Pages

Wednesday 29 May 2013

வாழ்கையில் கோட்டை கட்ட / கோட்டை விட வழிகள் - WAY TO LOOSE OR SUCCESS IN YOUR LIFE

வாழ்கையில் கோட்டை கட்ட அல்லது வாழ்கையை கோட்டை விட சில எளிய வழிகள் - 
                       
WAY TO LOOSE OR SUCCESS IN YOUR LIFE

    
புதுக்கவிதை 

வாழ்கையை நிறைய பேர் எப்படி வாழ்வது என்று தெரியாமல் மனம் போன படி வாழ்கின்றனர். அவர்களுக்கு பெரிதாக ஒரு பிரச்சனை வந்த பின்னர் தான் செய்வதறியாமல் புலம்புகின்றனர் / திணறுகின்றனர் / என்ன செய்வதறியாமல் தவிக்கின்றனர் / கஷ்டபடுகின்றனர் / நிம்மதி இழக்கின்றனர்.......... 

               

அவர்கள் எல்லோரும் வாழ்கையை கோட்டை விடும் வழியைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறவர்கள்..

ஆனால் ஒரு சிலர் மிகவும் திட்டமிட்டபடி மனத்திருப்தியுடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு பிரச்சனைகள் மிக மிக குறைவாகவே வரும். அதையும் மிக இலகுவாக சமாளித்துவிடுவார். ஆகையால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோசமாக வாழ்வர் / நிம்மதியாக வாழ்வர் / எவ்வித கஷ்டமில்லாமல் இருப்பர் / பிறர்க்கு உதவி செய்து நல்ல பேருடன் இருப்பர் ........................... 

               

அவர்கள் எல்லோரும் வாழ்கையில் (வெற்றிக்) கோட்டை கட்டும் வழியை தேர்ந்தெடுத்து வாழ்கிறவர்கள்.

முதலில் . . .

வாழ்கையை கோட்டை விடும் வழிகள் :  

தினம் தவறாமல் டி.வி சீரியல் பார்க்க வேண்டும் 
பாடம் படிக்காமல் ஊர் சுற்ற வேண்டும் 
பள்ளிக்கு 'கட்' அடித்து படத்திற்குச் செல்ல வேண்டும் 
கல்லூரியில் படிக்காமல் கடலை போட வேண்டும்.

வேலைக்குப் போகாமல் சோம்பேறியாக இருக்க வேண்டும் 
சம்பாதிக்கும் பணத்தில் குடித்துக் கெட்டுப் போகவேண்டும் 
புகைப்பிடித்து உடம்பை கரியாக்கிக் கொள்ளவேண்டும் 
'குட்கா' போட்டு மூளையை மங்கி கிடக்க வேண்டும்.

பகட்டு விளம்பரம் கண்டு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் 
தன்னம்பிக்கை இழந்து தளர்ச்சியாக இருக்க வேண்டும் 
விடா முயற்சி செய்யாமல் மூலையில் முடங்க வேண்டும்.
போலி கெளரவம் காட்ட பணத்தை வீணாக செலவழிக்க வேண்டும் 

இரக்கம் இல்லாத அரக்க குணம் காட்ட வேண்டும் 
பெண்கள் / ஆண்கள் பின்னால் சுற்றித் திரிய வேண்டும் 
தீய செயலில் ஈடுபட்டு தன்னையே அழித்துக்கொள்ள வேண்டும் 
பிறர்க்கு வேதனை கொடுத்து நிம்மதியை இழக்க வேண்டும்.

              

எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ள வேண்டும் 
போலி வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் 
பணத்தை ஊதாரித்தனமாக செலவழிக்க வேண்டும் 
வேண்டாத செலவு செய்து தற்பெருமை கொள்ள வேண்டும் 

சட்டம் மதிக்காமல் அசத்தியமாக செயலைச் செய்ய வேண்டும் 
மரியாதை தராமல் வறட்டு கெளரவம் காட்ட வேண்டும் 
'நான்' என்னும் அகம்பாவத்துடன் இருக்க வேண்டும் 
வித விதமான மொபைல் வாங்கி பேசி பொழுது போக்க வேண்டும்.

