நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!
உங்கள் பொருட்களை பணமாக பாருங்கள்!
சிக்கனமும் சேமிப்பும் இரு கண்கள். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டுமென்றால் வீண் ஆடம்பர செலவுகளை கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆடம்பர செலவு என்பது மற்றவர்கள் புகழ்வதற்கும் வெத்து கௌரவத்திற்காகவும் அளவுக்கு மீறி செலவு செய்வது.
பீரோவில் எவ்வளவு இருக்கின்றது ?
உங்களது பீரோவில் எவ்வளவு இருக்கின்றது enஎன்று கேட்டால் பணம்,நகைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வீர்கள். ஆனால் நீங்கள் அடுக்கியிருக்கும் உடைகளின் மதிப்பை பணமாக பாருங்கள். அவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருகின்றோமா என்று ஆச்சர்யப்படுவீர்கள். அதனால் உங்களுக்கோ உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்வளவு தூரம் பயன் கொடுத்திருக்கின்றது. அது விதையா? அது விதைத்தால் பலன் தருமா என்று யோசித்துப்பாருங்கள்.
அதேபோல் நீங்கள் கழிவு செய்யும் பொருட் களையும் கேளிக்கைகளில் செலவுகளை பணமாக பார்க்க ஆரம்பியுங்கள்.
இன்று முதல் நீங்கள் செய்யும் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். மற்றவர்களுக்கும் இந்த விதியின் அருமையை கூறுங்கள். உங்கள் சந்ததியினர் கட்டாயம் ஒரு லட்சாதிபதியோ அல்லது ஒரு கோடீஸ்வரராகவோ இருக்கவேண்டுமென்பதே என் ஆசை.
பகட்டு செலவை குறையுங்கள்!
பணவிதையை விதையுங்கள் !
இனி இன்சூரன்ஸ் பிரிமியம் எப்படி இலகுவாக கட்டுவது என்பது பார்ப்போம்!
அடுத்த பகுதியில்
*****************************************************
தொடரும் ...
********************************************************************************
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com
No comments:
Post a Comment