Tuesday, 25 September 2012

உள்விதி மனிதன் பாகம் : 4 உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் . I AM COMING HERE TO HELP YOU

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை  
(EQUAL HUMAN POLICYபாகம் : 4  உனக்கு உதவ நான் வந்திருக்கிறேன் .
I AM COMING HERE  TO HELP YOU


நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன். நான் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். உனக்குள் இருந்துகொண்டு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து தரவே உன்னுடன் பேசுகிறேன். நான் பேசுவது நன்றாக கேட்கின்றதா? நான் பேசுவது உனக்கு மட்டும் தான் கேட்கும். கவனித்து கேள். ஏனென்றால் உனது மகிழ்ச்சியான வாழ்வு என்னிடத்தில் தான் இருக்கின்றது. அதை நான் தர இப்போது உன்னுள் வந்திருக்கிறேன். சந்தோஷமாக ஏற்றுக் கொள். நலம் பல பெறுவாய்.அன்பு மனிதனே! உனக்காக பல அற்புதங்களை படைக்கவே நான் வந்துள்ளேன். இன்றோடு உனது அனைத்து கவலைகள், துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் விரட்டியடிக்கிறேன். ஏனென்றால் இன்று முதல் நான் உன் பக்கத்தில் இருக்கப் போகிறேன். நீ செய்யும் செயல்களில் நான் இருப்பேன். அனைத்தும் உன் நன்மைக்காக, மகிழ்ச்சிக்காக செய்யப் போகிறேன். உனக்கு எங்கு, எப்போது, எது நன்மை தருமோ அதை உன்னுள் இருந்து கொண்டு உன்னையே செய்யச் சொல்லி கட்டளையிடப் போகிறேன். இனி உனக்கு எப்போதும் வெற்றி தான். ஒரு வேளை தோல்வி ஏற்பட்டுவிட்டால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதனால் அதைப் பற்றி கவலைபடாதே!


உனக்குள் இருக்கும் எனது அபரிதமான அறிவையும், ஆற்றலையும் உன்மூலமாக் வெளிப்படுத்தி என்னைப் போல எப்போதும் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ளப் போகிறேன். என்னுடைய தொழிலில் முக்கியமானது உயிரினங்களை காப்பது. குறிப்பாக மனிதர்களை. ஏற்கனவே அதற்காக பலரை படைத்து அவர்களையும் என்னைப்போல் குணம் உள்ளவர்களாகவும், அன்புள்ளம், இரக்க குணம் கொண்டவர்களாகவும் இருக்கும்படி செய்துள்ளேன்.எனது தூதுவர்கள் காவி உடையோ, கறுப்பு உடையோ, சிவப்பு உடையோ, பச்சை உடையோ உடுத்திக் கொண்டு வருவார்கள் என்று நினைக்காதே. அவர்கள் எந்த உடையிலும் வரலாம். அவர்கள் ஒவ்வொருவரும் என்னைப் போல தொண்டுள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதாவது உனது நோய்களை குணப்படுத்தும் மருத்துவர்களாகவும், வேலை தருவதில் தொழிலதிபவர்களாகவும், புதுமைகளை கண்டு பிடிப்பதில் விஞ்ஞானிகளாகவும், மக்களுக்கு உதவி செய்வதில் சிறந்த அரசியல் தலைவராகவும், எல்லோரையும் சத்திய பாதையில் வழிநடத்திச் செல்லும் நல்ல வழிகாட்டியாகவும், சக்தி கொடுக்கும் வல்லமை படைத்தவராகவும், துயரைத் துடைக்கும் தூய உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்கள் எல்லோரும் நான் உனக்காக படைத்த நல்ல உள்ளங்கள். ஆம்! நாம் தான் அவர்கள்! அவர்கள் தான் நாங்கள்!
அவர்கள் அனைவரும் ஒரு சராசரி, ஏழை மற்றும் துன்பப்படும் மனிதர்களுக்கு அவர்களிடத்தில் இருக்கும் ஆற்றலை கொடுத்து எப்போதும் உன்னை மகிழ்ச்சியுடன் வாழவைக்கவேண்டும் என்பதே என் ஆசை. அளவற்ற சக்தியுடன் பொன்னும் பொருளும் உன்னுள் புதைந்து கிடக்கின்றது. அதன் மேல் தேவையில்லாதக் கஷ்டங்களை, துன்பங்களை ஏற்றி மனதை எப்போதும் அழுத்தமாகவே வைத்துக்கொண்டு இருக்கின்றாய். அதனால் தான் நீ மன அழுத்தம், மன உலைச்சல், நிம்மதியின்மை போன்றவற்றிற்கு ஆளாகிறாய். அவற்றையெல்லாம் அகற்றி விலைமதிப்பில்லா மகிழ்ச்சிப் புதையலை உனக்கு கொடுப்பதே எனது நோக்கம்.


