உள்விதி மனிதன்
சம மனிதக் கொள்கை
சம மனிதக் கொள்கை
உன் மகிழ்ச்சி! என் மகிழ்ச்சி!
YOU AND ME ARE 50:50
பிரியமுள்ள மனிதா! நான் உனக்குள் இருக்கும் உள்விதி மனிதன் பேசுகிறேன். உனக்கு இப்போது மிகப்பெரிய சந்தேகம் வந்திருக்கும். நான் எப்படி உனக்குத் தெரியாமல் உனக்குள் இருக்கமுடியும் என்று? அப்படி ஒன்றும் நான் உன்னுள் இருப்பதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லை என்று அடித்துச் சொல்வது என் காதில் விழுகின்றது. இப்போது அதைப்பற்றித் தெளிவாக உன்னிடம் விளக்குவதற்கு நான் கடமைபட்டிருக்கிறேன். மனிதா! நீ பிறந்த விதம் மற்றவர்களிடம் கேட்டோ அல்லது பார்த்தோ அல்லது படித்தோ தெரிந்து கொண்டிருப்பாய். ஆனால் நீ உருவாகும் விதம், அதில் நடக்கும் அற்புதத்தை இந்த அறிவியல் வளர்ச்சி எல்லோருக்கும் படம் போட்டு காட்டுகின்றது என்று சொன்னால் மிகையாகாது. அதாவது மிக மிக நுட்பமான முறையில் கண்ணுக்குத் தெரியாத சிறிய இரண்டு உயிர்களின் சங்கமம்! கருவாய் உருவாகின்றது. பிறகு படிப்படியாக பத்து மாத வளர்ச்சியினை தேவைப்பட்டால் அல்லது வசதி இருந்தால் அணு அணுவாக நாம் கணினி உதவியால் பார்த்து பரவசபடுகின்றோம். அவ்வாறு தான் மனிதன் உருவாகின்றான் என்பதை உன்னால் மறுக்க முடியாது. அது ஒன்றும் ஒரு பொம்மைபோல எல்லா உறுப்புகள் உள்ள மிகச்சிறிய மனிதனாக இருந்து பெரியதாக உருவாகவில்லை. முதலில் முட்டை, கரு, பிறகு மனிதனின் ஒவ்வொரு அங்கமும் படிப்படியான வளர்ச்சி. இவற்றையெல்லாம் ஓடி ஓடி யார் செய்கிறார்கள். இந்த உள்விதி மனிதனின் ஜீவ ஓட்டம் இரத்த ஓட்டம் தான் உனக்கு உயிர் ஓட்டம் கொடுத்தது. அந்தச் செயலை சரியாக நான் செய்யாமல் வேறு யார் உனக்குள் இருந்து கொண்டு செய்வார்கள்? இந்தப் படைப்பை என்னையன்றி யாராலும் படைக்க இயலாது. இப்போது அல்ல, இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் கழித்தும் என்னுடைய படைப்புக்கு இணையாக ஒரு தூசியளவும் உன்னால் படைக்கமுடியாது.
இனியமனிதா! இப்போது புரிகின்றதா! உனது உயிர் ஓட்டம் எதனால் வந்தது என்று ! நீ முழுவதுமாய் உருவான பிறகு நான் பாதி ! நீ பாதி தான். அதாவது இந்த உலகத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஜீவ ராசிகளையும் உருவத்தில் சரி பாதியாக படைத்திருக்கிறேன். அதாவது வலது பாதி ! இடது பாதி! மேலும் காலங்கள், சூழ்நிலைகள், செயல்கள் போன்றவையும் பாதி, பாதியாக படைத்துள்ளேன். இரவு, பகல், மழை காலம், கோடை காலம், உண்மை, பொய் , நல்லது, கெட்டது இன்னும் பல.
