Pages

Monday 30 July 2012

ரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங் - லாபம் தரும் நல்ல யோசனைகள்

லாபம் தரும் நல்ல தொழில் மற்றும்  யோசனைகள் 

ரெடிமேட் சாப்பாடு மற்றும் கேட்டரிங் தொழில் 



ஏன் இந்த தொழில் முக்கியம் ?:

இன்றைய அவசர இயந்திர உலகில் பலருக்கு இருக்கின்ற 'நேரம்' போதுமான அளவிற்கு இல்லையே என்று புலம்புவதுண்டு. அவர்களுக்கு அவ்வளவு வேலை பளு. சொந்த வேலைகளை செய்வதற்கே சிலர் வேலையாட்களை வைத்துக்கொள்கிறார்கள். இதில் அவர்கள் வீட்டில் நடைபெறும் சிறிய பெரிய வீட்டு விஷேசங்கள் என்று வரும்போது அதை நல்ல முறையில் நடத்த பலர் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். அதாவது வீட்டில் நடக்கும் திருமணம், பிறந்த நாள், சுற்றுலா, பிக்னிக் , பொதுக்கூட்டம் , கோவில் விஷேசம்     போன்ற சுபகாரியங்களை உறவினர்கள், சுற்றத்தார்கள்  மற்றும் நண்பர்களை   அழைத்து அவர்களுக்கு விருந்து படைக்க எண்ணுகிறார்கள். அதுவும் விதவிதமான சாப்பாடு ஸ்பெஷல் கொடுக்க வேண்டும் என்று பிரியபடுகிறார்கள். 

அந்த விருந்திற்கு ஆட்களை அமர்த்தி விருந்திற்கு வேண்டிய சாமான்கள் அனைத்தும் அவர்களே அலைந்து வாங்கி, சமையல்காரர்களை கொண்டு சமைத்து தடங்கலில்லாமல் அனைவருக்கும் பரிமாற வேண்டும் என்பது மிகப்பெரிய வேலை.மேலும் அவர்கள் அவ்வப்போது கேட்கும் சிறுசிறு சாமான்களை வாங்கித்தருவதற்க்கும், அவர்களின் வேலைகளை மேற்ப்பார்வையிடுவதற்க்கும் பொறுப்பாக நடந்துகொள்ளும் சொந்தம் ஓர் நண்பர்களை நியமிக்க வேண்டும். அப்படி நியமிக்கும்போது அவர்களால் விஷேசங்களில் பங்கேடுத்டுகொள்ள முடியாது. இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றன.

எதிர்பார்ப்புகள் என்ன என்ன ?



இந்த மாதிரியான கஷ்டங்களை தவிர்க்க , பலர் குறைந்த செலவில் நிறைந்த சிறந்த தரமான  கேட்டரிங் தொழிலை செய்பவர்களை நாடுகிறார்கள்.அத்துடன் சரியான நேரத்தில் அனைவரும் விரும்பும் ருசி மிக்க விதவிதமான உணவுகளை  தயாரித்து வழங்கும் மிகச்சிறந்த சேவை மற்றும் சுகாதாரமுடன் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்காத படியும்  , விருந்தினை உண்டவர்கள் திரும்ப திரும்ப கேட்டு வாங்கும்படியும் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறனர்.அப்படி தருகிறபட்சத்தில் கண்டிப்பாக விருந்தினை ருசி பார்த்தவர்கள் தங்களுடைய வீட்டு விஷேசத்திற்கு அவர்களையே 'புக்' செய்ய விரும்புவர். அதனால் உங்கள் தொழில் விருத்தியடையும். 

ஆரம்பிக்கும் முறை :



முதலில் சிறிய சிறிய விஷேசங்களுக்கு , சிலரை வைத்து சிறப்பான முறையில் தரமான சுகாதாரத்துடன் தயாரித்து வழங்கவேண்டும். எடுத்தவுடன் மிகப்பெரிய விஷேசங்களை ஒத்துக்கொள்ளக்கூடாது. அதேபோல் வேலை செய்யும் சிறந்த மாஸ்டர்களை எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டிருக்கவேண்டும். கொஞ்சம் கொஞ்சமான உங்களது தரமான சேவையை பார்த்து அவர்களே உங்களுக்கு பெரிய பெரிய விஷேசங்களுக்கு ஆர்டர் கொடுப்பார்கள். இதன் மூலம் உங்கள் தொழில் வளரும் லாபமும் பெருகும்.


*********************************************************************************




இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று           அல்லது 

நன்று                   அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

இதை 

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..


  

No comments:

Post a Comment