பிரிய மனிதனே! இது நாள் வரை  நான் உனக்கு உதவி செய்ய அனுப்பியவர்கள் வெறும் பகட்டான வெட்டிப் பேச்சில் உன்னை மயக்கி, ஆக்கப்பூர்வமாக செயல் படாமல் மக்களை அவர்கள் விருப்பத்திற்குத்  தகுந்தாற்ப்போல் திசை திருப்பி, பல சித்து வேலைகளை தில்லுமுல்லு வேலைகளைச் செய்து சத்திய பாதையில் செல்லாமல் உன்னை  கஷ்டமான பாதையில் அழைத்துச் சென்று வந்தனர்.


நேசமுள்ள மனிதனே! இப்போது இன்று முதல் என் முறை ஆரம்பமாகிறது. இனிமேலும் நாம் அவர்களை காத்து இரட்சித்தோமானால் மனித சமுதாயம் சீரழிந்து கெட்டுவிடும். அப்போது நீ, நான் என்று பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்படப் போவது உறுதி. இந்த நேரத்திலிருந்து எனது முழு ஆற்றலையும் உனக்களித்து உன்னுடன் வாழப் போகிறேன். அதற்கான நேரம் தான் இது. 

நான் அவர்களுக்கு கொடுத்த கடமைகளை காற்றோடு பறக்கவிட்டு  அதாவது பிறர்க்கு உதவியாக இருப்பதை மறந்து,  பாவம் செய்யும் பாவிகளாகவும், ராட்சசர்களாக மாறி அப்பாவிகளையும், ஏழை எளியோர்களையும்,  நல்ல மனிதர்களையும் வாட்டி வதைத்து எனது கட்டளையும் மீறி அவர்கள் இஷ்டம் போல் மற்றவைகளை கை பொம்மைகளாக இன்னுமும் ஆட்டி படைத்து வருகின்றனர். 

இதனால் ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு இன்றி அனைவரும் நிம்மதியைத்தேடி தினமும் என் அசிரீ குரலை கேட்க வருகின்றனர். கடமை தவறி வழி நடப்பவர்களுக்கு உன் மூலமாக அவர்களின் கடமையை உணர்த்தவே வந்துள்ளேன். ஆங்காங்கு எனது நற்பணிகளை தங்கு தடையின்றி செய்ய பலரை உன் மூலமாக பலரை உருவாக்கப் போகிறேன். அதன் மூலம் மக்கள் சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் உன்னைக் கொண்டு அழைத்துச் செல்லப்போகிறேன். 

ஆகவே நீ சற்றும் கவலைப் படவேண்டாம். உன் கவலைகளை நான் போக்குகிறேன். யாரைக்கண்டும் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் எனது மெய் அன்பர்கள் உன்னுடன் இருந்து கொண்டு உன் மூலமாக மற்றவர்களுக்கு பல உதவிகளைச் செய்வார்கள். அவர்கள் எவ்வாறு மக்களுக்கு உதவி செய்வார்கள், எப்படி இருப்பார்கள், அவர்களை எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது என்பதை விளக்கவே நான் உனக்குள் வந்துள்ளேன். நான் உனக்குள் இருப்பதை அறிந்து கொண்டால் உனக்கு பயம் என்றுமில்லை. மனிதனே! கொஞ்சம் காத்திரு. நான் சொல்லியதை நினைத்து நினைத்து அசை போடு. சற்று இடைவெளி விட்டு மீண்டும் வருகிறேன்.       


என்னைப் பற்றிக்கொள் !

கடைசி வரை உன்னை கைவிடமாட்டேன்!


உன்னை அன்போடு அரவனைப்பேன்!

மகிழ்சி தருவேன் !
     இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / 
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS 
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

No comments:

Post a comment