பாசமுள்ள மனிதா! ஒன்று மட்டும் எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்! நீ பூமியில் வருவதற்கு முன்னமே உனக்கென்று உண்ண உணவு, இருக்க இடம், உடுக்கும் உடைக்கு வேண்டிய பொருட்களை படைத்து விட்டு பிறகு தான் உங்கள் அனைவரிடத்தில் உள்விதி மனிதனாக ஆன்ம ஓட்டமாக இருந்து வருகிறேன். அதாவது உனக்கு அரண்மனை போல இடம் இல்லாவிட்டாலும் நீ நன்றாக தங்குமளவிற்கு நல்ல சூழ்நிலைகளைப் படைத்து இருக்கிறேன். உன்னைச் சுற்றிலும் உனக்கு வேண்டியவற்றைத் தாராளமாகவே படைத்திருக்கிறேன். இதைச் சொல்லும்போது உன் மனம் சிரிப்பது தெரிகின்றது அல்லது எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று ஆவேசப் படுவது புரிகின்றது.
அன்பு மனிதா! உனது சந்தேகம் எனக்கு புரிகின்றது! அத்தனைப் படைப்புகளையும் படைத்திருக்கும்போது ஏன் இப்போது ஏற்ற தாழ்வு இருக்கின்றது. அதுவும் ஏற்றம் என்பது சொற்ப விகிதத்திலும். தாழ்வு தான் பெரும் விகிதத்திலும் இருக்கின்றது! ஏன் இந்த பேதமை! என்று உன் மனதில் எழுவது சராசரியானது தான்.
மதிப்புமிக்க மனிதா! நீ பிறக்கும் போதே உனக்குள் ஆற்றலையும், அறிவையும் கொடுத்து, அறிவுரை வழங்கி ஓயாது ஜீவ ஓட்டமாக உன்னுள் ஓடிக்கொண்டிருக்கிறேன். அது போதாதென்று உன் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பலரின் மூலமாகவும் பலவித உருவங்களில் பேச்சாகவோ, செயல்களாகவோ, கணினி மூலமாகவோ, புத்தகங்கள் மூலமாகவோ அவைகளைக் கிடைக்கும்படி செய்திருக்கிறேன். உனக்குள்ளிருந்தபடி உன் பங்கை பத்திரமாக வைத்துக்கொள்ளும்படி எச்சரிக்கையும் செய்து வருகிறேன். அதாவது அறிவை வளர்த்துக் கொள், உனக்குள்ள ஆற்றலை பெருக்கிக் கொள். மாறிக்கொண்டிருக்கும் இந்த உலகத்திற்குத் தகுந்தாற்ப்போல் உன்னை மாற்றிக்கொண்டு இருக்கின்ற உன் பங்கை காப்பற்றிக்கொள் என்று ஓடி ஓடி உன்னிடம் வந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். அவற்றையெல்லாம் அலட்சியமாக நீ எடுத்துக் கொண்டதால் இன்று கஷ்டப்படுகின்றாய்.
இனிய மனிதா! அறிவையும், ஆற்றலையும் அதிகமாக வளர்த்து சரியானபடி சரியான நேரத்தில் அவற்றை உபயோகித்து வருகிறவர்கள எப்போதும் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். அப்படி இருந்தும் அவர்கள் நிம்மதி இழந்து, மகிழ்ச்சி இழந்து துன்பப்பட்டு கொண்டிருப்பதை பார்கிறேன். அவர்களுக்கு நான் துயர் துடைக்கும் சிறந்த ஆலோசகனாக இருக்க வந்திருக்கிறேன். அதுபோல் குறைந்த அளவில் அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்துகிறவர்கள் கொஞ்சம் கஷ்டப் பட்டுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்துகொண்டு மகிழ்ச்சியை தர விரும்புகிறேன். ஒரு சிலர் மற்றவர்களின் ஆற்றலையும், அறிவையும் பெற்றுக்கொண்டு காலத்தைத் தள்ளுகின்றவர்கள். அவர்கள் பெரும்பாலும் சோம்பேறிகளாக இருப்பார்கள். அவர்களுக்கும் எச்சரிக்கை செய்து தங்களது சொந்த காலில் நிற்குமளவிற்கு