Saturday, 18 August 2012

பாகம் - 4 நிறுவன வெற்றிக்கு உதவும் ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று -


பாகம் - 4 நிறுவன வெற்றிக்கு உதவும் 
ஐ . எஸ். ஒ 9001 : 2008 தரச் சான்று - 


புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், வியாபார அபிவிருத்தி செய்வதற்கும் மிகச்சிறந்த வழிமுறைகள்.

லாபம் தரும் வழிகள் 

ஐ.எஸ்.ஒ. 9001:2008 ஒரு எளிய பார்வை மாற்றங்களின்  விழிப்புணர்வையும், போட்டிகளையும் சமாளிக்க உதவும் ஐ.எஸ்.ஒ 


 


இன்றைய காலகட்ட உலகில் தினமும் ஒவ்வொரு துறைகளில் , பொருட்களில், சேவைகளின் பெரும் மாற்றங்கள் அதிவிரைவாக நடைபெற்று வருகின்றன. அந்த மாற்றங்களை பெரிய பெரிய நிறுவனங்கள் தான் பெரும்பாலும் கொண்டுவருகின்றன. அதைபற்றிய விழிப்புணர்வு மற்றும் தாக்கங்களை சிறிய நிறுவனங்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தெரிந்துகொண்டால் தான் அதற்கேற்றார்ப் போல் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக்கொண்டு, அவர்களின் போட்டிகளை சமாளித்து ஓரளவிற்க்காவது வெற்றி பெற முடியும்.வியாபாரத்தில் நிலைக்க முடியும்.

  

ஆனால் எப்போதும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.அதாவது இந்த மாற்றங்கள் ஒரேநாளில் வந்தது கிடையாது.வந்தும் விடாது. மாற்றங்களுக்கு தயாராகும் முன்னரே அவர்கள் பலவித ஆராய்ச்சிகளை செய்து பார்த்து, அதன் மூலம் கிடைக்கும் முடிவுகளை அலசி மறுபடியும் சோதனைகளில் ஈடுபட்டு அதில் வெற்றிகண்ட பின்னரே மாற்றங்களை செய்வதற்குத் தயாராகின்றனர். மாற்றங்களின் அர்த்தம் வேலைகளை முன்பிருந்தவை காட்டிலும் விரைவாக செய்யப்படுவதாக இருக்கலாம்.அதனால் பலன் உடனே கிடைக்கக் கூடியதாகவும் அதே சமயத்தில் நிறைந்த திருப்தியும், நல்ல தரத்துடன் மிகக்குறைந்த விலையில் தருவதாகவும் இருக்க வேண்டும்.

   

மாற்றங்கள் தானே வந்துவிடாது. நீங்கள் முன்னேற வேண்டுமானால் ஒரு நிலையான தர நிர்ணய முறை (ஐ.எஸ்.ஒ, டி .க்யூ.எம் போன்றவை) அல்லது ஒரு ரோல் மாடலையோ (Roll model) அல்லது அனுவமிக்க ஆலோசகர்கள் கொடுக்கும் அறிவுரை படியோ விடா முயற்சியும் , பயிற்சியால் மட்டுமே தான் மாற்றங்களை கொண்டுவர முடியும். மாற்றங்களை தவிர்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

  

ஏன் மாற்றம் வேண்டும் :


பல சிறிய நிறுவனங்கள் தங்களது அனைத்து செயல் முறைகளை முறைப்படி செய்யாமல் தங்களது இஷ்டம் போல் செய்து வருகின்றனர். அதுவும் மிகவும் பழைய அதாவது 1990 வருடத்திற்கு முன் ஆரம்பித்த நிறுவனங்கள் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் செயல்முறை படி கொஞ்சம் கூட நடைமுறைக்குத் தகுந்தாற்ப் போல் மாறாமல் செய்வதையே திரும்ப திரும்ப செய்து வருகின்றனர். ஆனால் திடீரென்று மாற்றங்கள் கொண்டுவர நினைத்தாலும் அவர்களால் அவ்வளவு எளிதாக கொண்டு வர முடிவதில்லை. அதனால் அவர்கள் பலவித சிரமத்திற்குள்ளாகி கடைசியில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும் நிலைமைக்கு தள்ளப் படுகிறார்கள். 


