறைந்தது எல்லோரிடத்தில் ஒரு குண்டுமணியாவது தங்கம் இருக்கும் என்றே நம்பலாம்.இதற்கு காரணம் தொன்று தொட்டு தங்கத்தில் பேரில் இருக்கும் நம்பிக்கை.மேலும் இது ஒரு அதிக மதிப்புள்ள , எளிதில் பணமாக்கக் கூடிய , எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அசையும் சொத்து என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் அவசர காலத்தில் இது கட்டாயம் பலருக்கு கை கொடுத்து இருக்கின்றது.ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இதை ஒரு சேமிபபாகவே கருதுகின்றனர். திருமணம், விஷேச நாட்கள், பிறந்த நாள் மற்றும் அன்பளிப்புகளுக்கும் தங்கம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கின்றது.


தங்கநகை பேரில் கடன் வழங்கும் தொழில் :




இந்த தொழில் லாபமான தொழில் என்றே சொல்லலாம். இதற்கு  முக்கிய காரணம் தங்கத்தின் விலை குறையவே குறையாது. அப்படி குறைந்தாலும் மிகச்சிறிதளவே குறையும். இது  தான் இந்த தொழிலுக்கு வலுமையான காரணம்.

உதாரணமாக ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூபாய் 2800 என்று வைத்துகொள்வோம். ஆனால் கடன் வழங்கும்போது அதன் மதிப்பிலிருந்து குறைந்தபட்சம்  60 % தான் கடன் வழங்குகின்றனர்.அதாவது கிராம் ஒன்றுக்கு ரூபாய் 1800 முதல் 2000 வரை தான் பணமாக தருகின்றனர். மேலும் அந்த பணத்திற்கு குறைந்தபட்சம் 12% வட்டியையும் வசூல் செய்கின்றனர்.

ஆக  இந்த தொழிலில் பணத்திற்கு ஈடாக தங்கநகை கிடைகின்றது. அந்த பணத்திற்கு வட்டியும் கிடைக்கின்றது.

ஆனால் இந்த தொழிலில் கவனிக்க வேண்டியவை :

1. சுத்த தங்கம் தானா என்று காட்டாயம் சோதித்த பின்னரே கடன் வழங்க வேண்டும்.

2. தவறான வழியில் வராத் தங்கம் என்பதை நிச்சயம் உறுதி செய்ய வேண்டும்.

3. நேர்மையான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

4. வட்டி வரவை தவறாது வரவு வைப்பதும், வட்டி  கட்டியவுடன் தவறாமல் உடனே சரியான அவர்களுடைய நகைகளை திருப்பித்தர வேண்டும்.

மேற் கூறியபடிதவறாமல் நடந்து கொண்டால் இந்த தொழில் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

*********************************************************************************    

 இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                  அல்லது 

நன்று                         அல்லது 

பரவாயில்லை     அல்லது 

இன்னும் தெளிவு தேவை  


இதை 
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..



  

No comments:

Post a Comment