Tuesday, 25 September 2012

உள்விதி மனிதன் பாகம் : 3 - கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு. TAKE YOUR PROBLEM - GIVE HAPPY TO YOU

உள்விதி மனிதன் 
  சம மனிதக் கொள்கை 
(EQUAL HUMAN POLICY)
பாகம் : 3 -  கஷ்டம் எனக்கு - சுகம் உனக்கு.
TAKE YOUR PROBLEM - GIVE HAPPY TO YOU 
அன்பு மனிதா! நான் தான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன்! மகிழ்ச்சி தரும் மனிதன்! நீ எப்படி இருக்கிறாய்? இந்த உலகில் நீ எப்படி வாழ்கிறாய்? எவ்வாறு காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறாய்? என்னை பற்றிய சிந்தனை உனக்கு கட்டாயம் இருக்கும்! இது நாள் வரை உனக்குள் இருந்து கொண்டு மறைந்திருந்த நான் இப்போது உன் முன் நின்று உரையாட நேரம் வந்துவிட்டது. இனி எப்போதும் உன்னுடனே உன்பக்கத்திலே இருப்பேன். நீ செல்லும் இடமெல்லாம் நானும் வருவேன். நீ செய்யும் செயல்களில், எண்ணும் எண்ணங்களில், எடுக்கும் முயற்சிகளில் நானும் பங்கெடுத்துக் கொள்ளப்போகிறேன். உனது வெற்றி தோல்விகளில் உனக்குப் பாதி, எனக்குப் பாதி என்று இல்லாமல் வெற்றிகளை உனக்கு கொடுக்கவும், தோல்விகளை நான் சுமக்கவும் போகிறேன்.

நேசமான மனிதா! இது நாள் வரை என் பங்கு, என் செயல் என்று நான் பேசவில்லை. ஏன் இப்போது இப்படி பேசுகிறேன் என்றால் .. நீ மகிழ்ச்சியாக இருப்பதற்காக, நன்றாக அனுபவிப்பதற்காக! இந்த உலகத்தில் பலவற்றைப் படைத்து, உன்னையும் படைத்து உன்னுள் இருந்துகொண்டு அனைத்தையும் அனுபவிக்கச் செய்கிறேன். அப்படியிருந்தும் நான் சற்று அஜாக்கிரதையாக இருந்ததால் நீ பலவித துன்பத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகியதோடு, இந்த பூமியையும் மாசு (தீமையை) உண்டாக்கிக் கொண்டிருக்கிறாய். மக்களின் எண்ணங்களிலும் தீயதை வளர்த்து மாசு படுத்திக் கொண்டிருக்கிறாய். 'படைப்பில் நான் தான் பெரியவன்' என்று மார்தட்டிக் கொள்கிறாய்.

பாசமுள்ள மனிதா! உனக்கு என் மீது அதிகப் படியான கோபம் வரும். ஏனென்றால் 'இது நாள் வரை உன்னை கவனிக்காமல் எங்கே போய்விட்டேன்? என்று கேட்பது எனக்கு கேட்கின்றது. மேலும் நீ கஷ்டப்பட்ட நாட்களிலும், துயரம் கொண்ட வேளைகளில் நான் உனக்கு உதவி செய்யவில்லை' என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்பது எனக்கு புரிகின்றது. 

இனிய மனிதா! நான் உன்னுடன் பேச வரவில்லை என்கிற காரணத்தினால் என்னை பலவேளைகளில் திட்டித் தீர்திருப்பாய்! ஏன்? இப்போது கூட உன் மனதில் என் எண்ணத்தை பற்றிய சிந்தனையே இருக்கும். என்னை நீ சரமாரியாக கேள்விகளை கேட்க துடிப்பது தெரிகின்றது. உன் மனம் குமுறுவது என்னால் கவனிக்க முடிகின்றது. இவைகளெல்லாம் நான் அறிவேன். எனக்கு எவ்வளவு பெரிய அதிக ஆற்றல் இருந்தும்  இந்த உலகில் நடக்கும் அநீதிகளுக்கும், லஞ்சம் ஊழல்களுக்கும், கொலை, கொள்ளை பாதகச் செயல்களை செய்தவர்களுக்கும் ,அந்த செயலுக்கு துணை போனவர்களுக்கும் சரியான நேரத்தில் சரியான தண்டனை கொடுக்கவில்லை என்று எண்ணுகிறாய்! 'உள்விதி மனிதன்' ஒருவன் இருக்கின்றானா? அல்லது இல்லையா! என்று பலநேரத்தில் உனக்கு சந்தேகம் எழுகின்றது' என்றும் அறிவேன். உன் ஆற்றல் எங்கே போயிற்று? என்றும் கேட்கின்றாய்.