'ஓசி' பைக்கில் ஊரை மேய வேண்டும் 
உருப்பிடியான வேலை செய்யாமல் இருக்க வேண்டும் 
கடன் வாங்கி மினுக்காக வாழ வேண்டும் 
வரவுக்கு மேல் செலவு செய்து சேமிக்காமல் இருக்க வேண்டும் 

கடமைகளைச் செய்யாமல் தப்பிக்க வேண்டும் 
தண்டச் சோறு சாப்பிட்டு உடலை வளர்க்க வேண்டும்.
பிறரிடம் கைநீட்டி அடிமையாக வாழவேண்டும் 
உழைக்க அதிர்ஷ்டம், நல்ல நேரத்திற்கு காத்திருக்க வேண்டும். 

அடுத்தது . . .

வாழ்கையில் (வெற்றி கோட்டை கட்டும் வழிகள்
                

டி.விக்கு அடிமையாகி விடாமல் இருக்க வேண்டும். 
பாடங்களை ஒழுங்காக தினமும் படிக்க வேண்டும்.
நாள் தவறாமல் பள்ளிக்குச் செல்ல வேண்டும்  
கல்லூரிப் பாடங்களை நன்றாக படிக்க வேண்டும்.

சுறுசுறுப்பாக வேலைக்குச் செல்ல வேண்டும் 
சம்பாதிக்கும் பணத்தை குடும்பத்திற்குச் செலவழிக்க வேண்டும் 
புகை பிடிப்பது உடம்பிற்கு பகையாய் கருத வேண்டும்  
'குட்கா'விற்கு 'குட்பை' சொல்ல வேண்டும். 

பணத்தை பலனுடன் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும்  
எப்போதும் தளராமல் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும்.
மூலையில் முடங்காமல் விடா முயற்சி கை கொள்ள வேண்டும் 
பணத்தை வீணாக செலவழிக்காமல் எளிமையாய் இருக்க வேண்டும்.

 

அனைவருக்கும் இரக்கம் காட்டும் தெய்வ குணம் வேண்டும் 
பெண்கள் / ஆண்களிடம் மதிப்பு மரியாதை காட்ட வேண்டும் 
நல்ல செயலில் ஈடுபட்டு நன்மையை தர வேண்டும் 
பிறர்க்கு உதவிகள் செய்து நிம்மதி வாழ்வைத் தரவேண்டும்.

கற்றது கை மண் அளவு என்பதை மறக்காமல் இருக்க வேண்டும் 
வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களை காப்பாற்ற வேண்டும் 
பணத்தை சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழக வேண்டும் 
தேவையானவற்றிற்கு செலவு செய்து குடும்பம் நடத்த வேண்டும். 

சட்டத்தை மதித்து சத்திய வழியில் செயலைச் செய்ய வேண்டும் 
மரியாதை கொடுத்து மானத்துடன் வாழவேண்டும் 
'நாம்' என்று பொது நலமோடு நடந்துகொள்ள வேண்டும் 
மொபைலில் அளவோடு பேசி நேரத்தை மிச்சப் படுத்தவேண்டும்.

   

சம்பாதித்து சொந்தமாக 'பைக்' வாங்கி ஓட்ட வேண்டும்  
வேலையை ஆர்வம்,அக்கறையுடன் செய்ய வேண்டும் 
கடன் வாங்குவது கௌரவ குறைச்சல் என்று எண்ண வேண்டும் 
வரவுக்குள் செலவு செய்து மிச்சத்தை சேமிக்க வேண்டும் 

பலனைப் பாராமல் கடமைகளைத் தவறாது செய்ய வேண்டும் 
வியர்வை சிந்தி உழைத்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் 
பிறர் தயவில்லாமல் சொந்தக்காலில் நிற்க வேண்டும் 
எல்லா நேரமும் அதிர்ஷ்டமான நேரமென்று கருதவேண்டும்.

ஆகையால் வாழ்கையில் கோட்டை கட்டுவது அல்லது கோட்டை விடுவது உங்கள் கையில் இருக்கின்றது.
நன்றி, வணக்கம்.
                         

  

No comments:

Post a Comment