நான் உதவி செய்யப் போகிறேன். அவர்கள் எல்லோரும் எனது சத்திய வார்த்தைகளை மதிக்காமல், நான் சொல்லிய அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாமல், இந்த நன்மை செய்யும் உள்விதி மனிதனை மறந்துதோ அல்லது என்னை அலட்சியபடுத்தியதன் விளைவாக இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மதிப்புமிக்க மனிதா! நான் உன்னிடத்தில் பேசும் பேச்சு, சொல்லும் ரகசியங்கள் எல்லாவற்றையும் உனக்கு மட்டும் தான் கேட்கும். உனக்காவே சொல்லிவருகிறேன். உனக்கு எந்த வழியைக் காட்டினால் பெரும் நன்மை அடைவாய் என்பதை நன்கு யோசித்து அந்த நன்மை தரும் வழியைக் காட்டி அழைத்துச் செல்கிறேன். நீ உறங்கினாலும், உட்கார்ந்திருந்தாலும், நின்றிருந்தாலும் நான் விழித்துக்கொண்டும், உன்னைச் சுற்றிலும் எனது ஆன்ம ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும். சிலநேரத்தில் அதை பற்றி கவலைபடாமல், நான் சொல்லும்படி நடக்காமல், உன் கண்ணால் காண்பவை அனைத்தும் உண்மை என்று நம்பியும், கேட்பது அனைத்தும் நான் உனக்கு சொல்லியது போலவும், செய்வது அனைத்தும் எனது கட்டளை என்று நினைத்து பலவிதத்தில், பலரிடத்தில் நீ ஏமாறும் போது உன்னோடு சேர்ந்து நானும் வேறுவழி இல்லாமல் ஏமாறுகிறேன். உனக்கு நான் கொடுத்த பங்குகள் (உணவு, உடை மற்றும் இடம்) குறைகின்றது அல்லது கிடைக்கவில்லை என்றால் அதை மற்றவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்று தானே அர்த்தம். அதைப் பற்றி நான் எச்சரிக்கை செய்தும் அதை துச்சமாக மதித்து நீ கஷ்டப்படுகின்றாய். அந்த கஷ்டம் இன்றோடு ஒழிந்தது. இனி நான் இருக்கும்போது அந்த கவலை வேண்டாம்.
இரக்கமுள்ள மனிதா! நான் உனக்குள் உள்விதி மனிதனாக இருப்பதினால் உன் கஷ்டம்! என் கஷ்டம்! உன் சுகம்! எனது சுகம் உன் எண்ணம்! எனது எண்ணம்! உன் செயல் ! எனது செயல்! ஏனென்றால் நீ பாதி ! நான் பாதி! ஒன்று நினைக்கலாம். உள்ளுக்குள் ஓடிக்கொண்டு நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய். நான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டாமல், தட்டிக்கேட்காமல், தண்டனை கொடுக்காமல் ஏன் இருக்கிறாய் ! என்று?
இனிமையான மனிதா! உன் அறிவைவிட என்னறிவு பன்மடங்கு அதிகம். உன் ஆற்றலைவிட என் ஆற்றல் பன்மடங்கு அதிகம். ஆனால் என்னுடைய விருப்பம் எல்லாம் உன்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். நீ தவறு செய்யும்போதெல்லாம் என்னையும் சேர்த்து தவறு செய்யத் தூண்டுகிறாய். தவறு செய்ய வைக்கிறாய். ஆனால் உனக்கு இருக்கும் இரக்கத்தை விடப்பன்மடங்கு இரக்கம் எனக்கு உண்டு. அதனால் நீ செய்யும் தவறுகளுக்கு உடனே தண்டனை தர இயலவில்லை. இந்த இரக்கத்தை நீ உனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு என்னையே ஆட்டிப் படைக்க எண்ணுகிறாய்! நீ என்னை மதிக்காமல் என்னை ஆட்டிப் படைக்க எண்ணினால் உனக்குத்தான் எல்லாவகையிலும் நஷ்டம்.