பெரும்பாலும் மாற்றங்களை தெரிந்து கொள்வதற்கு நிறுவன தலைவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. அதை தெரிந்த மேலாளர்களுக்கு கடினமாக உழைத்து , பெரும் முயற்சி செய்து அதை அனைத்து நிலையில் நடைமுறை படுத்துவதற்கு எண்ணங்கள் இருப்பதில்லை.அப்படி இருந்தாலும் மற்றவர்களின் ஒத்துழைப்பு கொஞ்சம் கூட கிடைப்பதில்லை. எதனாலென்றால் மாற்றங்களினால் வேலைப்பளு கூடுகிறது. வேலை கட்டாயம் செய்தே தீரவேண்டும். அதை பதிவு செய்யவும் வேண்டும். மேலும் மாற்றங்களை கொண்டுவருபவர்கள் பெரும்பாலும் வயது குறைத்தவர்கள், அவர்கள் சொல்படி நடக்க வேண்டுமா என்கிற 'அகங்காரம்'. அதனால் அவர்கள் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வருடக்கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். மாற்றங்கள் அவர்களுக்கு மட்டுமில்லை. அவைகளைச் சார்ந்த உள்ளே வெளியே இருப்பவர்களுக்கும் பொருந்துவதால் அவர்களுடைய ஒத்துழைப்பும் அதிகமாக தேவைபடுகின்றது. அதனால் எல்லோருக்கும் முறையான பலவித பயிற்சிகள் தேவைபடுகின்றது. பலவித ஆலோசனைகள் பெறுவதற்கு செலவுகள் செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்படுகின்றது. அந்த செலவு தொழிலாளிக்ககாக, அவனின் அறிவு வளர்ச்சிக்காக இருப்பதால் நிர்வாகம் செலவு செய்ய முன்வருதுவதில்லை. ஏனென்றால் அனைத்து பயிற்சிகள் கொடுத்த பிறகு வேறு ஒரு நிறுவனத்திற்கு சென்றுவிட்டால் அவனுக்காக செலவு செய்ததெல்லாம் வீண் என்றும் நினைப்பதால் மாற்றங்களுக்கு சிரமப்படு கிறார்கள். எனினும் எப்பாடுபட்டாவது அந்த மாற்றத்தை கொண்டுவந்து வெற்றி பெற்றுவருகிறார்கள்.
                        
 

ஐ.எஸ்.ஒ நடக்கும் வகுப்புகள் :

முன்பு பெரும்பாலும் ஐ.எஸ்.ஒ 9001 : 2008  நடக்கும் வகுப்புகள் நல்ல தரமான, ஆங்கிலம் நன்றாக பேசும் பயிற்றுனர்களை வைத்துதான் நடைபெறும். அதுவும் எடுத்தவுடன் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரை தலைமையிடமாககொண்டு ஐ.எஸ்.ஒ 9001 தர உத்திரவாதத்திற்கான மாதிரி வடிவம் 1988 யிலும் திருத்திய வடிவம் 1994 ல் ......... என்று ஆரம்பித்து இதில் 8 மூலக்கூறுகள் (Clauses) ....... இப்படியே கடைசியாக வரும் மூலக்கூறில் 8 வதாக  வளர்ச்சிகள் (Improvements) வரை விறுவிறுவென்று ஒப்பித்துவிடுவார்கள்.

 

பிறகு தான் அது தமிழில் ஒரு சில உதாரணங்களுடன் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் இன்னும் புரிகிறாற்போல் எளிமையாக விளக்கி அதன் பலனை முழுமையாக எடுத்துரைக்கும் முயற்சி தான் இந்த கட்டுரை.