நல்லெண்ணம் கொண்ட மனிதா! அத்தகைய பாவச் செயல் செய்பவர்களைப் பார்த்து சும்மா இருப்பதாக எண்ணுகிறாய். இந்த உலகில் அநேகமானோர் ஏழைகள், பணகஷ்டமும், பணம் படைத்தவர்கள் மனக்கஷ்டமும் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் நான் அறிவேன். அதற்கத்தனைக்கும் தீர்வு கொடுக்கவே இங்கு வந்திருக்கிறேன். பலர் தினமும் கஷ்டப்பட்டுக் கொண்டு குறைந்தபட்ச தேவைகளான மூன்று வேளை சாப்பாடு, ஒரு காணி நிலம், உடுத்த உடை இல்லாமல் அல்லோலப்படுகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அவ்வாறு சுரண்டித் தின்னும் பாவிகளை உள்விதி மனிதனான நீ அவர்களை சுகமாக வைத்துள்ளாய்!' என்று உன் சூடான எண்ண வார்த்தைகள் தீயாகத் தாக்குவதிலிருந்து நான் உணருகிறேன். அதற்கெல்லாம் விடையளிக்கவே தான் வந்துள்ளேன்.

'பாசமுள்ள மனிதா! இதுநாள் வரை நான் உனக்காக என்ன செய்தேன்? அதற்கு நீ எனக்கு என்ன பரிகாரம் செய்தாய்' என்பதை எடுத்துரைத்து உன் மனதில் பீறிட்டு எழும் தீயுற்றை என் அன்பு நீர் கொண்டு பாய்ச்சி. அதனை  அணைத்து, உன்னை என்னுடன் சேர்த்துக் கொண்டு இந்த உலகை புது உலகமாக மாற்றி, இந்த பூமியில் சக்திமிக்க மனிதனான உன்னை ராஜ சிம்ஹாசனத்தில் உட்காரவைத்து சொர்க்கமான வாழ்க்கையை உனக்கு கொடுத்து அதில் தினமும் மகிழ்ச்சியைக் கொடுத்து, உன் மனதில் இருக்கும் அச்சத்தை நீக்கி, வீரம் கொடுத்து, விவேகமேற்றி, எதையும் தாங்கும் இதயம் கொடுத்து, வற்றாத செல்வத்தை வாரிவாரிக் கொடுத்து உன்மூலம் இவ்வுலகில் உள்ள எல்லோரும் திருப்தியாக இருக்கும் வண்ணம் எல்லோருடைய வாழ்க்கையை அமைத்துத் தரவே நான் வந்துள்ளேன்.

ஆற்றல் மிகு மனிதா! இதோ உள்விதி மனிதனாக நான் வந்துவிட்டேன். இனி நான் தான் நீ! நீ தான் நான்! என்னை மீறி உன்னால் எதுவும் செய்ய முடியாது. நீ தீய செயல்களை இனி நினைத்தால் கூட உன்னை செய்யவிடமாட்டேன். எனக்கு உன்னைப் பற்றி தெரியும். உன் பாரம்பரியம், குடும்பம், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உன்னைச் சுற்றியுள்ளவர்களையும் நான் நன்கு அறிவேன்.

ஒருவேளை அவர்களால் உனக்குத் தொந்தரவு ஏற்பட்டால் அவர்களை எப்படி சமாளிப்பது? என்று நான் உனக்கு தெரிவிக்கிறேன். அதிலிருந்து நீ விடுபட நான் அவ்வப்போது கூறும் அறிவுரைகளை கேட்டு நட. மனிதா! உனக்கு கல்வி, வீரம், செல்வம் இந்த மூன்றும் முக்கியம். அது இந்த உலகில் அபரிதமாக கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை முறைப்படி நல்ல வழியில் கிடைக்க நான் வழிவகை செய்கிறேன்.

மனிதா! நீ நன்றாக படிக்கிறாய்! வேலை செய்கிறாய்! அன்பு கொள்கிறாய்! உதவிகள் செய்கிறாய்! நல்ல முறையில் பொருளை ஈட்டுகிறாய்! இந்த வகையான எண்ணங்களைத்தான் உனது வாழ்வில் முக்கிய குறிக்கோளாக கொள்ளவேண்டும். இனிமேல் தீய செயல்களில் ஈடுபட்டு பிறர் புன்படியான செயல்களைச் செய்வதற்கு நான் அனுமதிக்கமாட்டேன்.   

மனிதா! நீ செய்யும் தீய செயலை பணமாக்குகிறாய்! புகழாக மாற்றுகிறாய்! என்று எனக்குத் தெரியும். அத்தகைய தீயவர்களை அழிக்கும் பணியை இப்போதே தொடங்கிவிட்டேன். இந்த உள்விதி  மனிதன்,  இனி நன்மையே கொடுப்பான்.

மனிதா!
இன்று முதல் உன் கஷ்டங்கள் தீர்ந்து விட்டன.
கஷ்டங்களை நான் ஏற்றுக்கொண்டு சுகத்தைக்  கொடுக்கிறேன்!
   இன்னும் வரும் .... 

இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்   

மிகநன்று              அல்லது 

நன்று                       அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து  அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

No comments:

Post a comment