அன்பு மனிதா! உன்னைச் சுற்றிலும் சிலர் தங்கள் வார்த்தைகளால் உன் மூளையை சலவை செய்து உனது அறிவு, ஆற்றல், செல்வங்களை உறிஞ்சுபவர்களை அடையாளம் கண்டு உனக்கு காட்டுகிறேன். அவர்களிடம் நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் அவர்கள் உனது பலவீனத்தையும், நீ அசரும் நேரத்தையும் பார்த்து, உனக்கு பலவழிகளில் கோபம், பொறாமை, பேராசை போன்ற உணர்வுகளைத் தூண்டி அவர்களின் எண்ணங்களை அல்லது நினைத்ததைச் சாதித்துக் கொள்வார்கள். அந்த மாதிரி சமயத்தில் நீ என்னிடத்தில் கலந்தாலோசித்து என் அனுமதி கேட்டு எதுவும் செய்தால் உனக்கு மிகவும் நன்மை தரும்.
இரக்கமுள்ள மனிதா! உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், கல்வியாளர்கள் போன்றவர்கள் நினைத்தால் நீ கேட்காகமலே அவர்களால் பல உதவிகளை செய்ய இயலும். ஏன்? யாராவது அப்படி செய்கிறார்களா! இன்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பவர்கள் நாளை பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி என்று தானே சம்பாதிக்க துடிக்கிறார்கள். அத்தனை கோடி பணம் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைத்தது? அவர்கள் உழைத்ததாலா! இல்லை, நீ அவர்களிடத்தில் ஏமாந்ததால்! நீ சோம்பேறியாக இருந்ததினால்! நீ தூங்கியிருக்கும் சமயத்தில் அவர்கள் விழித்துக்கொண்டு செயல் பட்டதால்! அவர்கள் எல்லோரும் உன் அறிவை மழுங்கச் செய்து, திசை திருப்பி உன்னை குழியில் தள்ளி புதைக்கவும் துணிபவர்கள்! உன்னைப் போன்றோர்களை ஆண்டியாக்குவதே அவர்களது குறிக்கோள். அவர்களிடம் ஆயுசு முழுவதும் உன்னை அடிமையாக மாற்ற விரும்புவர்கள். என்னையும், உன்னையும் அனாதையாக்குவதே அவர்கள் இலட்சியம். அவர்களிடத்தில் நீ இழந்ததை அல்லது கொடுத்ததை கெஞ்சினாலும், உன் நிலைமையை எடுத்துச் சொன்னாலும் அவர்களிடமிருந்து சல்லிகாசு கூட திரும்ப பெறமுடியாது! அவர்கள் இரக்கப்பட்டு தரவும் மாட்டார்கள்.
இனிய மனிதா! அப்படி திருப்பிக் கேட்டால் அவர்களின் பதில், உன்னை யார் என்னை நம்பச் சொன்னது? நீ ஏமாந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இந்த கஷ்டத்தை நன்றாக அனுபவி ! என்று தான் சொல்வார்கள். இப்படிப்பட்ட வேளையில் நான் சொல்லும் அறிவுரையைக் கேட்டிருந்தால் இந்த நிலை உனக்கு வந்திருக்குமா? எல்லாம் இழந்த பிறகல்லவா என்னைத் தேடுகிறாய்! உதவி செய்யுங்கள் என்று கதறுகிறாய். என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று புலம்புகிறாய்! கண் கெட்ட பிறகு என்னை தேடி அலைகிறாய். உன்பக்கத்தில் உனக்குத் துணையாக இருப்பதைக் கூட கண்டும் காணாமல் இருக்கிறாய்!
அன்பு மனிதா! இதுவரை போனது போகட்டும்! இனி நீ இழந்ததை விட அதிகமாகவே நல்ல முறையில், பெருமை தரும் விதத்தில், எல்லோரும் போற்றும் விதத்தில் உனக்கு நான் மகிழ்ச்சியோடு பெற்றுத்தருகிறேன். நான் உனக்கு கொடுக்கும் பொக்கிஷத்தை மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க நினைத்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன். அதற்கு என்றும் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். ஆனால் அதை தீயசெயலுக்கு பயன்படுத்த விரும்பினால் நான் எனது முழு சக்தியையும் என்னுள்ளேயே வைத்துக்கொண்டு உனக்கு ஒரு துளி கூடத் தராமல் உன்னைவிட்டு முற்றிலும் தள்ளிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். உன்னை அனாதையாக விடவும் தயங்க மாட்டேன்! அதனால் நீ பலவித கஷ்டங்களை அடைந்து அதை அனுபவிக்கநேரிடும். அந்த கஷ்டங்களை என்னையன்றி யாராலும் தீர்க்க முடியாது. நீ என் பேச்சை கேட்காமல் பிறர்க்கு தீங்கு செய்ய உன் சக்தியை உபயோகித்தால் என் ஆக்க சக்தி உனக்கு உதவாது.
