Pages

Wednesday 14 August 2013

2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்!

2013 வருட இறுதியில் டாலருக்கு ரூ 65 ஆக குறையும் அபாயம்!

விழிப்புணர்வு கட்டுரை 
மதுரை கங்காதரன் 
கடந்த மூன்று வருடங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு என்றைக்குமில்லாத அளவுக்கு குறைந்து வருகின்றது. இன்று (9.8.13) ல் டாலர் ஒன்றிக்கு ரூ 61 க்கும் ரூ 62 க்கும் ஊசல்லாடிக்கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் ரூபாயின் மதிப்பு உயர்வதற்காக பலவித நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டு வருகின்றது இன்று மேடைகளில் முழங்கியும், மீடியாக்களில் பேட்டியும் பல அரசியல் தலைவர்கள் தருகின்றனர். இதில் கூத்து என்னவென்றால் ஒவ்வொரு முறை அவர்கள் இந்த மாதிரி பேசுகின்றபோது ரூபாயின் மதிப்பு சல்லென்று குறைந்து விடுகின்றது. இதோ கடந்த ஐந்து வருட புள்ளிவிவரம்..

ஜனவரி  2009  - ரூ 43 (ஒரு டாலருக்கு)

ஜனவரி  2010  - ரூ 45 (ஒரு டாலருக்கு)

ஜனவரி  2011  - ரூ 46 (ஒரு டாலருக்கு)

ஜனவரி  2012  - ரூ 52 (ஒரு டாலருக்கு)

ஜனவரி  2013  - ரூ 55 (ஒரு டாலருக்கு)

ஆகஸ்ட் 2013  - ரூ 61 (ஒரு டாலருக்கு) ***** இப்படியே போனால் 


ஜனவரி 2020  - ரூ 100 (ஒரு டாலருக்கு)


அதாவது இதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும்! அதோ ரூபாயின் மதிப்பு உயர்ந்துவிடும் ! என்று போக்கு காட்டி வருகின்றார்கள் ஒழிய உண்மையில் ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு தான் வருகின்றது. அவர்களின் பேச்சு பொய் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டும், மக்களை ஏமாற்றிக்கொண்டும் வருகின்றனர். இதற்கு காரணம் அவர்களிடத்தில் ரூபாயின் மதிப்பு உயர்த்துவதற்கு எந்தவிதமான திட்டமோ அதை செய்து முடிக்கும் செயலோ இல்லை. அதனால் எல்லா பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி நிற்கின்றது.


ரூபாயின் மதிப்பு குறைய குறைய உள்நாட்டு தொழில் நசிந்துகொண்டிருக்கின்றது என்றே பொருள் கொள்ளவேண்டும். இந்த இறக்குமதி மூலம் இந்திய நாட்டில் புதிய புதிய கோடீஸ்வரர்கள் உருவாகிக்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே உள்ள கோடீஸ்வரர்கள் உலக பணக்காரர்களாக உயர்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அரசு நடவடிக்கை எடுக்கும்போது டக் டக் கென்று ரூ 5 குறைந்து சில மாதங்களில் குறைந்து விடுகின்றது. அதன் உண்மை காரணம் ஆராய்ந்து தெரிந்துகொள்ளுவதற்கு  முன் மீண்டும் அடுத்த குறைவு வந்துவிடுகின்றது. இதைப் பார்க்கும்போது ரூபாயின் உண்மை நிலையும் அதன் மதிப்பும் போலியாக கணகிடுகிறார்களோ என்று கருதத் தோன்றுகின்றது. ஏனெனில் உண்மையாக கணக்கு எப்படி கிடைகின்றது? காட்டும் கணக்குகள் எப்படிப்பட்டது என்று அனவருக்கும் தெரிந்ததே. சிலர் லோன் வாங்கும்போது அதிக லாபம் காட்டுவதும், பணம் கொடுக்கும்போது நஷ்டம் காட்டுகிறார்களோ என்கிற சந்தேகம் வருகின்றது. மேலும் உலகளவில் நஷ்டம் அடைந்த பல நிறுவனங்களில் முதலீடும், வியாபார காண்டிராக்ட்ம், வியாபார பங்களிப்பும் ஏன் வைத்துவருகிறார்கள் என்று புரியாத புதிராக இருக்கின்றது.   