ஐ.எஸ்.ஒ 9001 என்பதில் தர முறையின் வடிவமைப்பு (Quality Management System), உற்பத்தி(production), நிறுவுதல் (Development) சேவை (Service) மற்றும் வளர்ச்சி (improvement)  போன்றவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தர உத்திரவாதம் (Quality Assurance) ஆகியவை அடங்கியது.  International Organization for standardization (ISO) என்பதன் சுருக்கம் தான் ஐ.எஸ்.ஒ. அப்படியென்றால் IOS என்றுதானே வரவேண்டும். ஏன் இந்த மாற்றம்? ஒருவேளை நாம் மாறவேண்டுமென்பதற்காக இருக்கலாம். இதைப் போல் நமக்கு தெரிந்த சில படிப்புகளில் அதாவது MBBS (Bachelor of Medicine and Bachelor of Surgery - BMBS) மற்றும் Ph.D (Doctorate in Philosophy - D.Ph) என்று மாறி இருக்கின்றது. ஆனால் இந்த ISO வுக்கு முக்கியமான காரணங்கள் பல இருக்கின்றது. அதில் ஓன்று இதை எளிதாக உச்சரிக்கலாம். சரியான உதாரணம் சொல்ல வேண்டுமானால் I = Eye = கண்கள் என்று அர்த்தம் தானே. IS = eyes = கண்கள் என்பது சரிதானே. இரண்டு கண்களின் பார்வை குறைவில்லாமல் இருந்தால் 0 தான் சரியா. இந்த மூன்றையும் சேர்த்தால் ISO சரியா. அதாவது ஒரு உடலுக்கு குறைவில்லாத கண்கள் பார்வைக்கும் செயலுக்கும் எவ்வளவு முக்கியமானதோ அதுபோல் ஒரு நிறுவனத்துக்கு முக்கியமானது தரமும் உற்பத்தியும் இரு கண்களாகும். 

ISO என்பது 'ஒரே மாதிரி' என்பது பொருளாகும். அது எவை எவை என்றால் 'நாம் எதை சொல்லியிருக்கின்றோமோ அதைத் தான் செய்ய வேண்டும்.' அதாவது தர மேலாண்மை கையேட்டில் (Quality Manual) எதை எப்படி செய்ய வேண்டுமென்று சொல்லியிருக்கின்றோமோ அதன்படி செய்ய வேண்டும். அதாவது ஒரு கண் சொல்லுவதும், மறுகண்ணை செய்வதும் என்று வைத்துக்கொண்டால் இரண்டும் குறை வில்லாமல் சமமாக இருக்க வேண்டும். அதுதான் ISO ஆகும்.

அதாவது தர மேலாண்மை முறையில் (Quality Management System - QMS)  ஒரு நிறுவனம் வாடிக்கையாளர்கள் விரும்பும் பொருட்கள், அவற்றின் தரம் மற்றும் துரித சேவையினை எப்படி வழிமுறையினை உற்பத்தியின் ஆரம்பகட்ட முதல் எல்லா நிலையில் (all process) தரம் ஆராய்ந்து ( Quality Test) , தரக்கட்டுபாடு (Quality Control) செய்து தர உத்தரவாதம் (Quality Assurance)கொடுக்கும் தர மேலாண்மை முறையுடன் (Quality Management System) போன்றவற்றின் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களிடம் சேரும்வரை உள்ள செயல்முறைகள் ( Quality Procedures), குறிப்பேடுகள் (Quality Documents), பதிவேடுகள் (Quality Records) மற்றும் செய்முறைகள் (Work Instructions) ஆகியவை அடங்கும்.        

அப்படி உற்பத்தி செய்யும்போது ஏதேனும் தவறுதல் (Minor Non-Conformity - Minor NC)  அல்லது சற்று மாற்றி (Observation) அல்லது மீறும் (Major Non-Conformity - Major NC)நடவடிக்கையுடைய செயல்பாடுகள் செய்தால் அதை 'மனேஜ் ரெவிவ் மீட்டிங்' (Manage Review Meeting - MRM) ன் மூலம் தவறுக்கு தக்கபடி சரிசெய்யும் குறிபேட்டை (Modified Document) தயாரித்து அதன்படி  உடனே நடைமுறை படுத்தவேண்டும். அதன் புள்ளி விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து, அதை மீண்டும் ஆய்வு செய்து உறுதி படுத்திய பிறகே பொருட்களை உற்பத்தி செய்து வாடிக்கையாளருக்கு அனுப்பவண்டும். 

அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூபாய் 2000 தில் இன்ன வசதிகள், தரம் மற்றும் இதர குறிப்புகளின் படி மொபைல் தயாரித்து ஒரு லட்சம் எண்ணிக்கை குறித்த நேரத்தில் அனுப்பும்படி ஆர்டர் கொடுத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதேபோல் தான் தயாரித்து அனுப்பவேண்டும். இல்லையென்றால்  அந்த ஆர்டர் ரத்து செய்து வேறிடத்தில் அதை வாங்கிவிடுவார். இதனால் நிர்வாகத்திற்கு நஷ்டம் தான்.தொழிலாளர்கள் பட்ட கஷ்டம் வீண். பணவிரயம், நேரவிரயம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்காக பொருகளை தயாரித்ததால் அதை வேறு யாரும் வாங்கமாட்டார்கள்.அதனால் உற்பத்தியில் அனைத்து நிலையிலும் தரத்தை ஆராய்ந்தால் தான் இந்தமாதிரி நஷ்டத்திலிருந்து தப்பிக்கமுடியும்.