இனிய உள்ளம் கொண்ட மனிதா! நீ ஒரு குழந்தை மாதிரி! யார் ஒருவர் சேவை மனப்பான்மையோடு உனக்கு அதிகமாகத் தேவைப்படும் உதவி மற்றும் இரக்கமனப்பான்மையோடு நல்ல ஆரோக்கியமான உணவு, மானம் காக்கும் உடை, சுகாதாரமான இருப்பிடம், மகிழ்ச்சி மற்றும் நிம்மதியான வாழ்வு தருகின்றனரோ அவர்கள் எல்லோரும் என்னைப்போல ஜீவ ஓட்டம், ஆன்ம ஓட்டம் கொண்டவர்கள். நீ உன் கண்களை மூடிக்கொண்டு அவர்களின் பின்னே செல்க. உனக்கு எந்த ஒரு குறையும் வராது. அதற்கு நான் உதவி செய்கிறேன்.
பாசமுள்ள மனிதா! உண்மையான என்னைப்போல ஜீவ ஓட்டம் கொண்டவர்கள், அவர்கள் உண்ணு முன், நீ உணவருந்திவிட்டாயா? என்று சரி பார்த்த பிறகே உண்பார்கள். அவர்கள் உறங்கச் செல்லுமுன் நீ நிம்மதியாக தூங்கிவிட்டாயா? என்று பார்த்த பிறகு தான் அவர்கள் உறங்கச் செல்வார்கள். அவர்களின் வசதியைவிட உனது வசதி பற்றி கவலைபடுவார்கள். அவர்களின் ஆரோக்கியத்தைவிட உனது ஆரோக்கியம் முக்கியமென நினைப்பார்கள். அவர்கள் உனது உழைப்பு மற்றும் நீ தேடிய செல்வங்களை, பணத்தை வீணடிக்க மாட்டார்கள், அபகரிக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பேராசையும், சுயநலமும் துளி கூட இருக்காது. அத்தகைய மனிதர்களை, உயிர் ஓட்டமுடைய ஆன்மாக்களை உனக்கு இனம் காட்டுகிறேன். ஆகையால் எப்போதும் நீ என்னைவிட்டுப் பிரிய நினைக்காதே! உனக்கு வரும் உணர்வுகளை என்னிடத்தில் பகிர்ந்து கொள்.
மதிப்புமிக்க மனிதா! என்னால் உன் மூலம் மற்றவர்களையும் வசப்படுத்த முடியும். ஆனால் உனது நோக்கம் மென்மையாகவும், அவர்களின் நலனில் அக்கறையாகவும், அவர்களின் பொன்னான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு துணை போவதாகவும் இருந்தால் மட்டுமே நீ விரும்பும் மனிதர்களை உன்னுடன் இணைந்து செயலாற்றும் வலிமையையும், சந்தர்ப்பத்தையும் கொடுப்பேன்.
இனிமையான மனிதா! எனது ஆற்றலினால், எனது சக்தியினாலும் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அதை உன் மூலம் மேலும் செம்மையாக்கவே வந்துள்ளேன். எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன். நீயும் நானும் வேறல்ல. உன்னால் என்னை பிரிக்கமுடியாது. ஆனால் நான் நினைத்தால் உன்னைவிட்டு பிரியவும் முடியும். அவைகளெல்லாம் நீ நினைக்கும் நினைவிலும், செய்யும் செயலைப் பொருத்தும், என்னை தூய்மையாகப் பேணுவதைப் பொருத்தும் இருக்கின்றது. என்னை விட்டு பிறரின் கட்டுப்பாட்டில் இருக்க நினைக்காதே! அது உனக்கு ஆபத்தில் முடியும்.
