கூடிய விரைவில் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து விளையாட்டில் ஆண் பெண் சமமாக
கலந்து விளையாடும் புரட்சி
(விரைவில் வர இருப்பவைகள்)
பொதுவாக எல்லோருக்கும் விளையாட்டில் சற்று ஆர்வம் அதிகமாக இருக்கும் என்றே சொல்லலாம். என்னதான் விளையாட்டு புகழைத் தந்தாலும் அது என்னவோ ஆண்கள் பங்குபெறும் விளையாட்டுக்குத் தான் அதிக புகழும், பணமும் பெற்றுத் தருகிறது. பெண்கள் என்னதான் சிறப்பாக விளையாடினாலும் அதை என்னமோ யாரும் கண்டு கொளவதில்லை. இது எதனால் என்றால் ??? என்னதான் புதுமை பெண்கள் பலர் வந்தாலும், சாதனை புரிந்தாலும் அவர்களை இன்னமும் விளையாட்டு உலகம் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை என்றே கூறலாம்.
அதேபோல் ஆண்கள் வெற்றி பெற்றால் ஒரு பரிசும், கௌரவமும், பெண்கள் பரிசு பெற்றால் ஆண்களை விடக் குறைவான பரிசும் கிடைக்கிறது. ஒருவேளை ஆண் ரசிகர்கள் அதிகமாக இருப்பாதால் தானோ? மேலும் பெண்கள் விளையாடும் போட்டியை பெண்கள் அதிகமாக பார்ப்பதில்லை என்பது உண்மை. இப்போது கிரிக்கெட் போன்ற போட்டியில் பெண் வர்ணனையாளர்கள் வந்துவிட்டார்கள்.
ஆண்களும் பெண்களும் இணைந்து செயல்படாத துறை ஏது ? கல்வித் துறையில், அரசியலில், காவல்துறையில், விற்பனைத்துறையில், ஆராயச்சியிலில், அலுவலகத்தில், தொழிலில், டி .வி யில், சினிமாவில், நிர்வாகமேலாண்மையில் ஏன் விண்வெளி பயணத்திலும் ஆண் பெண் இருவரும் கலந்து செல்கின்றனர். அதேபோல் ஏன் விளையாட்டுகளில் இருக்கக் கூடாது?
ஆண் பெண் இருவரும் கலந்து கொள்வதால் இவர்களின் திறமை வளரும். ஆண் பெண் சமத்துவத்திற்கு வழி வகுக்கும். புகழும், பெருமையும், பரிசும் ஒரே விதமாய் கிடைக்கும். இனிமேலும் புதிர் போட்டு இழுத்தடிக்க விருப்பவில்லை.
கூடிய விரைவில் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து போன்ற போட்டிகளில் அதாவது தொடாமல் விளையாடும் போட்டிகளில் ஆண் பெண் இரு பாலர் கலந்துகொள்ளும் கலப்பு போட்டிகளால் அதிக வளர்ச்சி பெறும். அதாவது டெஸ்ட், 50 ஓவர் போட்டியில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக விளையாட முடியாவிட்டாலும் 20 :20 போட்டியில் கண்டிப்பாக இருவர் இணைத்து விளையாடலாம். இதை ஐ.பி.எல் போல முதலில் ஆரம்பித்தால் கட்டாயம் ரசிகர்கள் அதிகமாக வருவார்கள். என்னென்றால் இது உலகளவில் யாரும் செய்யாத புது முயற்சி. கண்டிப்பாக அதிக வரவேற்பு பெறும்.
நேற்று முன்தினம் (2.2.13) பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் சதம் அடித்த காமினியை கண்டு கொள்ளாத்தையே ஒரு உதாரணம் கூறலாம். இது நம் நாட்டில் மட்டுமல்ல். உலகளவிலும் பெண்களுக்கு இந்த கதி தான்.
சில விளையாட்டுகளில் இத்தகைய கலப்பு விளையாட்டு இருக்கின்றது. அதாவது டென்னிஸ், கேரம், பூப்பந்து போன்ற விளையாட்டுகள் உதாரணமாகச் சொல்லலாம்.
ஆகவே கிரிகெட் 20:20 போட்டியில், ஹாக்கி, கால்பந்து போன்ற போட்டிகளில் பெண்களின் பங்கு சமமாக கொடுத்து இதுவும் ஒரு பிரிவு போல ஏற்படுத்தி ஒலிம்பிக்கில் அறிமுகப் படுத்தினால் நிச்சயம் விளையாட்டு உலகில் ஒரு புது புரட்சி தான். இதற்கு உங்கள் வரவேற்பு எப்படி? நூற்றுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்?? இதன் மூலம் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
அல்லது e.mail id : gangadharan.kk2012@gmail.com அல்லது
கைபேசி எண் +91 9865642333
நன்றி, வணக்கம்.
No comments:
Post a Comment