Pages

Tuesday 17 July 2012

இது அழகா ? - விழிப்புணர்வு கவிதை - மதுரை கங்காதரன்

இது அழகா ? - விழிப்புணர்வு கவிதை

மதுரை கங்காதரன் 



மந்திரிக்கு அழகு
ஊழல் செய்தல்

வேட்பாளருக்கு அழகு 
ஓட்டு  வாங்கி ஏமாற்றுதல் 


முதல்வருக்கு அழகு 
பதவியை தக்க வைத்தல் 


பிரதமருக்கு அழகு 
எதையும் கண்டுக்காமல் இருத்தல் 


ஜனாதிபதிக்கு அழகு 
வரிபணத்தை செலவு செய்தல் 


கவர்னருக்கழகு 
பொம்மை யாக இருத்தல் 


அரசு ஊழியனுக்கழகு 
லஞ்சம் வாங்குதல் 


அரசு பதவிக்கழகு 
கருப்பு பணம்  வைத்திருத்தல் 


எம்.எல்.ஏ க்களுக்கழகு 
தொகுதி பக்கம் வராதிருத்தல் 


மக்களுக்கழகு 
ஓட்டு போட்டு ஏமாறுதல் 


ஷேர் மார்கெட்டுக்கழகு
நடுத்தர வர்க்கங்களை ஆண்டியாக்குதல்

ஆன் லைன் வர்த்தகதுக்கழகு
மக்களை அல்லாட வைத்தல்

பத்திரிக்கைக்கழகு
போஸ்ட்மேன் வேலை பார்த்தல்

டி. வி.க்கழகு
மக்களை சோம்பேறியாக்குதல்

சினிமாவுக்கழகு
கனவுலகில் மிதக்கச்செய்தல்

கம்பியுட்டருக்கழகு
மூளையை மழுங்க செய்தல்

மொபைலுக்கழகு
மொக்கை போடுதல்

ஆசிரியருக்கழகு
மாணவர்களை புத்தக புழுவாக்குதல்

காலேஜுக்கழகு
அதிக பீசை கறக்குதல்

பைனாஸ்சுக்கழகு
வாய் ஜாலம் காட்டி பணத்தை பிடுங்குதல்

வங்கிகளுக்கழகு
மக்களை கடனாளியாக்குதல்

அரசுக்கழகு
விலைவாசி உயர்த்துதல்

ஆன்மீகவாதிக்கழகு
மக்களை அடிமையாக்குதல்

மகனுக்கழகு
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தல்.

டாஸ்மாக்குக்கழகு
மக்களை குடிகரனாக்குதல்


       













































No comments:

Post a Comment