பாசமுள்ள மனிதா! நான் உன்னை கட்டுபடுத்துகிறேன். அதே சமயத்தில் உன் இன்பமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் துணையும் செய்கிறேன். என்னை மதித்து, நம்பினால் உன்வாழ்க்கை செழிக்கும். அதைவிட்டு பிறருடைய தயவில் உன் வாழ்க்கையைத் தள்ள நினைக்காதே. உனக்கு உதவி செய்பவர்களிடம் ஒப்படைத்து உன் மகிழ்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பேன் ! இது உறுதி!
அன்பு மனிதா! இதுவரை போனது போகட்டும்! இனி நீ இழந்ததை விட அதிகமாகவே நல்ல முறையில், பெருமை தரும் விதத்தில், எல்லோரும் போற்றும் விதத்தில் உனக்கு நான் மகிழ்ச்சியோடு பெற்றுத்தருகிறேன். நான் உனக்கு கொடுக்கும் பொக்கிஷத்தை மக்களுக்கும் பகிர்ந்து கொடுக்க நினைத்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன். அதற்கு என்றும் நான் உனக்குப் பக்கபலமாக இருப்பேன். ஆனால் அதை தீயசெயலுக்கு பயன்படுத்த விரும்பினால் நான் எனது முழு சக்தியையும் என்னுள்ளேயே வைத்துக்கொண்டு உனக்கு ஒரு துளி கூடத் தராமல் உன்னைவிட்டு முற்றிலும் தள்ளிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். உன்னை அனாதையாக விடவும் தயங்க மாட்டேன்! அதனால் நீ பலவித கஷ்டங்களை அடைந்து அதை அனுபவிக்கநேரிடும். அந்த கஷ்டங்களை என்னையன்றி யாராலும் தீர்க்க முடியாது. நீ என் பேச்சை கேட்காமல் பிறர்க்கு தீங்கு செய்ய உன் சக்தியை உபயோகித்தால் என் ஆக்க சக்தி உனக்கு உதவாது.
மதிப்புமிக்க மனிதா! என்னால் உன் மூலம் மற்றவர்களையும் வசப்படுத்த முடியும். ஆனால் உனது நோக்கம் மென்மையாகவும், அவர்களின் நலனில் அக்கறையாகவும், அவர்களின் பொன்னான, மகிழ்ச்சியான வாழ்வுக்கு துணை போவதாகவும் இருந்தால் மட்டுமே நீ விரும்பும் மனிதர்களை உன்னுடன் இணைந்து செயலாற்றும் வலிமையையும், சந்தர்ப்பத்தையும் கொடுப்பேன்.
இனிமையான மனிதா! எனது ஆற்றலினால், எனது சக்தியினாலும் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அதை உன் மூலம் மேலும் செம்மையாக்கவே வந்துள்ளேன். எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன். நீயும் நானும் வேறல்ல. உன்னால் என்னை பிரிக்கமுடியாது. ஆனால் நான் நினைத்தால் உன்னைவிட்டு பிரியவும் முடியும். அவைகளெல்லாம் நீ நினைக்கும் நினைவிலும், செய்யும் செயலைப் பொருத்தும், என்னை தூய்மையாகப் பேணுவதைப் பொருத்தும் இருக்கின்றது. என்னை விட்டு பிறரின் கட்டுப்பாட்டில் இருக்க நினைக்காதே! அது உனக்கு ஆபத்தில் முடியும்.
பாசமுள்ள மனிதா! நான் உன்னை கட்டுபடுத்துகிறேன். அதே சமயத்தில் உன் இன்பமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் துணையும் செய்கிறேன். என்னை மதித்து, நம்பினால் உன்வாழ்க்கை செழிக்கும். அதைவிட்டு பிறருடைய தயவில் உன் வாழ்க்கையைத் தள்ள நினைக்காதே. உனக்கு உதவி செய்பவர்களிடம் ஒப்படைத்து உன் மகிழ்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பேன் ! இது உறுதி!
நல்லதை நினை!
நல்லதை செய்!
என் மூலம் அதிக நன்மை பெறுவாய்!
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் /
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
Good.
ReplyDelete