மற்றுமொறு உதாரணம்:


5 மூலப்பொருட்களை கொண்டு ஒரு பொருள் தயாரிப்பதாக வைத்துக்கொள்வோம். அதற்க்கு கீழ்க்கண்டவைகள் கவனமாக செய்யவேண்டும்.

1. 5 மூலப்பொருட்களின் தரம் மற்றும் எடைகள் சரியானவைகளாக இருக்க வேண்டும்.

2. அவற்றை சரியான முறையில் கலக்க வேண்டும்.3. அவற்றின் தரத்தை ஆய்வகத்தில்  வாடிக்கையாளர் கொடுத்திருக்கும் ஆர்டரின் குறிப்புகள் படி சோதனை செய்யவேண்டும்.

4. 'சரியாக இருக்கின்றது' என்கிற உத்தரவாதம் கொடுத்த பின்னரே சிறந்த முறையில் வாடிக்கையாளர் கவரும் வகையில் 'பேக்' செய்யவேண்டும்.  

5. எந்தவித சேதமில்லாமல் பாதுகாப்பான முறைகள் வாடிக்கையாளர் கேட்ட தேதிக்குள் கட்டாயம் அனுப்பவேண்டும்.

இதில் ஒவ்வொரு நிலையில் தரம் உறுதி செய்த பின்னரே அடுத்தநிலைக்கு தொடரவேண்டும். 

உதாரணமாக கலவை சரியில்லை என்ற முடிவை ஆய்வகத்தில் மூலம் தெரியப்படுத்தினால் அதை சரிசெய்த பின்னரே 'பேக்கிங் ' தொடரவேண்டும். அப்படி சரிசெய்யாமல் 'பேக்கிங் 'தொடர்ந்தால் அது கட்டாயம் வாடிக்கையாளர் வாங்க மாட்டார்கள். ஆக  அனைத்தும் வீணாகி போய்விடும். 


எதற்காக ஆரம்பம் முதல் முதல் கடைசிவரை தரம் சரிபார்ப்பதற்க்கான உதாரணம்...


ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் நடைபெறுவதற்கு ஜாதக பொருத்தம் இருதால் போதுமே. ஏன் குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு பேர், அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் ஆரோக்கியம், நிதிநிலைமை, என்ன பரம்பரை பார்கிறார்கள்.ஏனென்றால் நல்ல பரம்பரையாக இருந்தால் அவர்களின் சந்ததியினர்கள் நன்றாக இருப்பார்கள் என்கிற காரணம் தான். 

 

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு நல்ல அஸ்திவாரம், சிமென்ட், மணல், ஜல்லி, செங்கல், இரும்பு கம்பிகள் தண்ணீர் போன்றவை சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கவேண்டும். அப்படி கட்டுகின்ற கட்டிடம் மிகவும் வலுவாக இருக்கும். அதுபோல் ஒரு நிறுவனத்தை ஐ.எஸ்.ஒ என்கிற அஸ்திவாரத்தில் தர நிர்ணய முறையைக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்தால் அதிக வாடிக்கையாளர்களை பெற்று நிறுவனம் வலுவான நிலையில் இருக்கும்.      
    
  இன்னும் வரும் 

ஐ.எஸ்.ஒ உறுதிமொழி 


* நாம் நமது வேலைகளை நேசிப்போம் .

* வேலைகளில் சிறந்த கவனம் செலுத்துவோம். 

* தினமும் உயர்ந்த உற்பத்தி திறனுடன் வேலை செய்வேன்.
  
* எந்த வேலையிலும் நேற்றை விட இன்று சிறப்பாக, அதிக அளவுடன் செய்வோம். 

* புதுமைக்கு நிறைய கற்ப்போம். கற்பிப்போம். கற்றபடி தொழிலில்  புகுததுவோம்.

* ****கோடி நமது இலட்சியம். அதை அடைவதற்கு முழு முயற்சி செய்வோம்.

* ஒன்றுபடுவோம். ஒன்றாய் உழைப்போம். ஓயாத உழைப்பினால் உயர்ந்துகாட்டுவோம்.

நன்றி 
இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை கிளிக் செய்து  நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com    

No comments:

Post a comment