Pages

Thursday, 6 September 2012

எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் - புதுக்கவிதை - HAPPY BIRTH DAY GREETINGS TO YOU A MODERN POEM MADURAI GANGADHARAN


இன்று பிறந்தநாள் காணும் அனைத்து 
         நல்ல உள்ளங்களுக்கும் 



எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
                   புதுக்கவிதை 
             மதுரை கங்காதரன் 

HAPPY BIRTH DAY GREETINGS TO YOU
                  A MODERN POEM
           MADURAI GANGADHARAN



இன்று வாழ்க்கை பயணம் 
தொடரும் புது நாள் 
ஒரு மைல் கல் கடந்த நாள்.

உன் வாழ்வில் பொன்மலர் 
மலர்ந்த நாள்.
இந்த இனிய நன்னாளில் 

உன் நிழலாய் மகிழ்ச்சி 
தொடரட்டும்.

நிறைமதி போல் சந்தோசம் 
பொங்கட்டும்.

வண்ணப் பூக்களாய் எண்ணங்கள் 
விளங்கட்டும்.

கடலலையாய் உன்னை எப்போதும் 
வாழ்த்தட்டும்.

தென்றல் உன் வாழ்க்கைப் பயணத்திற்கு 
வழிகாட்டட்டும்.

கண்ணாடி மன மழலை போல் கவலைகள் 
களையட்டும்.

குயில்கள் உன் செவியில் கானம் 
இசைக்கட்டும்.

நட்சத்திரங்கள் உன் கருங்கூந்தளுக்கு
மல்லிகை பூச்சரம் சூடட்டும்.

முத்தென வீழும் மழைத்துளிகள் உன் மென் மனதை 
நனைக்கட்டும்.

வசந்தகால மலர்கள் முகம் மலர மணம் 
வீசட்டும்.

வானவில்லின் ஏழு வண்ணங்கள் கழுத்திற்கு நகையாய் 
அணிவிக்கட்டும்.

காலை வான மேகங்கள் ஆடையாய் இருந்து 
அலங்கரிக்கட்டும் 

வானத்து தேவர்களாய் பெரியவர்கள் உன்னை 
வாழ்த்தட்டும்.

கார்த்திகை விளக்காய் இனிவரும் நாளும் 
என்றும் வாழ்க்கை பிரகாசிக்கட்டும்.




இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    


     .




1 comment: