அது இப்போது கிடைத்து என்ன?
கிடைக்காவிட்டாலும் என்ன?
WHAT'S USE IF ALL GET BY LATE
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
இருக்கும் போது கிடைக்காத புகழ்
இறந்த பிறகு கிடைத்து என்ன லாபம்?
தீர்ப்பு நேரத்தில் வெளிவராத உண்மை
தண்டனை முடிந்த பிறகு தெரிந்து என்ன பயன்?
வாழ்கின்ற போது கிடைக்காத அமைதி
உயிர் போகும்போது கிடைத்து என்ன செய்ய?
படிக்கின்ற போது கிடைக்காத பாடம்
வேலை தேடி அலையும்போது கிடைத்து என்ன பிரயோசனம் ?
ஆபத்து காலத்தில் உதவாத நட்பும் உறவும்
அது முடிந்த உடன் வந்து சேர்வதால் நன்மை ஏது ?
கண்கள் இருந்தபோது தேடித் பெறாத ஞானம்
கண்கள் குருடான பிறகு வந்தால் எதற்கு பயன்படும்?
குழந்தையாய் இருக்கும்போது காட்டாத அன்பு
பெரியவனாய் வளர்ந்த பிறகு காட்ட மனம் வருமா?
காதலிக்கும் போது சொல்லாத சம்மதம்
திருமணமான பின்னே நினைத்து என்ன பயன்?
மலர்ந்து இருக்கும்போது தலையில் சூடாத பூக்கள்
அது வாடி வதைந்த பின்னர் சூடிக்கொள்வதில் என்ன பயன்?
செல்வம் கிடைத்த போது தேடி வைக்காதவன்
அது செலவழித்த பிறகு அழுவதில் என்ன லாபம்?
இருக்கின்றபோது கிடைக்காத நீதி
இறந்த பின்னே கிடைத்தால் யாரைக் காப்பாற்றும்?
எமாற்றுபவனிடம் கொடுத்த சொத்தும் பணமும்
அவனிடம் இழந்த பிறகு புலம்புவதில் என்ன பயன்?
வாய்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளாதவன்
அது நழுவிய பின்னர் விழிப்படைந்து என்ன பிரயோஜனம்?
ஒருவரின் தாமதம் மற்றவருக்குச் சாதகம்.
மற்றொருவரின் தாமதம் வேறொருவருக்கு பாதகம்.
சாதகமும் பாதகமும் அவரவர் செய்த செயல் படியே
எப்போதும் எல்லோருக்கும் நன்மைதரும் செயலைச் செய்.
உனக்கு என்றும் எப்போதும் சாதகம்.
பாதகம் என்கிற பேச்சே உனக்கு இல்லை.
நன்றி
வணக்கம்.

No comments:
Post a Comment