அப்படி ரூபாயின் மதிப்பு உயர்த்த வேண்டுமென்றால் அரசு  உள்நாட்டு தொழில் பெருக்க முனைப்பு வேண்டும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நிஜத்தில் அன்னிய முதலீடு ஊக்குவிப்பால் தொழில்கள் பல நசிந்து விட்டன. விவசாயம் இன்னும் மோசமடைந்து வருகின்றன. ஜனத்தொகை அதிகமாகின்ற காரணம் மற்றும் தொழில் பாதிப்பினால்  பெட்ரோல், எண்ணெய், பருப்பு, தானியம், தங்கம் போன்றவைகள நாம் இறக்குமதி செய்தே தீரவேண்டுமென்ற கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம் உள்நாட்டில் தொழில் உற்பத்தி செய்து கிடைக்கும் லாபம் விட இறக்குமதி செய்யும்போது கிடைக்கும் லாபம் மிக மிக அதிகம். மேலும் யார் வேண்டுமானாலும் இறக்குமதி செய்யலாம் என்கிற சட்டம் இருக்கும்போது பணமுதலைகள் பல பொருட்களை இறக்குமதி செய்து பதுக்கி பிறகு கிராக்கி ஏற்படும் போது அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாத்தித்து வருகின்றனர்.


நாம் விவசாயப் பொருட்கள் உற்பத்தி செய்தால் விலைவாசியை வெகுவாக குறைக்கலாம். ஆனால் அதற்கான திட்டமோ செயல்பாடோ கொஞ்சம் கூட இல்லை. தொழில் ஊக்கிவிப்பு, விவசாயக் கடன் எல்லாமே பெயரளவில் தான் இருக்கின்றது. 'பட்ஜெட்' போடும்போது வரிகளை உயர்த்துகிறார்கள். ஆனால் அவ்வரிகள் யாருமே சரியாக செலுத்துவதாகத் தெரியவில்லை. யார் வரி செலுத்தியவர்கள் யார் செலுத்தாதவர்கள் ? என்கிற விவரம் தெரியாமலே இருக்கின்றது. கிடைக்கும் தகவல்கள் , காட்டும் புள்ளிவிவரம் எல்லாமே பொய் போலத் தோன்றுகின்றது. பல திட்டங்கள், கொள்கைகள் திடீர் திடீரென்று மாற்றுகிறார்கள்.ஆனால் சிறிது கூட அதில் பலனில்லை. உதாரணமாக தங்கம் இறக்குமதி தவிர்த்தால் ரூபாயின் மதிப்பு உயரும் என்று வரியை உயர்த்தினார்கள். ஆனால் உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை. அதோடில்லாமல் தேசிய நதிநீர் இணைப்பு கொஞ்சம் கூட சாத்தியமே இல்லாமல் இருக்கின்றது. அதனால் வடக்கே வெள்ளமும் தெற்கில் வறட்சியும் மாறி மாறி வருகின்றது. வெள்ளநீர் வீணாக கடலில் கலப்பதால் நிலத்தடிநீர் உயராமல் குறைந்துகொண்டு வருகின்றது.



மேலும் பங்கு சந்தை கேலிகூத்தாக மாறிவிட்டது. அதாவது சென்செக்ஸ் புள்ளி முக்கிய 30 நிறுவனத்தின் பங்கு மதிப்பு தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கலாம். அப்படியென்றால் அதைத் தவிர ஆயிரகணக்கான நிறுவனத்தின் உண்மை மதிப்பு இலைமறை காய்மறையாக இருக்கின்றது. ஆகவே சென்செக்ஸ் புள்ளி 18000 முதல் 20000 வரை அவர்களே மக்களை இழுப்பதற்கு கூட்டி குறைத்து வருகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது.


மியுசுவல் பண்டு என்று படு பில்டப் செய்து இருக்கின்ற இடம் தெரியாமல் செய்துவிட்டார்கள். அதில் முதலீடு செய்தவர்கள் அம்போ தான்.. அதேபோல் தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்தவர்கள், ரியல் எஸ்டேட் தொழில்கள் இப்போது போலியான கவர்ச்சியோடு வலம் வந்து கொண்டிருக்கின்றது. எப்போது மக்களை பலிகொள்ளும் என்று தெரியவில்லை.  


மொத்தத்தில் ஏமாளிகள்  கிடைக்கின்றவரை சுருட்டுவதும், இளித்தவாயர்கள் ஓட்டு இருகின்றவரை அனுபவித்தும் காலம் தள்ளுவதே அரசியல் ஆகிவிட்டது. இதில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளிடத்தில் முன்னேற்றம் என்பது சந்தேகமே!  


ஆகவே இந்த சுனாமி அலையில் விழித்துக்கொண்டால் பிழைக்கலாம்! இல்லையேல் அதில் சிக்கி தவிக்கவேன்டியாது  தான்...

இனி ஏற்றம் இறக்கம் எல்லாமே அரசியல் தலைவர்களின் கைகளில் இருக்கின்றது. ரூபாயின் மதிப்பு உயரவேண்டுமென்றால் நல்ல உயர்ந்த நோக்கமுள்ள தலைவர்களை இனியாவது தேர்ந்தெடுத்து நாட்டை பலப்படுத்த முயற்சி செய்வோம். 

நன்றி 
வணக்கம்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

No comments:

Post a Comment